
நண்ப.
இன்னொரு கத்தியை
உன் கையில் கொடுத்துவிட்டு
மரண டேபிளில் -நான்
படுக்க முடியாது நண்பனே !
உன் ஆண்மை விழித்தெழ
என் தொழுவத்தில்
கன்றை கட்டிவிடாதே!
என்ன தான்
இரவு பார்ட்டியில்
நீயும் நானும் குடித்தாலும்
பாழாய் போன கடவுள்
எனக்கு மட்டும்
கருப்பையை வைத்துவிட்டான்.
அதில்
உதிர குப்பைகளை
கொட்டமுடியாது.
உனக்கு
கொழுத்த
பெண் பொம்மைகளை
வாங்கித்தருகின்றேன்.
இரவில் படுத்துக்கொள்.
எப்பவும் போல்
அடுத்த நாள் காலை
நல்ல நண்பனாக வா!!.
இரா.ஜெயானந்தன்.