பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்

ஹிரண்யனின் மனவருத்தம் தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான்.…

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை குட்மார்னிங் மேடம். தொப்பியைக் கழற்றிக் கையில் மரியாதையாகப் பிடித்துக் கொண்டு குனிந்து கும்பிடு போட்டான் ஜேம்ஸ். நானும் அந்த துரைசானிக்கு அபிவாதயே சொல்லாத குறையாக எண்சாணும் ஒரு சாணாகக் குறுக…

முன்னணியின் பின்னணிகள் – 30

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை குளிராக பாந்தமற்றமாகவே இருந்தது. மழை வேறு பிடித்துக் கொண்டது. மேட்டுத் தெருவில் விகாரேஜை நோக்கி நடந்தேன். வழியில் தென்பட்ட கடைகளின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த கென்ட் பிரதேசத்துக்கேயான…

நீ, நான், நேசம்

நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான…

பருந்தானவன்

இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு…

ஷிவானி

ரிஷ்வன் ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் அதைப் பார்த்த பொழுது, . அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில், நான்கு சேர்கள் இருக்க, அதில் மூன்று சேர்கள் காலியாக, அதில் ஒன்றில், ஷிவானி அமர்ந்திருந்தாள், இல்லை இல்லை அப்படியே…

கசீரின் யாழ்

இளவரசன் கசீர் போர்களத்திலிருந்து குதிரையில் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் வகடு பழங்குடியினரை ஆளும் நகம்பாவின் மகன். வகடு பேரரசை ஆள வேண்டும் என்று போர்டுமா பழங்குடியினர் அவர்கள் மேல் போர் தொடுத்திருந்தார்கள். வகடு இனத்தவரும் சற்றும் மனந்தளராமல் அவர்களை எதிர்த்து வந்தார்கள்.…

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16

போங்கடா பன்னாடை பசங்களா! ராட்சசனுமில்ல பூதமுமில்லை. அநேகமாக எந்த ராசாவாவது படையெடுத்துவரலாம். கேட்டால் கோவணத்தை அவிழ்த்துகொடுங்க அதைத் தவிர கொடுக்கறதுக்கு என்ன வைத்திருக்கிறோம். நமக்கு கோழி, பன்றி உயிரு மயிரு எல்லாமொன்றுதான் 17 சின்னான்தான் முதன்முதலாகப் பார்த்தான். காலை தகப்பன் தொப்புளான்…

பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி

மலையாள மூலம் - ஆர். உன்னி ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை.…

நன்றி. வணக்கம்.

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை…