பிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்… வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும். பெருவேதனைக்குப் பின்னே பிரசவித்த மகவு கண்டு வலி மறந்து புன்முறுவல் பூப்பாள் சில நொடிகளுக்கு முன் பிறந்த அன்னை. – வருணன்.
வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி நிற்கையிலே அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில் சிறகு விரிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் சில.. வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க ஆயிரம் இருப்பினும் ஒற்றை வெட்கம் சூடும் உன்னழகினை யாதென்று எழுதி வார்க்க? ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு பதில் உரைக்கிறேன் நான்.. நிலாக்களைச் சிதறடித்து விளக்குகளைத் தனிமையின் இருப்பில் விட்டு அருகருகே அமர்ந்திருக்கிறோம், இரு இணை விழிகளில் […]
ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில் புரண்டு புரண்டு காற்றோடு மிதந்து போன தூக்கத்தை இமைகளின் முடிகளால் கட்டி இழுக்க எத்தனித்தேன்… என்னையே இழுக்கிற காற்றில் எதுவுமே நடக்கவில்லை. சுழலும் காற்று சூழ்ந்த இரவில் பற்பல பகற் கனவுகளோடு புரளும் நான்… குமரி எஸ். நீலகண்டன்
திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்…. நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால் தன்னந்தனியாய் தவிக்கும் அழுகையின் நிறம் மீளாத்துயருடன் பின் தொடரும் நிழலாய் நினைவுதிர்த்து போகின்றது……
வரும் மனிதருக்கு வழி சொல்ல சிதற விட்டுச் செல்லும் நம்பிக்கை கற்களில் மூதாதையரின் பல்வேறு முகங்கள். பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து காலமா யுருண்டு தரைக்கு வரும் கல். அதை உற்று நோக்கும் ஆய்வின் கண்களில், மேலே சிதைந்த பகுதியில் பட்டுச் சிதறும் கதிரொளி. காலத்தை குத்தி நிறுத்த ஒரு மனிதன் எழுப்பிய பிரமிட்டின் முனையில் அவன் மூக்கு மழுங்கியதாய் எண்ணி வருகிற சிரிப்பு பாலைவனத்தில் எதிரொலிக்கும். குளிரூட்டப்பட்ட பெரிய அறையில் உலகப் பொருளாதாரத்தை ஒரு நொடியில் […]
. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத் தின்று தீர்க்க வாய் திறந்து திறந்து மூடுகிறது உயிரின் நித்திரைத் திரட்டுகள்.. ***** –இளங்கோ
கால் இருந்ததால், வாசம் வசமானதென்றாள் கால் உள்ள மது, மாது அவள் கள்ள சிரிப்பால் பேதை அவன் கால் முளைத்து போதைக்கு பலியானான் அ.நாகராசன். பி.கு- கால் என்றால் காற்று , கால் என்றால் உடல் உறுப்பு, கால் என்றால் குறிலை நெடிலாக்கும் தொனை கால் (உ.ம்) மது-மாது
கொடும் மழையினூடே கரைந்தோடும் ஆற்றோர மணல் படுகைகளைப் போல் ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய் மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும் சில எம காத உருவங்களையோ பாத விரல்களினிடையேயான சேற்றுப் புண் எரிச்சல்களையோ ஓர் தேநீரின் இதமான கதகதப்பில் சில மணித்துளிகளாவது அவைகளையற்று இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள் மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான எவ்விஷயங்களுமற்ற வெற்று […]
நீ அறுதியிட்டு உச்சரித்த ஒற்றை எழுத்தில் ரத்தம் கசிகிறது குத்திக் கிழித்த காயத்தின் வலியென இந்த அவமானம்.. ***** –இளங்கோ
பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.