This entry is part 4 of 6 in the series 31 மே 2026

வசந்ததீபன்

_____________________________

நேசம்  எல்லா  இருதயங்களிலும்  பூக்காது

அன்பு  எல்லா  மனங்களிலும்  ஊற்றெடுக்காது

ஒரு  இதயம்  ஒரு  இதயத்துடன்  தான்  சங்கமிக்கும்

தோழியே  உன்  வார்த்தைகள்

என்  இருதயத்திற்குள்  பூக்கள்

என்  வாழ்வின்  அற்புதக்  கனிகள்

உண்மை  அன்பு  பிதற்றும்

பொய்மைப்  பிரியம்  

அளந்து  அளந்து  பேசும்

குயில்  மட்டும்  தான்  பாடி  மகிழ்விக்கும்

கண்கள்  கோடி  பார்க்கும்

மனம்  ஒன்றைத்  தான்  தேர்ந்தெடுக்கும்

பிரியம்  கொள்வது  ஒரு  அதிசயம்

உலகில்  ஆயிரம்  பறவைகள்

தோட்டத்தில்  ஆயிரம்  புஷ்பங்கள்

ஒரு  பூ  ஒரு  பறவை  உண்மையான  நேசிப்பிற்குரியது

உன்  ஆழி  ( அழகு) க்குள்  காலெடுத்து  வைக்கிறேன்

என்னை  வாரிச்  சுருட்டுகிறாய்

நீச்சலிட்டுக்  கரை  தேடித்  தத்தளிக்கிறேன்

உன்  அழகு  கவிதை

உன்  வார்த்தை  கவிதை

உன்  அன்பு  கவிதை

மஞ்சள்  வண்ணப்  பறவை

மனசுக்குள்  கனவுக்கூட்டைக்  கட்டுகிறது

ஒளிப்  பிழம்பில்  மூழ்கித்  திளைக்கிறேன்

தேவதையின்  கடைக்கண்  திறக்கட்டும்

தேவலோக  கனவுகள்  பலிக்கட்டும்

தேனும்  பாலும்  நதியாய்  பிரவகிக்கட்டும்

பொன்மஞ்சள்  வண்ண  மலர்

பூத்திருக்கிறது

பூமியெல்லாம்  தங்கமயம்

மனதோடு  பேசும்  

கனவோடு  உறவாடும்

நீருள்  விளையாடும்  உன்  பேரழகு.

🦀

வசந்ததீபன்

Series Navigationகவிஞர் தங்கம்மூர்த்தியின் கூடுதிரும்புதல் எளிதன்று ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வைதெளிவில்லா முன்னும் / தெளிந்த பின்னும்…