வேர் மறந்த தளிர்கள் – 26-27-28

This entry is part 20 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

26 திருமணம் சொந்தத்தில்  பெண் பார்த்தால் பிரச்னைகள்  வராது  என்ற  எண்ணத்தில் முன்பே பார்த்திபனுக்குப் பெண் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்த தூரத்து உறவான, கதிரவன் குடும்பத்தில் சம்பந்தம் பேசுவதற்கு முன்பாகத் தொலைப்பேசி வழியாக விபரம் சொல்ல அழைக்கிறார் தினகரன். சொல்லி வைத்தார் போல் மறுமுனையில் கதிரவன்தான் பேசுகிறார். “ஹலோ….! கதிரவனா பேசுறது…?” “கதிரவன்தான்……பேசுறேன். தினகரன்தானே பேசுறது…..?” “வணக்கம்,ஐயா….! என்னோட குரலை உடனே கண்டு பிடிச்சிட்டுங்கிலே?” “பல வருசமா கேட்கிறக் குரலாச்சே…..அவ்வளவு சீக்கிரத்தில  மறந்திட முடியுமா தினகரன்? […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]

This entry is part 19 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் […]

நீங்காத நினைவுகள் 14

This entry is part 18 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

இப்படியும் ஓர் அப்பா! (மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்) ஜோதிர்லதா கிரிஜா   “அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது.  ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல அப்பா, நல்ல அம்மா?’  என்கிறீர்களா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் உண்டு.  பெற்றோர்களிலும் சராசரி, சராசரிக்கும் மேல், மிக. மிக உயர்ந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தப்படக் கூடியவர்கள் உண்டு என்பதும் உண்மைதானே?       எல்லாருக்கும்தான் அப்பாக்கள் […]

தனக்கு மிஞ்சியதே தானம்

This entry is part 17 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

                                                   டாக்டர் ஜி.ஜான்சன் பத்து ஆண்டுகள் சிங்கப்பூரில் துவக்க, உயர்நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் கற்று முடித்து சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு முடித்தபின் மருத்துவம் பயில இந்தியா சென்றேன், அன்றைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியபின் தாம்பரத்தில் என்னுடைய அத்தை வீட்டில் ஒருநாள் தங்கி, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் புகுமுக வகுப்பின் அறிவியல் பிரிவில் பதிவு செய்துவிட்டு பிறந்த ஊரான சிதம்பரம் சென்றேன். விமான நிலையத்திலிருந்து வெளியேறீயதிலிருந்து என்னை வெகுவாக வருத்தியது நான் பார்த்த பிச்சைக்காரர்கள் […]

இரகசியமாய்

This entry is part 16 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

இரகசியமாய் இருக்க முடியவில்லை.   ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல்.   திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம்.   வாசல் கதவு சாத்தப் போய் வாசலுக்கு வெளியே நான்.   பிறர் கண்களை மூடப் பார்த்தால் என் கண்கள் பிறர் கண்கள்.   என் கண்களை மூடப் பார்த்தால் பிறர் கண்கள் என் கண்கள்.   இருளென்று நினைத்தால் இருளுக்குள் கரந்திருக்கும் வெளிச்சம் கவனிக்கும் என்னை.   என் ஆடையும் ’சக்கரவர்த்தி’ […]

கவிதைகள்

This entry is part 15 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

ஜென் கனவு   கலைத்துப் போடப்பட்ட பொருட்களின் மத்தியில் வெளிநபர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள்.   இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் தாழிடப்படாத கதவை திறப்பதற்கு அலங்கோலமாக உள்ள வரவேற்பறைதான் எத்தனை அழகு.   அலுவலக பணி நிமித்தம் முகமன் கூறி கைகுலுக்கும் போது புன்னகைப் பிரதி ஒன்றை வெளிப்படுத்த நேர்கிறது.   எவராலும் கண்டுபிடிக்க முடியாத மறைவிடம் தேடினேன் எங்கேயும் பின்தொடர்ந்து வந்துவிடுகிறது நிழல்.     அவள் நனைவதால் கரைந்துவிடுவதில்லை தான் இருந்தாலும் அவளின்றி குடையில் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22

This entry is part 14 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் கண்டார்.  பிறிதொரு நாளில், ‘நீ வேற யாரையோ அரையுங் குறையுமாப் பாத்துட்டு நான்குறே’ என்று தாம் சொல்லக் கூடுமென்பதால், அந்தத் துணுக்குகளை எடுத்து அவள் பத்திரப்படுத்திக்கொண்டு விட்டாள்  என்று ஊகித்து அவர் பெருமூச்செறிந்தார். அவருக்கும் ராதிகாவுக்குமிடையே இருந்த உறவு பல பிற குடும்பங்களில் போல் சாதாரணமானதாக இருந்திருப்பின்  அவர் அந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருந்திருக்க […]

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32

This entry is part 13 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார். சீடர்களால் மேலே செல்வதா அல்லது நின்று நின்று செல்வதா என்று முடிவெடுக்க இயலவில்லை. ஆனந்தன் சைகை காட்டி அவர்களைப் போகச் சொன்னார். புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்து மௌனமாயிருந்தார். ஆனால் தியானத்தில் இல்லை. கண்ணுக்கு […]

தீவு

This entry is part 12 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து.     “அந்தத் தீவோட பேர் என்ன…”     “பேரே இல்லை…”     “பேரே இல்லையா…”     “பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு”     “மனுஷங்களாவது இருப்பாங்களா”     “ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்”     “துறவிகள்…”     “சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.”     “எங்காச்சும் போய் சேரணும்…” விக்னேஷிற்கு விழிப்பு வந்தது. அவன் கண்முன் கிள்ளான் […]

தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !

This entry is part 11 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     கேளாமல் எதுவும் கிடைக்கப் போவ தில்லை ! புறக்கணித்த  பிறகு அருகில் வருவதும் உண்டு ! பகற் பொழுதில் நானிழந்த புதையலை, இரவின் காரிருளில் நான் கண்டு பிடித்ததும் உண்டு ! கண்ணுக்குத் தெரியாது, கை தொடவும் முடியாது ! உறங்காது விழித்திரு உன் ஆத்மாவை திறந்து வைத்து ! அதன் தூதுச் செய்தி தாரகை களில்  எப்போதும் தங்கி […]