நினைவு நதிக்கரையில் – 1

This entry is part 32 of 45 in the series 2 அக்டோபர் 2011

எனக்கு எப்போது ரஜினி பித்து பிடித்தது என்று சரியாக நினைவில்லை. எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும்போது பிடித்திருக்கலாம், என்று நினைக்கிறேன். எதை செய்தாலும், அதில் அதிதமாய் போவது என்ற என்னுடைய இயல்புப்படி, ரஜினி விஷயத்திலும் நான் மிகத்தீவிரமாக இருந்தேன். சொல்லப்போனால், என்னுடைய வயது ஒத்த பெரும்பாலானவருக்கு சிறு வயதில் ரஜினி தான் ஆதர்சமாய் இருந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது.ரஜினி பிடிக்கும் என்றால், கட்டாயமாய் கமலஹாசனை பிடித்திருக்க கூடாது என்பதுஅன்றைய முதல் விதி. எனக்கோ கமல் […]

சுத்த மோசம்.

This entry is part 28 of 45 in the series 2 அக்டோபர் 2011

“எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்”   ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ். “அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா. “என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ்  அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு சினிமா ஸ்டில்லைப் பார்த்து. “ ம்.. என்ன ப்ரயோஜனம். அடுத்தவங்க லைஃபை ஸ்பாயில் பண்ணிட்டு..” நொடித்தாள் ரேஷ்மா.. “எவ்வளவு முடி.. அழகான முகம் இல்ல..” ரசித்தான் ரமேஷ் ஒரு சினிமா விமர்சனம் பார்த்து. “ […]

தங்க ஆஸ்பத்திரி

This entry is part 19 of 45 in the series 2 அக்டோபர் 2011

தண்ணி பிடிக்கிற இடத்தில, குளத்தில, காட்டுக்கு போற வழியில எல்லாம் இடத்திலும் கேட்டுப் பார்த்தாள் செல்லம்மாள். ராஜாத்தி மசியவே இல்லை. செல்லம்மாள் மட்டுமல்ல; மஞ்சுளா, அமுதா ரெண்டு பேரும் தனியா தனியா கேட்டுப் பார்த்தார்கள்.. ஒரு பதில் வராது ராஜாத்தியிடம் இருந்து.. வேற வழியே இல்லன்னு செல்லம்மாள், மஞ்சுளா, அமுதா மூணு பேரும் கூட்டு சேர்த்துப் போய் கேட்டகலாம்னு முடிவு பண்ணி சத்திரத்துகிட்ட நின்னார்கள். ராஜாத்தி தனியா ஆத்துல குளிச்சிட்டு வந்துக் கொண்டிருந்தாள். ஈரத்துணியை உடம்பில சுற்றிட்டு […]

பிரதியைத் தொலைத்தவன்

This entry is part 15 of 45 in the series 2 அக்டோபர் 2011

———————————————- அந்த எழுத்தாளர் மனமொடிந்து தன்னுடைய சோகக் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது நடந்தது சுமார் நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் ஒரு மழை மூட்டமான மாலையில் என்று நினைக்கிறேன்……… “எனக்கு தற்கொலை செஞ்சிக்கலாமான்னு இருக்குது..” “ அய்யய்யோ…ஏன் ஸார் இப்படி நம்பி ஏமாந்து போனீங்க..” “ என்ன செய்யறது? என்னுடைய கெட்ட நேரம்…..” “ ஒங்க நாடகப் பிரதி எவ்வளவு பக்கம் இருக்கும்..?..” “ மொத்தம் முன்னூத்தம்பது பக்கம் இருக்கும்…கையொடிய நெஞ்சொடிய நானே ராத்திரியெல்லாம் […]

பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்

This entry is part 36 of 41 in the series 25 செப்டம்பர் 2011

சிங்கமும் முயலும்   ஒரு காட்டில்  சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தது. எந்த மிருகத்தைக் கண்டாலும் அதற்குப் பிடிக்க வில்லை. இந்த நிலைமையில் மான், பன்றி, எருமை, எருது, முயல் முதலிய வன மிருகங்களெல்லாம் ஒன்று கூடின. எல்லாம் சேர்ந்து முகவாட்டத்துடன் சிங்கத்திடம் போயின. கால் முட்டுக்கள் பூமியைத் தொடும்படி மண்டியிட்டுத் தலை வணங்கின. மிகவும் தாழ்மையுடன், ”அரசே! இப்படி நீங்கள் அர்த்த […]

முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்

This entry is part 35 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அந்த பிறைச் சந்திர தெருவில் மேடேறிப் போகிறேன். பிகாதிலியின் உற்சாகப் பொங்கலும் கலகலப்பும் அடங்கி இங்கே அமைதி ஆளைத் தழுவியது. கௌரவமான, பிறத்தியாரை மதிக்கிற அமைதி அது. நிறைய வீடுகள் பகுதிகளை வாடகைக்கு என்று அளித்தன. என்றாலும் அதை பறைசாற்றி வாடகைக்கு என அறிவிப்பு தொங்கவில்லை. சில வீடுகளில் பளபளப்பான பித்தளைத் தகடு அவர்கள் பெயர்பொறித்து. அவர் மருத்துவர் என்றால் தொழிலை அவை அறிவித்தன. வாசல் கதவுக்கு மேல்பக்க ஜன்னலில் அழகாய் அபார்ட்மென்ட் […]

சொன்னேனே!

This entry is part 31 of 41 in the series 25 செப்டம்பர் 2011

வே.ம.அருச்சுணன்- மலேசியா. மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்! “ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார். “ஆமாம்மா நம்ம குடியிருப்புப் பகுதியில இருக்கிற அம்மன் கோயில் திருவிழாவுக்குத்தான் போறேன். அதுக்குத்தானே இன்றைக்கு வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்தேன்!” பட படப்புடன் கூறுகிறாள். “கோயில் திருவிழாவுக்கு உன்னைப் போல வயசுப் பொண்ணுங்க அவசியம் போய்க் கலந்து கொண்டு இறைவனை வணங்கனும். அப்பத்தான் நம்ம கலை,கலாசாரம் இந்த நாட்டில நீடித்து வாழும் வளரும். கோயில்னா…நாலு நல்லவங்க […]

எஸ்டிமேட்

This entry is part 27 of 41 in the series 25 செப்டம்பர் 2011

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..” ”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்துரு.” பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன் சிக்கன்தான். ஆர்ப்பாட்டமா இருக்குடா.. எங்க அம்மாவுக்கு அவன்னா ரொம்ப பிடிக்கும். ” சின்னவன் நண்பர்களை அழைக்கச் சென்றிருந்தான். எல்லாரும் வந்துவிட ., ”டேய், தம்பி. இன்னும் கொஞ்சம் நேரமாகும். அந்த ஃபாண்டாவை ஊத்திக் கொடு […]

இறப்பு முதல், இறப்பு வரை

This entry is part 18 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இது ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட படைப்பு! காலை ஆறு மணி.. “பாலக் கறந்துட்டியா? கிளம்பவா?”, குளித்து முடித்து வெளியே வந்த மணி, தன் மகன் இளவரசனிடம் கேட்டது. குளியல் அறை என்று கூற முடியாத ஒரு ஓலைக் கூடு. அதன் மறைப்புத் தடுப்பை (கதவு என்றும் கூற முடியாது) தூக்கி, வெளிப் பக்கமாகத் தள்ளி வைத்து, வெளியே வருவதற்கு வழி செய்தார் மணி. அவர் குளித்து முடித்துவிட்டு உடம்பை ஒரு சொட்டு நீர் கூட […]

அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை

This entry is part 16 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இந்தி : அவத் நாராயன் சிங் தமிழில் : முனைவர் தி.இரா.மீனா “உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உங்களிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன் “அவன் மிக இயல்பாகச் சொன்னான். அறிமுகமில்லாத அந்த மனிதனின் பேச்சு என்னைச் சிறிது ஆச்சரியப் படுத்தியது.”எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் ” நான் மிக பணிவாய்ச் சொல்லி விட்டு “நாம் பரிச்சயமானவர்களா?”என்று கேட்டேன். “பரிச்சயம் என்றால் உங்கள் பார்வையில் என்ன பொருள்?” நான் உடனடியாக எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருந்தேன்.ஒரு திருப்தியான பதிலைப் […]