This entry is part 1 of 8 in the series 29 மார்ச் 2026

லதா ராமகிருஷ்ணன்

எந்தப் பிரச்சனை ஆனாலும் அதை அகல்விரிவாக பல்வேறு கோணங்களில் அலசி பார்க்க வேண்டியது அவசியம் ஆனால் பிரச்சினையின் கண்ணில் தெரியும் பகுதியை மட்டுமே பிடித்துக்கொண்டு அதை கொண்டே பிரச்சனையை அலசியாராய முற்படுவது பலருக்கு எளிதான காரியமாக அப்படித்தான், ஒரு கட்டத்தில், ஓரினப்பாலுறவாளர்கள் அனைவருமே சமூகப்புறக்கணிப்புக்கு ஆளாகும் பலிகடாக்கள், ஓரினப்பாலுறவில் சமத்துவம் பேணப்படுகிறது என்பதான அனுதாபப்பார்வையும் பிரச்சாரமும் முன்வைக்கப்பட்டது. பின், அத்தகைய உறவிலும் ஆண்டான் – அடிமை, dominant – dependent நிலை நிலவுகிறது என்பதைக் குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகின. 

பாலியல் குற்றங்களில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதேசமயம், பாலியல் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களை விட அந்நியப்பெண்கள் நடந்த சம்பவத்தை நினைத்து அதிகம் வருந்துவார்களென்று உறுதியாகச் சொல்ல முடியுமா? இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடும்பத்தாருக்கு ஏற்படும் உளவியல்ரீதியான, சமுதாய ரீதியான பாதிப்புகள் குறித்து பெரிதாக கவனம் செலுத்தப்படுவ தல்லை யென்றே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக பாலியல் பாதிப்புக்கு ஆளான சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் குடும்பம் எதிர்கொண்ட, அனுபவித்த பாதிப்புகள் துன்பங்கள் யாவை என்ற தகவல்கள் அதிகம் ஊடகவெளியில் பேசப்படவில்லை. பாலியல் வன்முறைக்காளானவர்களின் உளவியல் பாதிப்புகள் பற்றி பற்றிய விவரங்களும் குறிப்பான அளவில் தரப்படுவதில்லை

இப்போதெல்லாம் அச்சு, ஒளி,  மின் ஊடகங்கள் பாலியல் வன்முறை சார்ந்த விஷயங்களை பரபரப்பு செய்தியாக, நடுநடுவே சித்தரிக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு (இதை முதலில் தடை செய்ய வேண்டும்) மேலோட்டமாக தந்துவிட்டு அடுத்தடுத்த பாலியல் வன்முறைகளுக்கு நகர்ந்துவிடுகின்றன

 இன்னொரு பக்கம், சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்த பள்ளி சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டபோது அதன் பின்னணியில் இருந்த அரசியல் அரசியல் காரணங்கள் புறமொதுக்கப்பட்டு பிரதான அச்சு, ஒளி ஊடகங்கள் அந்த வன்முறை குறித்து பெரும்பாலும் பாராமுகமாகவே இருந்தன. வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இறந்த மாணவியின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை அது பாலியல் வன்முறை அல்ல என்று நிறுவிய பிறகும் அந்த மாணவி பள்ளி விடுதியில் பள்ளி நிர்வாகத்தினர் யாராலோ பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக ’துண்டு போட்டு தாண்டாத குறையாகத் திரும்பத்திரும்ப, எந்த முகாந்திரமுமில்லாமல், தான் சார்ந்த ஊடக காணொளிகளில் சொல்லிக்கொண்டிருந்தவர், இவ்வாறு இறந்த மாணவியை மதிப்பழித்துக் கொண்டிருந்தவர் இன்று மூத்த பத்திரிகையாளராய் தமிழக ஆளுங்க கட்சிச் சேனல்கள் நடத்தும் விவாதங்களில் பங்கேற்றவண்ணம்…..

தேர்தல் சமயமான இந்த நேரத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து சிறுமிகள், வளரிளம்பெண்கள், நடுத்தர வயதினர், மூதாட்டிகள் என பலர் பாலியல் சீண்டலுக்கும், அத்துமீறல்களுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவது தொடர்பாய் மர்மக்கதை சொல்லும் தொனியில் செய்திகளை பகிரும் பிரதான தொலைக்காட்சி சேனல்களில் எதிர்கட்சிகள் இவற்றை ஆளுங்கட்சியின் நிர்வாகத்திறமையின்மையாக, குடி, கஞ்சா பழக்கம் தமிழகத்தில் அதிகரிப்பதன் காரணமாக,  இதையெல்லாம் அரசு கண்டுங்காணாமல் இருப்பதன் விளைவாக நடக்கும் நிகழ்வுகளாகப் பார்க்கின்றன, கண்டிக்கின்றனவே தவிர இதற்கு முக்கியக் காரணம் ஆபாச, ’போர்னோ’ காணொளிகளின் பெருக்கமும், அதில் கிடைக்கும் அளப்பரிய வருமானமும் இந்தப் பாலியல் அத்துமீறல்களுக்கு முக்கியக் காரணம் என்ற கோணத்தில் ஏன் பிரச்சனையை அணுகுவதில்லை என்றே புரியவில்லை.

 தவிர பெண் மீதான பாலியல் வன்முறை பேசப்படும் அளவு சிறுவர்கள், ஆண்கள் மீதான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் பேசப்படுவதில்லை.

பிப்ரவரி 21 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியின் முதன்மை வாசகம் இது; Caused severe psychological harm; Why UP court called it a ‘rarest of rare’ case; UP couple gets death for sexually abusing 33 boys, sold images on dark web’

சுமார் 10 ஆண்டுகளாக அரசு இளநிலை பொறியாளர் ராம் பவனும் அவனுடைய மனைவி துர்காவதியும் அக்கம்பக்கத்தில் இருந்து சிறுவர்களை அன்பு காட்டி வீட்டிற்குள் வரவழைத்து, தின்பண்டங்கள் சின்ன சின்ன பரிசுப் பொருட்களை கொடுத்து, மெல்ல மெல்ல அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை படம் எடுத்து பல ரகசிய இணைய வலைப்பின்னலமைப்புகளில் பகிர்ந்திருக்கிறார்கள் 2010 – 2020-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அப்படி அக்கம்பக்கத்தில் இருந்த பொருளாதார ரீதியாய் நதிந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு செல்போன், ஆன்லைன் வீடியோ கேம்ஸ் என்று ஆசை காட்டி பின்படிப்படியாக தம் வசமாக்கிக் கொள்வார்களாம் அந்த தம்பதியினர் பிள்ளை இல்லாதவர்களின் பாசமாக அதை பகுத்து ஏமாந்திருக்கிறார்கள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள். சிறுவர்களின் நம்பிக்கையை ஈட்டிய பிறகு அவர்களை பாலியல் ரீதியாக அனுபவித்து துன்பருத்தி அதை படம் பிடித்து இந்த தம்பதியர் அனுப்பிய பதிவுகள் சுமார் 47 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. 2010 இலிருந்து 2020 வரையான காலகட்டத்தில் அந்த தம்பதியர் பாண்டா ,சித்திரக்கோட்டில் இந்த வேலையின் முனைப்பாக ஈடுபட்டுள்ளனர்

சில சிறுவர்கள் மூன்று வயதுக்காரர்கள் அந்த குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் காணொளிகளையும் புகைப்படங்களையும் டார்க் வெப் இல் வெளியிட்டனர் தம்பதியர் .

………………………………………………………………………………………………….

* விக்கிபீடியாவிலிருந்து டார்க் வெப் என்பது இணையத்தைப் பயன்படுத்தும் டார்க்நெட்களில் ( ஓவர்லே நெட்வொர்க்குகள் ) இருக்கும் உலகளாவிய வலை உள்ளடக்கமாகும் , ஆனால் அதை அணுகுவதற்கு குறிப்பிட்ட மென்பொருள், உள்ளமைவுகள் அல்லது அங்கீகாரம் தேவைப்படுகிறது. [ 1 [ 2 [ 3 [ 4 ] டார்க் வெப் மூலம், தனிப்பட்ட கணினி நெட்வொர்க்குகள் ஒரு பயனரின் இருப்பிடம் போன்ற அடையாளத் தகவல்களை வெளியிடாமல் அநாமதேயமாகத் தொடர்பு கொள்ளவும் வணிகம் செய்யவும் முடியும்[ 5 [ 6 ] டார்க் வெப் என்பது டீப் வெப்பின் ஒரு சிறிய பகுதியாகும், இது வலைத் தேடுபொறிகளால் குறியிடப்படாத வலையின் பகுதியாகும் .

……………………………………………………………………..

எதிர்த்த சிறுவர்கள் பரிசுப்பொருட்களால் சரிக்கட்டப்பட்டனர். அல்லது மிரட்டப்பட்டனர். விஷயம் தெரிந்து கேள்வி கேட்ட ஏழைப் பெற்றோர்களும் அவ்விதமாகவே வாயடைக்கப்பட்டனர்.  பெரும்பாலும் அதிக பரிச்சயமான பெரிய பையன்களைக்கொண்டே சின்னப் பையன்களைத் தங்கள் வலைக்குள் சிக்கவைப்பார்களாம் இந்தக் கணவனும் மனைவியும்.

அப்படி புழக்கத்திலிருந்த சிறார் பாலியல் வல்லுறவுக் காணொளிகளைக் குறித்து INTERPOL (பன்னாட்டுக் காவல்துறை) மேற்கொண்ட புலனாய்வு இந்த தம்பதியினரைச் சுட்ட, விசாரணை CBI ஐக்கு வந்தது.

2021, அக்டோபர் 31 இல் எஃப் ஐஆர் இந்த தம்பதியர் மீதும் மற்றும் யார் என்று அறியப்படாத வேறு சிலர் மீதும் பதிவு செய்யப்பட்டது விசாரணை நகர்வில் சிபிஐ அதிகாரிகள் மின்னியல் ஆவணங்கள், மின்னியல் கருவிகளை அந்த தம்பதியர் வீட்டிலிருந்து கைப்பற்றினர். பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு மருத்துவ பரி சோதனைகள் நடத்தப்பட்டன.  வாக்குமூலங்கள் பதிவுசெய்துகொள்ளப்பட்டன. திரட்டப்பட்ட மேற்படி விஷயங்கள் எல்லாம் அரசு தரப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தவிர, பறிமுதல் செய்யப்பட்ட ’சேகரிப்பு வன்பொருட்களிலிருந்து பெறப்பட்ட மின்னியல் ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டன.

பாதிக்கப்பட்ட சிறார்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் அவர்களிடம் நிறைய உடல் ரீதியான உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. 25க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடைய பிறப்புறுப்புகளில் ஏற்பட்ட  காயங்களுக்கான சிகிச்சை மருத்துவமனைகளில் அளிக்கப்பட வேண்டியி ருந்தது சிலருக்கு மாறுகண் உள்ளிட்ட பாதிப்புகள்,  பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், அந்த தம்பதியினர் திட்டமிட்ட ரீதியில் சிறுவர்களை ஏமாற்றி அவர்கள் அன்பை சம்பாதித்து , நம்ப வைத்து ஏமாற்றி இப்படி பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியிருப்பதாகத் தெரிவித்த தெரிவித்த ’போக்ஸோ’ நீதிமன்றம் இவ்வாண்டு பிப்ரவரி 20—, 21 தேதிகளில் அந்த தம்பதிக்கு மரணதண்டனை விதித்தது. தவிர பாதிக்கப்பட்ட 35 குழந்தைகளுக்கு கலா 10 லட்சம்  நிவாரணத்தொகை வழங்கும்படி உத்திரபிரதேச அரசிடம் கூறியிருக்கிறது.  

இந்த வழக்கை RAREST OF RARE வழக்காகக் குறிப்பிட்டது நீதிமன்றம்: The sheer scale of this victimisation across multiple districts, combined with the extreme moral turpitude of the convicts marks this as a crime of such an exceptional and heinous nature that it leaves no room for reformation, necessitating the ultimate judicial deterrent to meet the ends of justice” என்று தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

*

Series Navigationஉங்களால்   முடியாது!