1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறதுமனதிலா?ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.என் வீடு நான் தான்என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறாபாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பதுஒரேயொரு பார் தானாஇன்றெனக்குக் கேட்பதுநேற்றுவரை இல்லாத இருமலாஇருந்தும் எனக்குக் கேட்காததா?வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?சரியாகியிருக்கும் சிலசவப்பெட்டிகளுக்குள்ளும்எரிந்த சாம்பலிலும்திருவாயற்றமொழியாகியிருக்கும் சில…எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவேஇந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறதுகண்ணீரேதும் திரளாதபோதும்.கொரோனா காலகட்டத்தை […]
அழகியசிங்கர் கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை. நான் மதிக்கும் பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணி ஒருவர். இலக்கியத் தரமான எழுத்து வெகு ஜன எழுத்து என்று இரண்டு பிரிவுகள் தமிழில் உண்டு. இலக்கியத் தரமான கதைகளைக் கவனத்துடன் படிக்க வேண்டும். பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலும் வெகு ஜன வாசிப்பு எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் கதைகளை எடுத்துப் படித்துவிட்டுத் தூக்கிப் போட வேண்டியதுதான். அதனால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. இன்னொரு முறை படிக்கவேண்டுமென்ற எண்ணமும் ஏற்படப்போவதில்லை. ஆர்.சூடாமணியின் […]
மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [ Sara Teasdale ] தமிழில் :தி.இரா.மீனா எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும் ரோகிணி, திருவோணம் என்று நட்சத்திரங்களை அவற்றின் பெயர் கொண்டு எனக்குத் தெரியும் சொர்க்கத்தின் அகன்ற படிக்கட்டில் அவைகள் போகும் பாதை எனக்குத் தெரியும். ஆண்களின் கண் பார்வையிலிருந்து அவர்களின் ரகசியங்கள் எனக்குத் தெரியும் அவர்களின் தெளிவற்ற, விசித்திர எண்ணங்கள் சோகமும் விவேகமும் உடையவளாக என்னை உருவாக்கியிருக்கின்றன ஆனால் உன் கண்கள் என்னை அழைப்பதாகத் தெரிந்தபோதும்– அவை […]
குமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் என்பது ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல். ஆழிக்கடலின் சூறாவளியாய் வந்தவை இந்த அழகியக் கவிதைகள். ரவிசுப்பிரமணியன் அவர்கள் இசையிலும் கவிதையிலும் ஆழ்ந்த அறிவும் நுடபமும் அறிந்தவர். அமைதியாய் உலவுகிற இந்த அற்புத மனிதரிடம் வலை வீசாமலேயே அகப்பட்டு விடுகின்றன அபூர்வமானபடிமங்களோடு பலதரமான அழகியல் அனுபவங்கள் கவிதைகளாய். இவர் கவிதைகளை படைப்பதாய் நான் பார்க்கவில்லை. கவிதைகள் இவரின் வளமான ஈரமான இதயத்தில் முளைத்து வளர்ந்து பரந்து படர்கின்றன. அவரின் […]
ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி உயிர்களின் குடை உடை வீடு கூடு மருந்து விருந்து இலைகள் இல்லாதிருந்தால் செவ்வாயாகி யிருக்கும் பூமிப் பிரதேசம் மொத்த உயிர்களும் செத்துப் போயிருக்கும் காற்றுவெளியை கழிவாக்கும் உயிர்கள் கழுவிப் போடும் இலைகள் இயற்கையின் குளிப்பிடம் இலைகள் ‘இலைகள் உதிக்கும் உழைக்கும் உதிரும்’ ஓர் இலைபோல் வாழ் ஈருலகம் உனக்கு ‘துக்கம் ஏக்கம் பயம் சோகம் […]
(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ என்று மாற்றப்பட்ட தலைப்பில் வெளியானது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) அமுதாப்பாட்டி என்று அக்கம்பக்கத்தில் அழைக்கப்படும் அமுதம்மாள் தூக்கம் வராமையால் தன் சின்ன வீட்டின் வாசற்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். வானத்தைப் பார்த்து இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தவாறு நெடிய கொட்டாவி ஒன்றை விடுவித்தாள். கொஞ்ச நாள்களாகவே இப்படித்தான், தூக்கம் வருவது போல் இருக்கும், ஆனால், படுத்தால் நன்றாக விழிப்புக் […]
அந்த இடைவெளியின் இக்கரையிலும் அக்கரையிலும் ஆசைகள் குவியல் குவியலாய் … அந்த ஆசைகளின் சஞ்சாரம் மனவெளியில் நிரந்தரமாகக் கால்பாவ இயலாமல் துவண்டு விழுகிறது ஆயிரமாயிரம் மனமாளிகைகள் கட்டப்படும் போதே இடிந்து விழுகின்றன ஒவ்வொரு மலரிலும் அவள் முகத்தைப் பொருத்திப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறான் அவன் எல்லா பாடல்களிலும் சோகராகம் இழைவதைக் கேட்கிறாள் அவள் —- அவர்கள் பாதையில் […]
ஜெ.பாஸ்கரன் பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்) காலச்சுவடு பதிப்பகம். “ அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பலதரப்பட்ட மனித உள்ளங்களின் துடிப்புகள் தெளிவாக ஒலித்துக்கொண்டிருக்கும். மேல் நாட்டு இலக்கியத்தோடு ஒப்புவமை கூற எங்களுக்கோர் பஷீர் இருக்கிறார் என மலையாள இலக்கியம் அபிமானம் கொள்கிறது “ என்னும் ஆ.மாதவனின் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை! ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்தக் குறுநாவல், இன்றும் உயிர்த்துடிப்புடன் இருப்பது பஷீர் என்னும் ஆளுமையின் எழுத்தின் வசீகரம் என்றால் […]
ஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான வாழ்க்கை வாழும் ராமநாதன் கோமதி தம்பதியர் 35 வருட தாம்பத்ய பந்தத்தில் நாலு மணியான குழந்தைகள், அரை டஜன் தொடும் பேரன் பேத்திகள் என வரம் வாங்கி வந்த இனிய சூழ்நிலைதான். குடும்பத்தில் ஆனந்தத்திற்கும் சொந்தங்களின் பரஸ்பர அன்பு பரிமாற்றங்களுக்கும் பஞ்சமே இல்லை. தம்பதியரின் பெண்களும் பிள்ளைகளும்,அத்தை மாமாக்களும் ,தாத்தா பாட்டியும் சேர்ந்து ராமநாதனின் சஷ்டியப்த பூர்த்தியான அறுபதாம் கல்யாணத்தை விமரிசையாக கொண்டாட நினைக்கிறார்கள். அதற்கு முனைப்பு எடுத்து செயலிலும் […]
ஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஒரங்கள் விமர்சகர்களின் வரைபடக் கோடுகளை ஒட்டி வராமல் துரத்திக் கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அதுவே வடிவமாகி விடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்… வாசகனை நிமிர்த்தி உட்கார வைக்கும் அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது” என்று “இலக்கிய வட்டம்” ஜூலை 1964 இதழில் எம் .வி. வெங்கட்ராம் பற்றி தி. ஜானகிராமன் எழுதுகிறார். இந்த வரிகளில் காணப்படும் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வெங்கட்ராம் தன் எழுத்தில் நிதானமாகவும் அழுத்தமாகவும் ஸ்தாபித்திருக்கிறார், அவரது அறுபது வருஷ இலக்கிய வாழ்வின் பரிபூரணத்தை அவரது கதைகளில் நாம் காணமுடிகிறது. இதற்கு முன்பு “நிதானம்” என்று ஒரு […]