குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான். இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே கசிந்து […]
ஸிந்துஜா அம்புஜம் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பதரை அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. வீட்டை விட்டுக் கிளம்பும் போது அன்று நிச்சயம் பஸ் கிடைக்காது. ஒன்று தாமதமாகப் போய்த் திட்டு வாங்க வேண்டும் அல்லது ஆட்டோவுக்குத் தண்டம் அழுது போக வேண்டும் என்று நினைத்துதான் விறுவிறுவென்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். காலில் போட்டிருந்த செருப்பு பல விழுப்புண்களைக் கொண்டிருந்ததால் ரொம்பவும் வேகமாகவும் நடக்க முடியவில்லை. ஆனால் அன்று கடவுளுக்கு அவள் மீது பிரியம் வந்திருக்க வேண்டும். சற்றுத் […]
இரா முருகன் மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன் உண்டோ இங்கே மருத்துவன் உண்டோ. எங்கெல்லாம் சத்தம் எழுப்பப் […]
ஸிந்துஜா சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து விட்டு நழுவியது. அந்த ஊசிச் சுருக்கின் வலியில் அவள் காலை இழுத்துக் கொண்டு சேலையால் பாதம் வரை தெரியாமல் மூடிக் கொண்டாள். வெளியில் படுத்திருந்த கறுப்பன் உள்ளே வந்து சுற்றிப் பார்த்து விட்டு அவள் […]
உஷாதீபன் அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் […]
மனோகர் மைசூரு நான் இன்னும் அரை மணியில் என் அப்பாவின் நண்பர் டாக்டர் மதிவாணன் வீட்டில் இருக்கவேண்டும். எதற்காக என்று கேட்கிறீர்களா?. முதலில் அவரிடம் என் பிரச்சனையை பகிர்ந்து விட்டு உங்களிடம் வருகிறேன். ஒன்பதரைக்கு அவர் வீட்டில் உள்ள மதி மனநல கிளினிக்கில் வந்து விட்டேன். அவர் தன் தனிப்பட்ட அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். “என்னப்பா மதன், எதுக்கு திடிரென்று என்னைப் பாக்கணும்னு அப்பா கிட்ட சொன்னயாமே?. அட்வைஸ் ஏதாவது? இல்ல எனி ப்ராபளம் ?. […]
நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள். இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும். குயிலிக்கு வியப்பாக இருந்தது. […]
ஸிந்துஜா எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று கனகவல்லி கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் ‘பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்’ என்று அவனது அம்மாவின் வயிற்றெ ரிச்சலைக் கொட்டிக் கொண்டான். அதனால் அவன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரை எல்லா வேளையும் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று அவனது அப்பா சிவகுரு உத்திரவு போட்டு விட்டார். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு […]
அவளைத் தேடி வந்த சுகந்தி “ஏன் என்னமோ போல இருக்கீங்க?” என்று வசந்தாவிடம் கேட்டாள். “இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்” என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் “கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்” என்றாள். சுகந்தி “அதுக்குத்தான் வந்தேன்” என்றபடி கைப்பையைத் திறந்து மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கவரை எடுத்து “மேரேஜுக்கு அவசியம் நீங்க வரணும்” என்று சொல்லிக் கொடுத்தாள். “நிச்சயமா” என்று அவளுடன் கைகுலுக்கி விட்டு “என்னிக்கு?” என்றபடி பத்திரிக்கையைப் பிரித்தாள் “அடுத்த மாசம் ஆறாந் தேதி. […]
விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது. கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த […]