அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
குஸ்ரோ தரியா பிரேம் கா உல்டி வா கி தார்
ஓ குஸ்ரோ.. காதல் எனும் நதியே
அதிசயமான உன்னில்
தாவியவர் மூழ்கிப் போனார்
மூழ்கியவர் கடந்து சென்றார்
- அமீர் குஸ்ரு
நபீல், தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்
இன்று காலையில் இருந்து நான், எனது ரூபாப்பில் இசைத்துக் கொண்டுதான் இருந்தேன் என்றாலும், ஏனோ எனது மனம் இசைக்குள் ஆழ்ந்து செல்ல மறுத்தது. காரணம் குல்பாரி.
இன்று, குல்பாரி, இன்னும், இந்த வீட்டிற்குள் வந்து சேரவில்லை. ஆனால், எப்போதும் இல்லாமல், இன்று அவள் வருகையை நோக்கி, எனது மனம் தவியாய்த் தவித்தது. வழக்கமாக காலையிலேயே வீட்டிற்கு வந்து, வெளிவாசலைப் பெருக்க ஆரம்பித்து விடுவாள்.
ஆனால், அவள் இன்று இன்னும் வந்து சேராதது, எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது. ‘நேற்று நான் அவளை காமத்துடன் கட்டி அணைத்தது குல்பாரிக்குப் பிடிக்கவில்லையோ? அப்படியொன்றும் எனக்குத் தெரியவில்லையே? இப்போது எனக்கு சிரிப்பு வந்தது
ஆனால், அவள் நேற்று சொன்ன அந்த வார்த்தை எனக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவளது அந்த வார்த்தை என்னை இப்போது கோபப்படவும் செய்தது. “அப்படியென்றால் நீ ஆண்மகன் இல்லையா” என்று அவள் கேட்ட கேள்வி என்னை வேதனைப்படவும் வைத்தது. நான் எனது மனதுக்குள்ளேயே குமுறினேன்.
ஒரு சிறுவன் பச்சா பாசி ஆக்கப்படுவது என்பது, அவன் விரும்பி நடப்பதல்லவே. ஆணாதிக்க சமூகம்தானே என் போன்ற சிறுவர்கள் உடல் மீது ஆசைப்படுகிறது?
ஒரு ஆண் மீது ஆசைப்படுகிறவர் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்றால், என் போன்ற பச்சா பாசி சிறுவர்கள் மீது ஆசைப்படும் முதலாளி வர்க்க ஆண்களை நோக்கி அல்லவா “நீ ஒரு ஆண் மகன் இல்லையா?” என்று குல்பாரி போன்ற பெண்கள் கேள்வி கேட்கவேண்டும்?
என் போன்ற பச்சா பாசி சிறுவர்களைப் புணரும் எந்த ஒரு முதலாளி ஆண்மகனாவது, அவன் புணரும் அந்த தருணத்தில், அந்த பச்சா பாசி சிறுவனின் ஆண்குறி, உணர்ச்சியில் எழுந்திருக்கிறதா என்பதை எப்போதாவது கவனித்து இருக்கிறானா?
அப்படி இருக்க, எல்லா குழந்தைகள் போலவே, ஆணாகப் பிறக்கும் ஒரு பச்சா பாசி சிறுவன் மட்டும், இன்னொரு முதலாளி ஆண்வர்க்கத்தின், உடலுறவுக்குக் கட்டுப்படுவதால், எப்படி பெண்ணாக மட்டுமே அறியப்படுகிறான்?
பச்சா பாசியோடு உடலுறவு கொள்ளும் எல்லா ஆண்களுமே, அந்த பச்சா பாசி சிறுவனைப் பார்த்து, “என்னோடு உடலுறவு கொளவதில் உனக்கு சந்தோசம் இருக்கிறதா சிறுவனே?” என்று எப்போதும் கேட்கிறானா? இல்லையே.
ஆனால், அப்படியே கேட்டாலும், அடுத்த வேளை சோற்றுக்கு, அந்த உடலுறவு கொள்ளும் முதலாளியையே நம்பி இருக்கும் அந்த பச்சாபாசிச் சிறுவன், வேறு என்ன பதில் சொல்வான்? “எனக்கும் பிடித்து இருக்கிறது முதலாளி” என்றுதானே சொல்வான்?
எனக்குள் ரொம்ப நாளாகவே ஒரு கேள்வி? உடலை விற்றுக் காசு பண்ணும் எல்லா பெண் விபச்சாரிகளுமே, தத்தம் உள்ளத்தை விற்பதில்லையே? தனக்குப் பிடிக்காமலேயே, மரக்கட்டைகள் போல படுத்து, செக்ஸ் தொழில் செய்யும் பெண்கள் குறித்து, நாம் புத்தகத்தில் படிக்கிறோமே? அப்படித்தானே ஒரு விபரம் தெரிந்த பச்சா பாசியும் நடந்து கொள்வான்?
உடலுறவு வியாபாரத்தில், தனக்குக் காசு தந்து கவனிப்பவனின், உடல் தாகத்தைத் தணித்து, பின்னர் தனது உடலின், உள்ளத்தின் பசி தீர்க்க இன்னொரு பெண்ணை அந்த பச்சாபாசி ஆண் நாடுவதை, ஏன் இந்தப் பாழாய்ப் போன சமூகம் கேலி செய்கிறது?
என்னை இன்னும் ஒரு சிறுவனாகவே குல்பாரி நினைக்கிறாளோ என்று எனக்கு சந்தேகம் வந்தது. நான், அவளைப் போலவே வளர்ந்த, இருபத்தி இரண்டு வயது வாலிபன் அல்லவா?
ஒரு வேலைக்காரியான குல்பாரி, இவ்வளவு யோசித்து யோசித்துப் பேசுகிறாள். அதற்குக் காரணம், முதலாளியம்மா அவளுக்கு போதித்த கல்வி, மற்றும் அவள் சார்ந்த மற்ற பெண்களிடம், இவள் பெற்ற அனுபவக் கல்வி.
எனக்கும்தானே முதலாளி நிறையக் கற்றுக்கொடுத்து இருக்கிறார்? அவர் படிக்கும் அத்தனை புத்தகங்களையும், அவர் இல்லாத தருணத்தில், நானும்தானே படிக்கிறேன்? ஆண் பெண் என்பது குறித்து அந்தப் புத்தகங்கள் என்ன சொல்கின்றன?
மனிதன் தோன்றி, ஒரு வேட்டையாடும் சமூகமாக வளர்ந்த காலங்களில், வாழ்ந்த பல சமூகங்களில், ஆண் குறியை வைத்தோ, பெண் குறியை வைத்தோ, ஒரு குழந்தை ஆண் என்றோ பெண் என்றோ தீர்மானிக்கப் படவில்லை. மாறாய் அந்தக் குழந்தைகள் வளர்ந்து, பருவமடைந்து, பின்னர் அவர்கள் எந்தப் பாலுணர்வுடன் நடந்து கொள்கிறார்களோ, அதற்கேற்பவே அவர் ஆண் என்றோ பெண் என்றோ தீர்மானிக்கப்பட்டார்.
ஓரோன் என்ற ஆண், மக்குரனை என்ற பெண், கழலை என்ற, ஆணைப் போல நடந்து கொள்ளும் பெண், கலபை என்ற, பெண்ணைப் போல நடந்து கொள்ளும் ஆண், பிசு என்ற, ஆண்குறியும், பெண்குறியும் சேர்ந்து பிறக்கும் உயிர் என்ற இந்த ஐந்து வகை பாலின மனிதர்களும் சேர்ந்து வாழ்வது என்பது,இந்தோனேசியாவில் இன்றளவும் நடக்கிறதே
ஆனால், வளர்ந்த மதங்கள் தோன்றிய காலங்களில்தான், ஆண்குறிக்கும், பெண்குறிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம், இனப்பெருக்கத்தின் அவசியத்தை மதங்கள் உணர்ந்து இருந்தன. எனவே, இனப்பெருக்கம் தராத எல்லா உடலுறவுகளையும், அவை கண்டிக்கச் செய்தன.
அறிவியல் புத்தகங்கள் என்ன சொல்கிறது?
உடம்பில் இருக்கும் மரபணுக்களே ஒருவரது பாலுணர்வின் போக்கைத் தீர்மானிப்பதாகவே அறிவியல் சொல்கிறது. நான் பச்சாபாசியாகவே இருந்த போதும் எனது பாலுணர்வு மரபணு, என்னை ஆண் என்றே சொல்கிறது. எனக்கு பெண்ணின் மீதே காம உணர்வுகள் பெருக்கெடுக்கிறது.
சில பச்சாபாசிகள், முதலாளித்துவ வர்க்க ஆண்களின் உடலுறவை விரும்பியே வாழ்கிறார்கள். அவர்களது பாலுணர்வு மரபணுவில் பெண்மை இருக்கலாம். அவர்கள் திருநங்கை ஆக இருக்கலாம்.
சில முதலாளிமார்கள், ஒரு சிறுவன் பெரியவன் ஆகிறபோது, அவனுக்குள் எந்தவிதப் பெண்மை இல்லை என்று தெரிந்து கொண்டபோதும் கூட, அந்த பச்சாபாசி ஆணை கடைசிவரை, கூடவே தங்கள் ஆசைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.
அவனை மேலே படுக்கவைத்து, தாங்கள் கீழே படுத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட முதலாளிமார்கள் பாலுணர்வு மரபணுவில் பெண்மை இருக்கலாம். அந்த முதலாளிகள், திருநங்கை ஆக இருக்கலாம்.
இப்படி விதவிதமாக வெளிப்படும் வேறுபட்ட பாலுணர்வுகளை மதங்கள் மதிப்பது இல்லை என்பதே குறை.
ஆனால் என்னைப் பொறுத்த வரை நான் ஒரு ஆண். இதையேன் குல்பாரி உணர்ந்து கொள்ள மறுக்கிறாள்?
இன்று அவள் வீட்டிற்கு வந்த பின்னர், என் உள்ளக்கிடக்கைகளை அவளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அவளைக் கட்டி அணைக்க வேண்டும். முத்தம் கொடுக்கவேண்டும்.
“உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்று சொல்லவேண்டும். “நாம் இருவரும் புதுவாழ்க்கை தொடங்க வேண்டும்” என்று அவளிடம் சொல்லவேண்டும்.
அவள் மெல்லிடையை எனது அதரங்களால் வருடி, அவளது மார்பகங்களை எனது கரத்தில் ஏந்தி… இப்போது, குரங்கு மரத்தில் ஏறும் வேகத்தில், எனது காமம், எனது தலைக்கு’ ஏறியது. குல்பாரி எங்கே எங்கே என்று என் மனம் ஏக்கத்தில் தவிக்க ஆரம்பித்தது.
ஆனால், அந்தியும் சாய்ந்துவிட்டது. அவள் வரவேயில்லை. மாறாய், அந்த சாயந்திர வேளையில், முதலாளிதான் வீடு வந்து சேர்ந்தார்.
நீண்ட நெடிய உருவம். அகலமான மார்பு. அளவான, ஆனால் முறுக்கி விடப்பட்ட மீசை. வெளிநாட்டு நறுமணம் மணக்கும் அவரது உடை. கூடவே, அவர் ஒரு’ கையில், எனக்குப் பெயர் தெரியாத ஆனால் ஒரு உயர்ரக மதுப்போத்தல். அவர் இன்னொரு கையில், ஒரு உயர்ரக சுருட்டு. புகைத்துக்கொண்டே உள்ளே வந்தார் முதலாளி.
முதலாளி, எப்போதும் என்னைத் தனிமையில் சந்தித்தால், முதலில் செய்யும் செயல், அவரது எல்லா ஆடைகளையும் அவிழ்த்து விடுவதுதான். சில நேரங்களில் மட்டும்தான் சிறிய கால் சராயுடன் இருப்பார்.
இன்றும் அவர், குளித்து முடித்து கால் சராய்க்கு மாறினார், கிட்டத்தட்ட நிர்வாணமான அவரது உடல், கமகம என வாசனை திரவியங்களால் மணத்தது.
முதலாளி, என் முகத்தை ஆசையுடன் பார்த்தார்.
என் நினைவுகளோ, குல்பாரியின் மீதான காம நினைவுகளில் இருந்து, இன்னும் மீளவேயில்லை.
குமாரி குல்பாரி, தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்
இன்று காலையில் இருந்தே எனக்கு எந்த வேலைகளையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. குழப்பத்திற்கு மேலான குழப்பங்கள்.
நேற்றும் கூட, அந்த பச்சாபாசி என்னை இறுக்க அணைத்து எனது இடையை அவன் கைகளால் பிடித்தபோது, நான் உண்மையில் அதிர்ந்து போனேன். அப்போதில் இருந்தே எனது மனநிலை ஒரு நிலையில் இல்லை.
நேற்று நான், கஷ்டப்பட்டு செய்ய ஆரம்பித்த அந்த மண்டுக் கொழுக்கட்டையைக் கூட, என்னால் ஒழுங்காக செய்து முடிக்கமுடியவில்லை. ஏனோ தானோவென்று செய்து முடித்துத்தான், அவன் முன்னால், தட்டில் வைத்தேன்.
ஆனால் அதிசயம், அந்த மண்டுக் கொழுக்கட்டைகளை, அவன் சுவைத்து சுவைத்து சாப்பிட்டான். ஒவ்வொரு கொழுக்கட்டையையும், அவன் எடுத்து சுவைப்பதையும், அப்படி சுவைக்கும் போதெல்லாம், என் பக்கம் பார்த்துக் கொண்டே சுவைப்பதையும் பார்த்து, எனக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது.
“இந்தா பச்சாபாசிப் பையா… நீ ரசித்து ருசிச்சது போதும்.. சீக்கிரம் தட்டைக் கொடு.. கழுவி வைத்துவிட்டு, நான் முதலாளியம்மா வீட்டுக்குப் போகணும்”
நான் சொன்ன வார்த்தைகள், அவனை மறுபடியும் புண்படுத்தி இருக்கவேண்டும். “உர்” என்று, குரங்கு போல் முகத்தை வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
ஆனால், கொஞ்சநேரத்தில், ஒரு சின்ன கொழுக்கட்டைத் துகளைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டான். அவன் சாப்பிட்ட தட்டு, யாரோ நக்கியது போல, அவ்வளவு சுத்தம்.
இவன் உணவு மீதான பைத்தியமா இல்லை எனது மீதான பைத்தியமா? அப்படி நினைத்த போதே எனக்குள் ஒரு சிரிப்பு வந்தது. ஆனால், எனது உணர்ச்சிகள் எதையும் அவனிடம் காட்டாமல், நான் தட்டைக் கழுவ, சமையல் அறைக்குள் சென்றேன்.
வீடு எல்லாம் சுத்தம் செய்துவிட்டேன். ஆனால் எனது மனதில் மட்டும் ஒரு பெரிய குழப்பச்சுமையோடு முதலாளியம்மா வீடு வந்து சேர்ந்தேன்.
வந்ததில் இருந்தே மனம் பாரமாகவே இருந்தது.
முதலாளியம்மாவிற்கும் அதே குழப்பமான நிலைதான் போலும். வழக்கத்திற்கு மாறாக, ஏதோ ஒரு பாட்டை கிராமபோனில் கேட்டாள். பின் அதை நிறுத்திவிட்டு உள்ளே போனாள்.
அப்புறம் ஏதோ மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதினாள். அதை அந்த வேலைக்காரன் அண்ணன் நாசரிடம் கொடுத்துவிட்டாள். அப்புறம் தூங்கப் போனாள். இதோ, இந்த மாலைவேளையில் எழுந்து வந்து விட்டாள்.
வந்தவள், என்னைப் பார்த்தவுடன், நேரே என்னிடமே வந்து நின்றாள். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.
நான் மண்டியிட்டு அரிசி புடைத்துக் கொண்டு இருந்தேன். எனது அருகே வந்த அவள், பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு என்னையே பார்த்தாள்.
“உனக்கு அந்த நபீலைப் பிடித்து இருக்கிறதா?”. முதலாளியம்மா ஒரு தோழி போல, என்னிடம் கேள்வி கேட்ட விதம், எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் அவளிடம், தைரியமாகப் பேசத் தொடங்கினேன்.
“அவன் என் மீது காட்டும் அதீத அன்பு எனக்குப் பிடித்து இருக்கிறது அம்மா. ஆனால், அவனோ ஒரு பச்சா பாசிப் பையன் ஆக இருக்கிறானே?”
நான் இப்படிப் பேசியவுடன், அவள் களுக் என்று சிரித்து விட்டாள். அப்புறம் என்னை நேராகப் பார்த்தவாறே பேசினாள்.
“குல்பாரி.. நேற்று அவன் உன்னைக் கட்டிப்பிடித்த விதத்தில், அவன் ஒரு ஆணாகத்தானே தெரிகிறான்?” அவள் வெகுளியாகவே என்னிடம் கேள்வி கேட்டாள்? ஆனால், என் வாய்த்துடுக்கு அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவள் கேட்ட கேள்வியை வைத்தே, எதிர்க்கேள்வி கேட்டது.
“அப்படியென்றால் நம்ம முதலாளி ஏன் நபீலையே சுற்றிச்சுற்றி வருகிறார் அம்மா?
இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்த்து இருக்க மாட்டாள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அவளும், இதே என் கேள்வியை, அவள் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறாள் போலும்.
அவள் தயங்காது பதில் சொன்னாள். “நீ கேட்கும் கேள்வியிலும் ஒரு நியாயம் இருக்கிறது குல்பாரி. ஏதோ ஒரு வகையில், முதலாளிக்கும் அந்த பலவீனம் இருக்கிறது. அவரிடம் கூட, ஒரு சொல்லமுடியாத பெண்மை இருக்கலாம். யார் கண்டது?”
அவள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன், இந்த பதிலைச் சொன்னபோது, எனக்கு முதலாளியம்மா மீது இரக்கம் வந்தது. நான் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. ஆனால் சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, அவளே பேசினாள்.
“குல்பாரி… இல்லற வாழக்கை என்பது, மதங்கள் சொல்லும் ஒழுக்கநெறி விதிகள் போல, ஒரே ஒரு நேர்கோட்டில் இல்லை. மாறாய், மேட்டிற்கும், பள்ளத்திற்கும் ஏற்ப, வளைந்து வளைந்து செல்லும் ஒரு நதியைப் போன்றதுதான், இல்லற வாழ்க்கை.”. அவளே பேசி, அவளே நிறுத்தி, அவளே தொடர்ந்தாள்.
“கணவனின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாதபோது, எந்த வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல், அவன் வழியில் அவனை விட்டு, காலத்தை அமைதியாகக் கடந்து செல்லுதலே, புத்திசாலித்தனம் என்று நான் நினைக்கிறேன்.”
“என்னை நம்பி, எனது கணவர் இருக்கிறார். எனது கணவரை நம்பி நான் இருக்கிறேன். எங்கள் இருவரையும் நம்பி ஒரு குழந்தை இருக்கிறது. அத்தனைபேரின் நம்பிக்கையையும், இந்த செக்ஸ் என்ற அத்துமீறல், பாழாக்குவதை நான் விரும்பவில்லை. நடப்பது நடக்கட்டும். அல்லா இருக்கிறார். இதுவும் ஒரு நாள் கடந்து போகும்”
அவள் அமைதியாகப் பேசினாள். ஆனாலும் அவள் பேச்சில் ஒரு வருத்தம் இல்லாமல் இல்லை. நான் பேச்சை மாற்றினேன்.
“அம்மா… நம்ம கிராமத்திலேயே, பொமபளை மேல ஆசைப்படற பொம்பளைகளும் இருக்கறாங்க அம்மா.” நான் இப்படிச் சொன்னவுடன், முதலாளியம்மா சிரித்தாள்.
“அப்படியா.. குல்பாரி.. உனக்குத்தான் எவ்வளவு விஷயம் தெரிந்து இருக்கிறது? எனக்குத்தான் இந்த விசயங்களில், உன்னைப்போல் போதிய அறிவு இல்லை”. அவள் என்னைக் கேலி செய்கிறாளா அல்லது எனது அறிவை மெச்சுகிறாளா என்று நான் யோசிக்காமல் பேசினேன்.
“ஆமாம் அம்மா.. சில பெண்களுக்கு இதுவே வேலை. ‘உன் ஜாக்கெட் நிறம், உனக்கு எடுப்பாக இருக்கிறது குல்பாரி’, என்று சொல்லிக்கொண்டே, எனது மார்பகங்களைத் தடவுகிற பெண்களும், நமது கிராமத்தில் உண்டு அம்மா” என்றவுடன், அவள் மனம் நிறையச் சிரித்தாள்.
அவளது மனம் நிறைந்த சிரிப்பில், அவளது சோகத்தை, நான் மறக்கச்செய்து விட்டேன் என்று எனக்கு ஓர் சந்தோசம்.
முதலாளியம்மா சிரித்துக்கொண்டே உள்ளே சென்று, அவள் படுக்கையறைக்குச் சென்று விட்டாள்.
மாலை மங்கி, இருள் கூடிப் போனது. நான் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு, எனது அறைக்குச் சென்றேன்.
படுத்துக்கொண்டே யோசித்தேன். எனது நினைவில் அந்த பச்சாபாசிப் பையன், நபீல் வந்து போனான்.
இந்நேரம் முதலாளி நபீல் இருக்கும் அந்த வீட்டிற்குப் போய் இருப்பார். நபீல் தனது உடைகளைக் கழற்றி நிர்வாணம் ஆகி இருப்பான். முதலாளியும் நிர்வாணம் ஆகி இருப்பார்.
முதலாளி, அந்த பச்சாபாசிப் பையன் நபீலைக் குனியவைத்து…
எனக்கு அதற்கு மேல் கற்பனை செய்ய முடியவில்லை. நான், கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்
- கலைகின்ற பொய்கள்
- சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்
- கவிதை
- வாழ்க்கை
- மழை புராணம்- 12
- வைபவம்
- பச்சா பாசி – அத்தியாயம் நான்கு
- பச்சா பாசி – அத்தியாயம் ஐந்து