தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ராயிடம் வாக்கு தந்துவிட்டதில் மனம் தன்னைப்போல எனது லண்டன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த மதியம் பெரிசாய் வேலை ஒன்றுமில்லை. வீட்டுக்கார அம்மாளிடம் எதும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று கீழே வந்தேன். புனித லூக் மருத்துவப் பள்ளியின் காரியதரிசிதான் எனக்கு இந்த அம்மாளைப் பற்றிச் சொன்னது. அப்போது ஒரு முற்றாத நாற்று நான். பட்டணம் வந்தடைந்திருந்தேன். தங்க இடம்வேண்டும். வின்சென்ட் சதுக்கத்தில் அவளது வீடு வாய்த்தது. அங்கே ஒரு அஞ்சு […]
அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம்? எனக்குத்தான் படிப்பே செல்லலியே! சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும் […]
மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, கடல் அலைமேல் பயணம்போல் இரண்டு பள்ளங்களில் குதித்தெழுந்து, எல்லை தாண்டி வந்த பக்கத்துத்தெரு நாயைப்பார்த்து நம் நாய் ஆக்ரோஷமாய் உறுமுவதைபோல் ஒரு சவுண்டைக்கொடுத்துவிட்டுப் பின் சாந்தமாகிப்போகும். வந்த உடனே பஸ்கள் கிளம்பிப்போவது என்பது எப்போதாவதுதான். ஸீட்டிற்குக் கீழே போட்டிருந்த சூடான டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ட்ரைவர்கள், கண்டக்டர்களோடு அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் தந்தை உத்தம சீலன் பார்பரா ! உன்னத கோமான் ! வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற விதியைப் பின்பற்றுபவர். தான் தந்த நன்கொடைப் பணம் வெளியே தெரிந்தால் அத்தனை அருட்கொடை நிலையங்களும் கையேந்திக் கேட்கும் என்று கூட்டத்தில் பெயர் சொல்லக் கூடா தென்று வேண்டிக் கொண்டார். விளம்பரத்துக்கு ஏங்கிக் கிடக்கும் செல்வந்தர் மத்தியில் […]
ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் மந்திரிகளாக இருந்தன. ஒருநாள் ஒரு மதயானையோடு சிங்கம் சண்டை போட்டது. யானையின் கூர்மையான தந்தங்கள் அதன் உடம்பைத் துளைத்துவிட்டன. அதனால் சிங்கம் ஒதுங்கித் தனிமையில் வசித்து வந்தது. ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேதனைப்பட்டது, பசியால் உடம்பு இளைத்துப் போயிற்று. அதன் மந்திரிகளும் பசியால் வாடிப்போயின. அவற்றைப் பார்த்துச் சிங்கம், ‘’எந்த மிருகத்தையாவது தேடிப் […]
இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். ’முடியாது’, […]
வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். இப்போது சஞ்சலப்பட்டு என்ன பயன்? நான் கூறியதைப்போல பரியாரிவீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது உபாயம் வைத்திருப்பாள். 7. செண்பகத்திற்கு சங்கடமாக இருந்தது. சித்ராங்கியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இருக்கட்டுமே பரிதாபத்துக்குரியவர்களாக ஏழைகள் மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? சித்ராங்கிக்காக கோபுரவாசலிலும், கொடிக்கம்பத்தருகேயும், பிரகார வெளிகளிலும், ஆயிரங்கால் மண்டபத்திலும் பல ஜெகதீசன்கள் காத்திருக்கிறார்கள். இவளுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வல்லம்படுகையில் ஒர் அத்தை மகனிருக்கிறான். உற்சவகாலங்களில் வீட்டில் கற்பூர […]
வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக் கூரையின் வழியே வீட்டினுள் மழைநீர் சொட்டுச் சொட்டாய் ஒழுகியது. “டங்..டங்…” தப்பாத தாள லயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துவிழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது. பழசாகிப் போன கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு […]
1 சிறுகதை நிறையும் பொறையும் – வே.சபாநாயகம் – கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும் அறுபதை எட்டிப் பிடிக்காதவர்கள் – ஆணும் பெண்ணுமாய், கைகூப்பி வணங்குகிறார்கள். அப்பா, புதுமெருகுடன் மின்னுகிற பொற்றாலியை அம்மாவின் சிரத்திற்கு வலப்புறமாகக் கையைச் சுற்றி, அணிவிக்கிறார். அனசூயா அம்மாவின் நெஞ்சுக்கு நடுவில் மாங்கல்யம் வருகிற மாதிரி, பழைய தாலிக்கு மேலே பளிச்சென்று […]
மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, கிணறு இல்லை. வானம் பார்த்த பூமி. மாரி பொய்த்துவிட்டால் நகரம் நோக்கி நகர வேண்டியது தான். ஊரின் பெரும்பாலான மக்களுக்கு இதே நிலைதான். சென்னை பெருநகரம் இவர்களைப் போன்றவர்களை வாரி அணைத்து கொள்கிறது. கட்டிட வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் புறநகர் பகுதிகள் இவர்களது தொழில் மையம். எங்காவது வாட்ச்மேன் வேலை கிடைக்கும். நெளிவு […]