அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் நாக.சோனை என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும். குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம் வா என அவசரப்படுத்தினாள். அந்த நிமிடம் வாசல் கதவு திறந்து வெளியே வந்தவள் கையசைத்தாள் – வாருங்கள் பெண்களே, உங்களுக்கு மேகலையின் வரவேற்பு. தேறல் மாந்திப் போங்கள் என்னோடிருந்து. உடல் நலம் பேணுதல் முக்கியம். […]
வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய ராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ஷைலக்கை நோக்கி] மக்கள் சொல்வார். காதல் நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை அடைவான் […]
அது ஒரு மழை மாதம். பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் முதியவர் மரணம்’. அரசு சும்மா இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன. நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த […]
ஸிந்துஜா மல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் எல்லாவிதமான கடைகளும் பரவிக் கிடந்தன. சிக்னல் கிடைத்து வண்டிகள் நகர ஆரம்பித்தன. சிக்னலைக் கடக்கும் போது அவள் அவன் பார்வையில் பட்டாள். அவன் துள்ளியெழுந்து அவள்தானா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். காரோட்டி ஏய், ஏய், ஒளுங்கா உக்காரு. உனக்குப் பயித்தியமா பிடிச்சிருக்கு? என்று சத்தம் போட்டான். வெளியே தென்பட்ட ஒரு போலீஸ்காரர் அவன் தலையைப் பார்த்துக் கன்னடத்தில் […]
மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. ஆற்றங்கரை இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த துணி தவிரக் கொண்டு வந்த விழுப்பைத் துவைத்து அலசவும், ஆற்று வண்டல் எடுத்து, அழுக்கும், படிந்திருந்த உடல்வாடையும் போயொழியக் கையிடுக்கிலும், அரைக்கட்டிலும், காலிடுக்கிலும் வெகுவாகப் பூசி, குளிர்ந்த நதி நீரில் மனக் கசடும், எண்ணக் கசடும், உடல் கசடுமெல்லாம் உதிர்ந்து, தூய்மை மீட்டு வரவுமாக எல்லா வயதினரும், ஆண்கள் தனியாகவும், எதிர்ப் படித்துறையில் பெண்களும் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. சுவர்க்கடிகாரம் ஆறு முறை அடித்து ஓய்ந்தது ஒரு வழியாக லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தவன் , கண்களில் கைநிறைய நீரை அடித்து முகம் கழுவிக் கொண்டு வந்தான். அம்மா தந்த காபிக் கோப்பையை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து காலை எதிரிலிருந்த டீபாயின் மீது நீட்டினான். அன்று வெள்ளிக் கிழமை ஆனதால் காலையிலேயே அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் பலவற்றிலிருந்து ஊதுபத்தி வாசனையோடு கிணுகிணுவென மணியின் ஒலியும் எழுந்தது.தெருவில் பூ , […]
தமிழ் முஸ்லிம்களெல்லாம் எறும்பென்றால் அந்தப் பள்ளிவாசல்தான் கரும்பு. ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்கும் அதற்கு முன் நடக்கும் இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கும் உற்றார் உறவினர்களுடன் இந்தப் பள்ளியில் கூடுவதும் கலைவதும் என்றென்றும் நீங்காத நினைவுகள். அதற்குக் காரணம் தமிழ்முஸ்லிம்களின் கலாச்சார வழக்கப்படி நடக்கும் நிகழ்வுகள், மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களால் தமிழில் நடத்தப்படும் இறைச் சொற்பொழிவுகள் ஆகியவைதான் மாலை நேரத்தில் 5 மணிக்கெல்லாம் நோன்புக்கஞ்சி விநியோகம் தொடங்கிவிடும். அதற்கும் முன்னதாகவே இஃப்தார் வேலைகள் ஆரம்பமாகிவிடும். பள்ளிவாசலின் […]
“ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து […]
ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது கலுவத்தில் மருந்து அரையுங்கள். இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. சரியாகச் சொன்னால் மருத்துவர் நீலர் தருமரிடம். எனினும் அவர் வெகு காலமாக நீலன் வைத்தியராக உள்ளார். அழைக்க ஏதோ ஒரு பெயர். அதற்குமேல் என்ன வேண்டும்? அவரை அவரது மோசமான கவிதைகளுக்காக மற்ற மருத்துவர்கள் கொண்டாடினார்கள். உள்நாக்கில் அடக்கிக் கரையக் கரைய எச்சில் விழுங்க வேண்டிய மூலிகையைத் தவறுதலாக நாசித் துவாரங்களில் பிழிந்து மூக்கில் […]
வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ மோனிகாவைப் பார்த்து] எந்த ஓர் அழகிய மாது கர்வ மின்றி, எதை எப்போது எங்கே சொல்ல வேண்டும் என்று அறிந்தவளோ, சபையில் உரக்கப் […]