Articles Posted in the " கவிதைகள் " Category

 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      யார் நீ? ஓர் அதி அழகிய பசும் இலை அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _ அத்தனை இனிமையான பாடல் அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _ பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _ கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில் கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _ சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே நேர்மேலே […]


 • நம்பலாமா?

  நம்பலாமா?

    அமீதாம்மாள்   மருத்துவ உலகின் மாமன்னன் அவர் ஆராய்ச்சிக்காகவே ஆயுளைத் தந்தவர் உலகெங்கும் வாழ்ந்தாலும் ஜெர்மனியில் வசிக்கிறார் அங்குதான் வசிக்கிறார் என்னுடைய மகளும்            எனக்கும் ஒரு முடக்கு நோய்   ஊடு கதிர் ஊடாக் கதிர் ஒளிக்கதிர் ஒலிக்கதிர் ஆய்வுக் கணைகள் அக்னிப் பிரவேசங்கள் என்று ஏராள சோதனைகள்-ஆனாலும் நோய் நோயாகவே   அத்தனை ஆய்வையும் மகளுக்கு அனுப்பினேன் அந்த மருத்துவரிடம் காட்ட   ஆறேழு நாட்கள் அத்தனையும் ஆராய்ந்தார் நோயின் ஆணிவேரை […]


 • கதவு திறந்திருந்தும் …

  கதவு திறந்திருந்தும் …

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை   பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான்   இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில் தன்னை நிரப்பிப் பார்த்தான் எங்கும் நிலைக்க முடியவில்லை   அவன் மனத்தில்  சில எழுத்துகள் இருக்கின்றன அவை சொற்களாவதில்லை    சில சொற்கள் இருக்கின்றன அவை வாக்கியங்களாவதில்லை   சில வாக்கியங்கள் இருந்தும் அவை கவிதையாவதில்லை   அவன் கோப்பையில் நிரம்பி […]


 • மறந்து விடச்சொல்கிறார்கள்

  மறந்து விடச்சொல்கிறார்கள்

  பா.உதயன் உங்கள் வீட்டுப்பெண்களுக்குமார்புகள்வெட்டப்படவில்லை உங்கள் பிள்ளைகள்எவரும்தொலைந்து போகவில்லை உங்கள் பிள்ளைகளைஎவரும் வல்லுறவுசெய்யவில்லை உங்கள்சொத்து சுகங்கள்எதையும்நீங்கள்இழக்கவில்லை பசி பட்டினியால்நீங்கள்எவரும் இறக்கவில்லை இழந்ததுஎல்லாம்நாங்கள் மட்டுமே ஒரு பொல் பொட்டையோஒரு ஹிட்லரையேஒரு ஸ்டாலினையோஒரு முசோலினியையோஅந்த மக்களைமறக்கச் சொல்லுங்கள்நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன் Oslo Norway


 • என் அடையாள அட்டைகளைக் காணவில்லை

          ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   இரண்டு மூன்று வீடுகள் இரண்டு மூன்று அலுவலகங்கள் இரண்டு மூன்று ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டர் பொடிநடை இரண்டு மூன்று கடைகள் இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள் இரண்டு மூன்று மணிநேரங்கள் இவற்றிலெங்கோ எதிலோ என் அடையாள அட்டைகள் பறிபோயிருந்தன. நான் இப்போது நானே நானா யாரோ தானா…. விடுதலையுணர்வும் ஏதிலி உணர்வும் பாதிப்பாதியாய்….. இன்னும் சில நாட்கள் அலையவேண்டும் இன்னும் சில வரிசைகளில் நகர வேண்டும் இன்னும் […]


 • உறக்கம் துரத்தும் கவிதை

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     விழுங்கக் காத்திருக்கும் கடலாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம். யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _ அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே காதலியைத் துரத்தும் சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட… ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது. உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு எப்படிப் பறப்பது..? உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது…. எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும். தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து வெளியேறும் வழியறியா ஏக்கம் தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம் தன்னைக் கவ்வப் […]


 • மாயவரம் பாட்டி

  மாயவரம் பாட்டி

                          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    அந்தப் பாட்டியின் மனக்காயங்கள் இப்போது ரணமாகிவிட்டன   புலம்பல்களில்  தத்தளித்துக் கொண்டிருக்க ஆறுதல் திசை தேடி அலைகிறது   ” ரெண்டு காலும் போச்சு … ரெண்டு கையும் போச்சு … ரெண்டு கண்ணும் போச்சு … ”  என்ற ஆதங்கம் பேரன் ரவி திலகனுக்கு பெரிய காமெடி ஆகிவிட்டது   பாட்டியைப் போல் பேசி […]


 • கண்காட்சிப்புத்தகங்கள்

  கண்காட்சிப்புத்தகங்கள்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)       புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா…. முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா…….   முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய் சில பக்கங்கள் படிப்பவர்கள் _ மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _ எல்லோரும் வாசகர்கள் தானே என்றெண்ணி அமைதிகொள்ளுமோ புத்தகங்கள்….   சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் தேரனைய காரில் சாய்ந்து தன்னை கோடீஸ்வரனாகக் காண்போர், காண்பிப்போர் எங்கும் உண்டுதானே? இருள்நிழல் படர்ந்த ஒதுக்குப்புறத்திற்காகவே கோயிலுக்குச் செல்லும் காதலர்களைப்போல எந்தக் […]


 • மாசில்லாத மெய்

  மாசில்லாத மெய்

  லதா ராமச்சந்திரன்    எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம்  புலம்பல் விடுத்து புன்னகை தவழ  புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை எங்கே? இக்கணத்தில் இன்பம் எங்கே? துன்பத்தில் யாரை மட்டும் சார்ந்ததுன் வாழ்க்கை? உன்னை யாரின் அன்பு உனை நிரப்பும்?  யாரின் அன்பு என்றுமே பொய்க்காது? உன் மீதிருக்கும் உனதன்பு   உன் மதிப்பு யாருக்குத் தெரிந்தால் […]


 • பாதி உயரத்தில் பறக்குது கொடி !

  பாதி உயரத்தில் பறக்குது கொடி !

          சி. ஜெயபாரதன், கனடா     தெய்வீகத் திருக்குரல் பைபிள் மீது கைவைத்துப் படையினர்,  துப்பாக்கி  தூக்குவர் தோள்மேல் ! அணிவகுக்கும் அறப்படை முன்னால், பறக்குது கொடி   பாதி உயரத்தில் பாரீர் !   வியட்நாம் மீது  வீணாய் அமெரிக்கா  போர் தொடுத்த அன்று முதல் ! அதன் பிறகு கொடி ஏற வில்லை ! இறங்க வில்லை ! உறங்குது நிரந்தரமாய் !  அடுத்த போர்க்களம்  ஈராக்கு, சிரியா, நடுமை ஆசியா !  குடியரசு எல்லாம் கூனிக் கூர்மை மழுங்கி தடி அரசாய்  இடி நகை புரியும் கலியுகம் ! […]