சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

This entry is part 8 of 20 in the series 19 ஜூலை 2020

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸமிரா கவிதையின் கருப்பொருள்.சல்மாவின் மொழிநடையில் ஒரு மெல்லிய , மிக அழகான நேர்த்தி காணப்படுகிறது. பிரியும் வேளை மௌனத்தில் நனைந்திருந்தன — என்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பிரியப் போகிறோமே என்ற மௌனத்தில் மெல்லிய உறைதலில் மனம் கனக்கிறது. திரைச் சீலைகள் கண்களில் எம் முகங்களை நிரப்பிக் கொள்ள கடும் பிரயத்தனம் கொள்கிறோம் நானும் ஸமிராவும் —- மேற்கண்ட வாக்கியத்தில் எல்லா சொற்களும் முக்கியமானவை. குழந்தை ஸமிரா மனத்தை ஈர்க்கக்கூடியவள் . இதை நயம்படச் […]

புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்

This entry is part 1 of 20 in the series 19 ஜூலை 2020

தேவகாந்தன் நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால்,  புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது. இல்லாவிட்டால் மனைவி அஞ்சனாதேவியின் விருப்பத்தை மீறுகிறவரல்ல நல்லதம்பி. அவரறிந்தவரையில் புற்றுச் சாமியைத் தேடிக் கண்டுபிடித்ததொன்றும்  யாருக்கும் சுலபத்தில் இருந்துவிடவில்லை. மதியத்தில் தேடத் தொடங்கினால்தான் மாலைக்குள்ளாகவாவது அந்த அடர் பனங்கூடற் பற்றைக்குள் அவரைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் நிச்சயமில்லாதது. தியானம் கூடும்வரை  மனித சஞ்சாரமற்ற அப் பனங்கூடலுள் அங்கிங்காய் நடந்து திரியும் புற்றுச் சாமி, எந்த […]

திருவரங்கனுக்குகந்த திருமாலை

This entry is part 9 of 20 in the series 19 ஜூலை 2020

 இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த அளவில் தில்லையும் (சிதம்பரம்) ஆகும். காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறான் அரங்கநாதன். இத்தலத்தைப் பாடாத ஆழ்வார்களே இல்லை எனலாம். கோதை நாச்சியார் அரங்கனோடு ஐக்கியமானதும் திருப்பாணாழ்வார் பெருமானோடு சேர்ந்ததும் இத்தலத்திலேதான்!                                    தொண்டரடிப்பொடி என்ற பெயருக் கேற்ப எம்பெருமானுக்குத் தொண்டு செய்துவந்த இந்த ஆழ்வார் […]

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

This entry is part 17 of 20 in the series 19 ஜூலை 2020

குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய […]

ஏமாறச் சொன்னது நானா..

This entry is part 10 of 20 in the series 19 ஜூலை 2020

கோ. மன்றவாணன்       இந்த உலகம் ஏமாற்றுகளால் நிறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதனால் ஏமாறாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை. ஏமாற்றுகிறவரும் இன்னொருவரிடம் ஏமாந்து போகிறார்.       கல்யாணம் பண்ணிப்பார் வீ்ட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி. புதியதாக வீடு கட்டியவர்களைக் கேளுங்கள். அவர்கள் ஏமாந்த கதைகள் நெடுங்கதைகளாக விரிந்து செல்லும். திருமண விழாவை நடத்திப் பாருங்கள். ஏமாறுவதற்குப் பஞ்சம் இருக்காது. ஏன் திருமணமே கூட ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது.       ஒருமுறை ஏமாந்தால் மறுமுறை ஏமாற மாட்டோம் […]

ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

This entry is part 11 of 20 in the series 19 ஜூலை 2020

குமரி எஸ். நீலகண்டன்                         நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவராவது இந்த நொடியில் பேசிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பர். காற்று போல உலகில் பரவி புகழுடன் வியாபித்து […]

ஆயுள் தண்டனை

This entry is part 12 of 20 in the series 19 ஜூலை 2020

சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு முதிருது மூச்சு திணருது. நாக்கு பிறழுது, வாய் தடுமாறுது, கால் தயங்குது, கை ஆடுது, கண்ணொளி மங்குது. காதொலி குன்றுது. குனிந்தால் நிமிர முடிய வில்லை. நிமிர்ந்தால் குனிய முடிய வில்லை. உடல் நிமிர்ப்பு குன்றிப் போய் புவியீர்ப்பு மிஞ்சிப் போய் […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 20 of 20 in the series 19 ஜூலை 2020

தீர்மானம் – 2 தி. ஜானகிராமனால் 1957ல் எழுதப்பட்ட சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரண லட்சணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக இந்தக் கதை நிற்கிறது. இக்கதையின் அமைப்பு அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு உணர்ந்து செதுக்கப்பட்டுள்ளதால் அனாவசியப் பிசிறு, கோணல்மாணல் அற்று ஒரு பல்லவ சிற்பம் போல அமைந்துள்ளது. ஜானகிராமன் எப்போதும் வணங்கும் சொற்செட்டும் சொல் பொறுப்பும் கதையின் சம்பாஷணைகளிலும் வர்ணனைகளிலும் பிரமிக்கும் அளவு பதிந்து கிடக்கின்றன. இதை இங்கே அழுத்திச் சொல்லக் காரணம், இன்றுள்ள சூழலில் ஒருவர் தனது சிறுகதையில் இயற்கையின் பலவேறுவித விகசிப்புகளை (மரங்கள், வயல்கள், நதிகள் இன்னபிற) வருணிக்கிறேன் என்று ‘நடந்தாய் […]

பிரகடனம்

This entry is part 13 of 20 in the series 19 ஜூலை 2020

ஸிந்துஜா  இன்று இருப்பவனுக்குப்  பொறாமையையும் நாளை வருபவனுக்கு மகிழ்ச்சியையும்  தருபவனே    கலைஞன். . . விரல்கள் வழியே  நினைவுகள்  வழிகின்றன.  மனதின் ரத்தம்  பரவி நிற்கிறது  கறுப்பும் வெளுப்புமாய். உலகு பேசுகையில்  கேட்காத செவிகள்  உலகு பார்க்கையில்  நிழல் தட்டி  மறைக்கும்  கண்கள்  உலகு உணர்கையில்  நிரம்பும் வெற்றிடம்  இவை மூன்றும்   தா.

ஏழை ராணி

This entry is part 14 of 20 in the series 19 ஜூலை 2020

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும். உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை பீறிட்டெழும் நாள் வரின் இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும் அதை எப்படி எதிர்கொள்ளும்……. சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள். சிலர் ஐந்து ரூபாய். அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய். இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க […]