author

நான்கு கவிதைகள்

This entry is part 5 of 12 in the series 17 ஜனவரி 2021

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும்  ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம்.   விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். ரசமெல்லாம் கச்சிதமாகத்தான் இருந்தது. அவர்கள் காணவிரும்பிய தோற்றத்தைத்தான் அது காண்பிக்கவில்லை. (நி)தரிசனம் ஜில்லென்ற புல்வெளியில் காலை அழுத்தித் தேய்த்து நடந்தான். ‘ஆஹா, என்ன சுகம்’ […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

This entry is part 8 of 13 in the series 10 ஜனவரி 2021

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் “இவைகள் கதைகளல்ல, காட்சிகள்” என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப்  பல கட்டுரைகளில் தனது  கதைகளைப் பற்றி அவர் பேசும் போது நாம் கவனிக்க முடியும். ‘பிள்ளையார் பிடிக்கிறேன்’ என்று குரங்கைப் பிடித்து விட்டு மர்க்கட கணபதி என்று கூப்பிடும் சூழலில் இது ஒரு அதிசயித்தக்க குரல்.   […]

கானல்

This entry is part 6 of 11 in the series 3 ஜனவரி 2021

கைக்கெடிகாரத்தைப் பார்த்தார் கந்தாடை. ஆறு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. சூரியன் மேற்கே விழுந்து கொண்டிருந்தான். அவர் தான் உட்கார்ந்திருந்த பார்க் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டார். ரத்த ஓட்டம் சமநிலைக்கு வர சில நிமிஷங்கள் ஆகும். வயதாவதை இது போன்றவற்றை அல்லாமல் வேறு எப்படித்தான் இயற்கை மனுஷனுக்கு உணர்த்துவதாம்? இருட்ட இன்னும் ஒரு கால் மணி, அரை மணியாகும். ஆனால் அவர் இப்போது கிளம்பினால்தான் பதினேழாவது கிராஸில் உள்ள வீட்டைத் தெரு விளக்குகள் எரியத் […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

This entry is part 9 of 12 in the series 27 டிசம்பர் 2020

  “தூரப் பிரயாணத்”தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று  அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால்  மற்ற விசேஷ அம்சங்களை நாம் தவற விட்டிருப்போம் என்னும் உறுதியான எண்ணம் இக்கதையைப் பலமுறை படித்த பின் தோன்றுகிறது.   ஜானகிராமனின் சம்பாஷணைகள் கத்தி மேல் நடப்பது போன்ற லாகவத்தைத் தம்முள் அடக்கிய வண்ணம் இருப்பது இந்தச் சிறுகதையில் விஸ்தாரமாகவே வந்திருக்கிறது.  கல்யாணமாவதற்கு முன், பாலியின் நட்பில் இருந்த ரங்கு அவளுக்குத் திருமணமான பின்னும், ஏன் அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்ட பின்னும் […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி

This entry is part 1 of 9 in the series 20 டிசம்பர் 2020

மார்க்கம் ஒரு இருபத்திஐந்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு மெஸ் நடத்துபவர். அவர் சாப்பாடு போடும் விதம் எப்படி? தெருவோடு போகிறவர்களுக்கு அவர் சாதம் போடும் ஓசையைக் கேட்டால் ஏதோ முறம் முறமாய் இலையில் சாதத்தைச் சரித்துக் கொட்டுகிற மாதிரி இருக்கும். மார்க்கம் ஈயம் பூசிய பித்தளை முறத்தில் சாதம் கொண்டு வருவார். அந்த முறம் நடுவில் ஒடிந்து கொஞ்சம் குழிவாக இருக்கும். சாதம் சரிவதற்காக அவரே செய்த யுக்தி.அந்த முறத்தைத் டம டமவென்று தட்டுவார். ஆர்ப்பாட்டம் செய்வார். […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்

This entry is part 2 of 15 in the series 13 டிசம்பர் 2020

  கதை சென்னையில் நடக்கிறது. அதுவும் பஸ்ஸில். ஊரின் “கலாச்சாரப்படி” காலங்காத்தாலேயே கடையைத் திறந்து வச்சு ஊத்திக் கொடுக்கிறவங்ககிட்டே இருந்து வாங்கிப்”போட்டுக்” கொண்டு வந்துவிட்டவான் என்று குடிமகனைப் பற்றி சக பிரயாணியான பெண் சொல்கிறாள், குடிமகனுக்கும்  அந்தப் பெண்மணிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் கதை பின்னப்படுகிறது. சென்னை பாஷையில் தி. ஜா. ரவுண்டு கட்டி அடிக்கிறார்.  கண்டக்டரிடம் பணத்தைக் கொடுத்து டிக்கட் கேட்கிறான் குடிமகன்.  “இது என்னாய்யா ரூவா நோட்டா? வேற குடு. ஆணியில மாட்டி வச்சிருந்தியா? நடுவில் இம்மாம் பெரிசு ஓட்டை !  வேற குடுய்யா” “என்ன மிஷ்டர் ! நானா ஆணில மாட்டி வச்சிருந்தேன், ஐகோட்டாண்ட டீ குடிச்சேன். அவுருதான் குத்தாரு.” […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்

This entry is part 5 of 8 in the series 29 நவம்பர் 2020

  ஸிந்துஜா  மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் – நிஜமாகவே ஆறுதான் – இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில்  க்ஷேம  லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும் பகை மூண்டு விடுகிறது. அடுத்தவர்கள் என்பவர்கள் எதற்கு இருக்கிறார்கள்? இப்படிக் குளிர் காய்வதே ஓர் லட்சியமெனச் சுற்றி வருகையில்? நாட்டாண்மைக்குமுத்திரை ஸ்டாம்பு விற்கிறதும், கோர்ட்டு, சாசனம் மனு எழுதிக் கொடுக்கிறதும்தான் வயிற்றுப பிழைப்பு. ஆனால் முக்கிய வேலை அவருக்கு நாட்டாண்மை. மனிதர், […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்

This entry is part 5 of 10 in the series 22 நவம்பர் 2020

ஸிந்துஜா  காதல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; அதற்கும் மேலாக மனம் சார்ந்தது என்று பலரும் பல தளங்களில் சொல்லி விட்டார்கள். இளமையில் இது சற்று அலட்சியப்படுத்த வேண்டிய கருத்து என்று அன்றைய வயது நிர்மாணித்து விடுகிறது. தளர்ந்த உடல் காதலைத் தாங்கிப் பிடிப்பதில்லை. ஆனால் பௌதீக ரீதியாக வயதாகியும், மனம் அப்போதுதான் மலர்ந்த பூவைப் போல வசீகரத்துடனும் , நீர்வீழ்ச்சியில் பொங்கி வரும் தண்ணீரின் வீரியத்துடனும்  இளமையாகப் பொலிந்தால் அத்தகைய வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் வரப்பிரசாதிகள்தாம். வெயில் கதையில் வரும் வெங்கி கிழவரைப் போல. வெங்குவின் எழுபத்தியிரண்டாவது வயதில் அறுபத்தி ஐந்து வயது மனைவி இறந்து விடுகிறாள். இறந்து விட்ட மனைவியைப் […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்

This entry is part 8 of 14 in the series 15 நவம்பர் 2020

  ஜானகிராமனின் தேர்ச்சி பெற்ற கையில் மனித சுபாவங்கள், சம்பாஷணைகளின் மூலமும், நிகழ்ச்சிகளின் மூலமும் உறுத்தாமல் சொல்லப்படுகின்றன. இங்கு உறுத்தாமல் என்று சொல்லப்படுவதின் நீட்சி இரைச்சலற்ற, பின் புலத்தில் அடங்கிய குரலில் விவரணைகளை வாசகனுக்குத் தருவதையே குறிக்கிறது. வியாபாரத்தினூடே ஒரு வெற்றிலை வியாபாரிக்கும் , வெற்றிலை வாங்குபவருக்கும் இடையில் நடக்கும் பேச்சுதான் கதை. நிகழ்ச்சிகள் மேல் ஏறிச் சவாரி செய்யும் சம்பாஷணைகளைக்  காண்பது ஓர் புத்தனுபவம். நாலு நாளைக்கு வரும் கவுளி வெற்றிலை ஒரே நாளில் உப்பிலியிடம் தீர்ந்து போனதன் மர்மம், அவருடைய வீட்டுக்கு வந்த  மாயவரம் மருமான் ஒரு தடவைக்குக் கால்கவுளி […]

சில கவிதைகள்

This entry is part 4 of 19 in the series 1 நவம்பர் 2020

  ஏன்  இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான்  நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. மூச்சு முட்டும். மேடை மேல் ஏறிப் பேச மாட்டேன். வாய் குழறும். பரிசுகள் கிடைத்ததில்லை. மார்க்கெட்டிங் வராதென்று காலேஜிலேயே பி.காம்தான். நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஆனால்  குழு என்றால் விரோதியாகி விடுவேன்  என்கிறார்கள் நீங்கள் என்னை யாரையும் வானளாவப் புகழ்ந்தோ, பரிசுகள் வாங்கியோ , பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவுடனோ பார்த்திருக்க முடியாது. நான் நீரிலிருந்து தள்ளி வைக்கப்பட வேண்டிய மீன். அல்லது  இறகுகளை […]