சொக்கப்பனை

கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள். வண்டி ஓடும்போது, தூரத்து மரங்களும் வீடுகளும்…

புதிதாய்ப் பிறத்தல்!

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன். எப்போதும் என்னிடம் கதையளப்பவள்…

டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை

மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும். பிறர் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்…

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3

"அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்." 4. நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று தில்லையில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டியது.…

எங்கே போக விருப்பம்?

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார். “சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி…

காணாமல் போன ஒட்டகம்

வளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர். வளமான நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாதிருந்த காலத்தில் வியாபாரி…

முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் பழைய நினைவுகளின் அலைப்புரட்டலோடு நான் அல்ராய் கியருக்காகக் காத்திருக்கிறேன். பிற்பாடு அந்த எட்வர்ட் திரிஃபீல்ட் தொட்ட சிகரம் என்ன, அப்போது அந்தக் காலத்தில் பெற்ற சிறுமை என்ன... என நினைக்கப் புன்னகை வந்தது. ஒருவேளை என்னைச் சுற்றியிருக்கிற…

ஓய்வு தந்த ஆய்வு

தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர்…

மனக் குப்பை

யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது எங்கிருந்து வந்தாலும், எவரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். நியாயம் நியாயம்தானே? யார் சொன்னால் என்ன? எவர் வாயிலிருந்து…

மூவாமருந்து

பொதிப்பொதியாக மேகங்களைக் காற்று சுமந்துகொண்டு போகிறது. கண்ணுக்குத் தெரியாத யாரோ பொத்துவிட மேகம் உடைந்து மழை கொட்டுகிறது. இப்படித்தான் அக்கா சொல்லிக்கொடுத்தாள். இதற்குமேல் சொன்னால் எனக்குப் புரியாது என்று அவள் நினைத்துச் சொன்னதில் நான் அவ்வளவாகத் திருப்திப்படவில்லை. மழையின் வெவ்வேறு தாளகதியில்…