சமீப காலத்தில், ஜோஸப் ஸ்மித் ஜூனியர் உருவாக்கிய மார்மனிஸம் மதத்தை விட பெரிய மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரை குறிப்பிடலாம் என்றால், பஹாவுல்லா என்று அழைக்கப்படும் மிர்ஸா ஹூசைன் அலி நூரி என்ற ஈரானியரை குறிப்பிடலாம் மிர்ஸா ஹூஸைன் அலி நூரி நவம்பர் 12 ஆம் மாதம் 1817இல் , பெர்ஷியா (ஈரானின்) தலைநகரான டெஹ்ரானில் கதிஜா கானும் என்ற அம்மையாருக்கும், மிர்ஸா புஸுர்க் என்பவருக்கும் பிறந்தார். இவரது வரலாற்றை கூறுமுன்னர், பாப் bab என்று தன்னை […]
வீசி எறிந்தால் விண்மீனாகு மண்ணில் புதைத்தால் மண்புழுவாகு அடித்தால் பொன்னாகு பிளந்தால் விறகாகு கிழித்தால் நாராகு தாக்கும் அம்புகளை உன் தோட்டக் கொடிகளுக்குக் கொம்புகளாக்கு புயலிலும் பூகம்பத்திலும் தான் தன் சுழற்சிக்குச் சுருதி கூட்டுகிறது பூமி சுற்றிச் சுற்றி எரிகிறது பொய்த் தீ பொறாமைத் தீ தீ..தீ..தீ.. தீயின் வெளிச்சத்தில் பாதை தெரிவதைக் கவனி. . . பயணி. . . பஞ்சபூதமும் உனக்குள்ளே பரந்தாமனும் உனக்குள்ளே பயணி. . . அமீதாம்மாள்
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஒருவார காலம் நான் ரோசியுடன் வெளியே போகவில்லை. அவள் ஓர் இரவு ஹேவர்ஷாம் வரை போய் அம்மாவைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினாள். எனக்கு லண்டனில் நிறைய வேலைகள் இருந்தன. நாம் ஹேமார்க்கெட் (புல் சந்தைப் பிரதேசம்) தியேட்டருக்குப் போய்வரலாமா என்று என்னிடம் அவள் கேட்டாள். அந்த நாடகம் படுபோடு போட்டுக் கொண்டிருந்தது. ஓசி டிக்கெட்டுகள் கிடையாது. ஆக நாங்கள் தரை டிக்கெட் எடுத்தோம். கொஞ்சம் புலால், […]
33. கல்வியின் பயன் ஒரு மலையின் பக்கத்தில் ஒரு பெண்கிளி முட்டைகள் இட்டது. அவற்றிலிருந்து இரண்டு கிளிகள் வெளிவந்தன. கிளி இரை தேடி வெளியே சென்றிருக்கும்போது, அந்தக் கிளிக் குஞ்சுகளை ஒரு வேடன் எடுத்துச் சென்றுவிட்டான். அவற்றில் ஒன்று அதிர்ஷ்டவசமாக எப்படியோ தப்பித்துக்கொண்டது. மற்றதைக் கூண்டில் அடைத்து, அவன் பேசக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். எங்கெங்கோ சுற்றித் திரிந்து வந்த ஒரு ரிஷி மற்றொரு கிளியைப் பார்த்துவிட்டு அதைப் பிடித்து ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் வளர்த்தார். காலம் சென்றது. […]
துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நடந்தது. துபாய், அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த இலவசக் கணினிப் பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது. பெனாசிரின் அறிமுக உரையோடு துவங்கிய நிகழ்ச்சியில் தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அமீரகத் தமிழ் மன்றத்தின் […]
என் நிழலுக்குள்ளேயே அவன் நிழல்கூட விழாதுதான் அடங்கி நடந்துகொண்டிருந்தான் குழந்தை. கேள்விகள் காம்பாய் வளைந்திருக்க அவன் பதில்கள் அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன. ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும்போதே தடம் மாறியதறியாது வேறொன்றில் நின்று கொண்டிருக்கும் மனம் குழந்தைக்கு மட்டுமில்லாது எனக்கும் ஆனதில் மீன்களின் ஞாபகம் வியாபித்திருக்கும் குளத்தின் நினைவில் கருக்கொண்டிருந்த கவிதை விளைத்தமௌனத்தில் துணுக்குற்றவனின் கவனம் ஈர்க்க ” ஒரு ஊரில் ” என ஆரம்பித்தால் சொல்லிவிடப் பயிற்றுவித்திருந்த ராஜவம்சத் தொடரைச் சொல்லத் தூண்டியபோது சொல்லாது வேரோடு அறுத்து […]
ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய வீ ர விளையாட்டு என்ற குரல் ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலை ஒட்டி ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது .. இந்த ஆண்டு என் மதிப்பிற்குரிய தோழி மாலதி மைத்ரி அவர்களும் ஒரு கருத்தை வைத்திருப்பாதாக அறிந்தேன். அதாவது பார்முலா 1, ஃபார்முலா 3 போன்ற மேல்தட்டு மக்களின் வீர விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்கும் அரசு கிராமப்புற மக்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது? […]
கூரை எரவானத்தில் ஒரு கையும் இடுப்பிலொரு கையுமாக கமறி கமறி இருமியபடி நின்றுகொண்டிருந்த மருமகன் வேண்டா வெறுப்பாக பதிலிறுத்தார் 12. நள்ளிரவு பூசை முடிந்ததன் அடையாளமாக கோவில் பிரகாரத்திலிருந்து வெளியேறிய இரண்டொருவர்களைதவிர்த்து வீதியில் மனிதர் நடமாட்டமில்லை. தில்லை நகரம் உறங்கத் தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தது. ஜாதிமல்லி பூக்கள் இருளை அள்ளி முகத்தை துடைத்துக்கொண்டிருந்தன. தெற்கு திக்கிலிருந்து வீசிய காற்றினால் அதன் மணம் தெருக்கோடிவரை வீசியது. நகரின் உப்பரிகைகளும், கோபுரங்களும், வீட்டுக் கூரைகளும், மரங்களின் மேற்பகுதிகளும் பனியுடன் கலந்த […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நான்தான் அரசாங்கம். பீரங்கித் தொழிற்சாலையின் பிதா ! இந்த நாட்டுக்குப் பெருத்த வரிப்பணம் திரட்டும் செல்வீகக் கோமகன். நாங்கள்தான் இந்த நாட்டை ஆளும் முடிசூடா மன்னர் ! அரசாங்கத்தைப் போரில் புகுத்துவதும், போரிலிருந்து விடுவிப்பதும் நாங்கள்தான் ! போரில்லாத சமயத்தில் போர்த் தீயிக்கு எண்ணை […]