உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் அழுவதை கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறது சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை என்னுள் குருட்ஷேத்திரம் நடப்பது அருந்தப்படாத கோப்பையில் அன்பு விளிம்பு வரை தெரிகிறது அழுகை ஓர் ஆயுதம் அதை நீ தெரிந்து வைத்திருக்கிறாய் உள்ளம் எனும் வீடு காலியாக இருக்கிறது வாடகை தரவேண்டாம் காரியம் சாதித்து கொள்வதிலேயே கவனம் செலுத்த வேண்டாம் நீ கண் பார்க்கும் போதெல்லாம் நான் […]
ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின் அழகு கண்டு அதிலே மொய்க்கும் வண்டின், மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும் ஆம்பலின் நிலை கண்டு கவிதை வரைவதற்கு நான் நீ நினைக்கும் கவிஞன் அல்ல. […]
பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’ சொறி நாய். பசித் தீ தணியும். நின்று அன்பில் நோக்குவாள் ’என்பு தோல் போர்த்த’ பிச்சைக்காரி. நில்லாமல் இரயிலடியை அவசரமாய்க் கடந்து கொண்டேயிருக்கும் இரயிலொன்று ஏமாற்றமாயில்லை அவளுக்கு. கு.அழகர்சாமி
இலக்கியச்சோலை நிகழ்ச்சிஎண்: 143 வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமை : திரு. வெ. நீலகண்டன், உறுப்பினர், இலக்கியச்சோலை நாவல் வெளியீடும் ஆய்வுரையும் ; முனைவர் திரு ஹரணி, பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நூல் பெறுபவர் : திரு சு. நரசிம்மன், உறுப்பினர், இலக்கியச் சோலை பதிப்பகத்தார்க்குப் பாராட்டு ; திரு வியாகுலன், அனன்யா பதிப்பகம் தஞ்சாவூர் […]
முனைவர் ந.பாஸ்கரன் உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார்கலைக்கல்லூரி,கடலூர். தமிழ் இலக்கியப்படைப்புகளில் கதைஇலக்கியங்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்;றன. புதினங்களில் கதைப்பின்னல் வடிவமைப்பு உட்பொருள் படைப்பாளுமை இவைகளைப் பொருந்து பல நிலைகளில் அமைகின்றன.சிறுகதை புதினங்களைவிட அதிகமாக வெளிவருவதைப்போன்றத் தோற்றங்கள் தென்பட்டாலும் புதினங்;கள் எண்ணிக்கை அளவினைக் கடந்து உணர்த்தும் உட்பொருளும் உத்தியும் நடையும்வரவேற்பைப் பெற்றுள்ளன.அவ்வகையில் எஸ்ஸார்சியின் கனவுமெய்ப்படும் என்னும் புதினம் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கும் உகந்ததாக காணப்படுகிறது.எஸ்ஸார்சி நவீனஇலக்கியத்தளத்தில் இயங்கிவருபவர்.வாசிப்பு அனுபவத்திலும் படைப்பு அனுபவத்திலும் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார.;கவிதைஇ சிறுகதை புதினம் கட்டுரை மொழிபெயர்ப்பு என்னும் பன்முகங்களில் […]
-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா” என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து “இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி” என்று பைவ்யமாகத் தனது தோசைக் கடை முதலாளியிடம் சொன்னார். “தம்பி ஒரு ஓட்டு இல்லாட்டி எலெக்சன் கேட்டுப்போகாது, தோசை மாஸ்டர் இல்லாமல் வியாபாரம் ஓடாது” என்றார் முதலாளி. “அண்ணாச்சி, எலெக்சனே என்னை நம்பித்தான் நடக்குது” […]
==ருத்ரா புரிதல்! எதை வைத்து எதை புரிவது? அந்தக்கூவத்தில் ஊறி பாதி அழுகிய தென்னை மட்டை புரிந்து கொண்டது தென்னையையா? அந்த கூவத்தையா? எந்த மொழி இங்கே அடையாள சத்தங்களை அடைக்காத்துக்கொண்டிருக்கிறது? சமஸ்கிருதத்துள் தமிழா? தமிழுக்குள் சமஸ்கிருதமா? சிவனா?விஷ்ணுவா? கல்லுருவின் கர்ப்பப்பைக்குள் முண்டிக்கொண்டு முனை கூட்டுவது. அதோ அந்த ஈழச்சகதியில் மூழ்கிப்போனது துப்பாக்கியா? தாகமா? எங்கும் எதிலும் இந்த ஒத்தையா ரெட்டையா விளயாட்டு தான். வேறு எல்லாவற்றையும் அப்பால் வையுங்கள். இந்த இருட்டுப்படலத்து வானம் திடீரென்று ஒரு […]
சுழியம் தற்பால்ச்சேர்க்கை குறித்த விவாதங்களை ஆங்கில ஊடகங்கள் தூண்டி வைத்துள்ளன. அமெரிக்க இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும் போஷிக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட உருவாக்கப்பட்டவை இந்த ஊடகங்கள். அவை தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றன. நமக்கும் ஒரு இயல்பான கடமை இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் ஊடகங்களின் நோக்கங்களைத் தாண்டிச் சிந்திக்க வேண்டிய அந்த அறிதல் எனும் கடமையை, அறிவின்பம் இயல்பாகவே உருவாக்குகிறது. இக்கடமையின் வழி இவ்விஷயத்தில் பல்வேறு தரப்புக்கள் குறித்த புரிதலை நாம் அடையவேண்டும். எதிர்ப்பவர்களே இந்த […]
‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.. பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன், அதுவரை வாய் மூடி மௌனமாக […]
தாகூரின் கீதப் பாமாலை – 93 என் கனவுப் பெண்மணி. மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எந்தன் கனவில் வழக்கமாய்த் திரிந்து வரும் அந்தப் பெண்மணியை நான் அறிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள முடிய வில்லை என்னால் ! தேடிச் சென்றதில் காலம் தான் வீணாய்க் கழிந்தது ! மங்கல வேளையில் என்னை நீ உன்னருகில் வர அழைத்தாய் ! என் அவமானத்தை கவசத்தால் மூடி மறைத்தாய் ! உன்னை எளிதாய்ப் புரிந்து கொள்ள முடியும் ! யாரென்னை […]