கனடாவைப் கைப்பற்றிய கையோடு பிரிட்டனையும் அபகரிக்கவிருக்கிற பேராசை பிடித்த அமெரிக்கர்களின் திட்டத்தை தெரியுமென்று கூறி ஹெஸ் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அரசாங்கத்திற்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையில் இவோன் கிர்க்பட்ரிக் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். – நம்மிரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயன்தரக்கூடிய யோசனை என்னிடமுள்ளது. ஆனால் அதன் வெற்றி நீங்கள் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தது. இங்கிலாந்து ஜெர்மனுக்குச் சொந்தமான காலனி நாடுகளை அதனிடம் ஒப்படைக்கவேண்டும், அப்படி ஒப்படைப்பீர்களெனில் ஐரோப்பிய அரசியலில் பிரிட்டிஷ் அரசாங்கம் எதையும் செய்யலாம், நாங்கள் தடுக்கப்போவதில்லை, அவ்வாறே எங்கள் […]
“அம்மா இருட்டா இருக்கு”, ரமணி தன் அன்னையின் இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டான். “விளக்கு ஏத்த எண்ணெய் இல்லடா ராஜா. அம்மாவை கட்டி பிடிச்சுக்கோ; பயம் போயிடும்” “உனக்கு தான் தெரியும் இல்ல? நான் சின்ன வயசிலிருந்து இப்படி தான்-ன்னு. எண்ணெய் வாங்கி வெக்க வேண்டியது தானே?” ஒரே நேரத்தில் பயமும், கோபமும்; விசித்திர சேர்க்கை தான். “இந்த வாரம் வேலை கம்மி டா. கஞ்சிக்கே சரியா போச்சு. நீ ஆம்பள புள்ள! நம்மள மாதிரி ஏழைங்களுக்கு […]
இறுக்கங்களுடன் பயணித்து வந்தேன். எப்படி இறுக்கம் தூர்ப்பதென அறியாமல். வினைகளை அற்று வீழ விரும்பினேன். வகிர்ந்து வகிர்ந்து வார்த்தைகளைத் தூவினாய். அதைப்பிடித்துக் கொடியாக வளர்ந்தேன். அவரை கொடிபிடித்து மேகம் துளைத்துப் பாதை அமைத்ததாய் இன்னொரு உலகம் இழுத்துச் சென்றாய் வானவில்லைப் பற்றி நடனமாடியபடி வந்தேன். சித்திரக் குள்ளர்களும் பழச்சோலையும் நி்றைந்திருந்தது. மாயாவிகளும் கௌபாய்களும் ததும்பிய கேளிக்கை அரங்குகள். பார்த்திபனின் கனவை குகை ஓவியமாக களித்தபடி தீப்பந்தத்தில். மூலிகைக் காற்றோடு ஓசோனை சுவைக்கத் தந்தாய் அமிர்தமாய். மூச்சு முட்டத் […]
என்னுடைய வாய்ப்பு அவளுக்கு வழங்கப்பட்டது நானே காரணமாயிருந்தேன் அதன் ஒவ்வொரு அசைவுக்கும். அவளை சிலாகித்தேன் அவளின் ஏக்கங்களை விவரித்தபடி. காற்றில் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் புரவிப்பெண்ணாக அவள் உணரும் தருணங்களை.. ரேகைகளும் பாகைகளும் தொடாத அவளது ஆழிப்பேரலையான அனுபவத்தை விவரித்தபடி. விண்ணோக்கி நகரும் ஊர்தியில் அவளை ஏற்றியநான் ஏணிப்படியாயிருந்தேன்., மிதித்துச் செல்லட்டுமென. ஏற்றிவிட்ட பெருமிதத்தில் சுகித்தபடி இருந்தேன் என்னுடைய இடத்திலேயே என் வலியை ரசித்தபடி.
குற்றத்தினை கையாள்வது மிகவும் அசாதரமானது ஆனாலும் அனைவரும் எளிதாக கடந்து விட கூடிய இயல்பாகி விட்டது . குற்றங்கள் எப்பொழுதும் தனித்து விடப்பட்ட தன்மையை பெற்றிருப்பதால் அதனை நீங்களும் நானும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . எந்தன் குற்றத்தினை உங்களின் குற்றங்களுடன் இப்பொழுது சேர்த்து கொள்கிறேன் நீங்கள் எதுவுமே கேட்கப்போவதில்லை அதற்கான அவசியம் என்றுமே இருக்கப்போவதில்லை . உணர்த்துவதற்கு என்று படைக்கப்பட்ட மனம் தொலைந்து விட்டதை குற்றங்கள் மட்டுமே அறிந்திருக்கிறது . நானும் நீங்களும் ஒன்றிணைப்பது மனித உயிரினத்தால் […]
விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘இலக்கியப்பூக்கள்-2’ நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும். *நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது. அனுப்ப வேண்டிய முகவரி:R.MAHENDRAN. 34.REDRIFFE ROAD, PLAISTOW. LONDON, E 13 0JX மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk. mullaiamuthan@gmail.com […]
மழையில் எந்த மழை சிறந்தது? சிறு தூறலா, இல்லை அடித்துப்பிளக்கும் மழையா? வெறுமனே போக்குக்காட்டி விட்டு போகும் மழையா? அல்லது சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில் கிளையிலிருந்து சட்டெனப்பறந்து போகும் பறவை போல, தூறிக்கொண்டிருந்து விட்டு சட்டெனக்கலையும் மழையா? அல்லது நேற்றுப்பெய்த மழையா ? இல்லை, அது கொஞ்சமே பெய்தது. இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா? அது இன்னும் பெய்து முடியவில்லையே பிறகெப்படி சொலவது ? அன்று பெய்த மழை, நேற்று பெய்த மழை இன்றும் பெய்யும் மழை […]
கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு அவனை விட மோசமாக இருக்கிறானே என்று சுற்று முற்றும் பார்த்தான். தியாகுவின் சுவடே காணோம். மண்டபத்தைச்சுற்றி மரங்களும் கொடிகளும் செடிகளும் ‘ பசேல் ‘ என்று பரவிக் கிடந்தன. சாமியார் மண்டபத்துக்கு இடது புறமும், வலது புறமும் வயல்கள் வீசிக் கிடந்தன. காற்றில் ஆடிய நெற் பயிர்களின் பச்சை கண்ணை வந்து அடித்தது. சாமியார் மண்டபத்தில் […]
இந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க மிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த அந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய் தொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த ரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம். சாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும் கருகிய வேதனையின் வரைபடம் சூலாயுதங்களின் கூர்முனைகளில் பிறையும் பொழுதும் அறுபட்டுத் தொங்குகிறது. மேசைமீது கிடந்த நினைவுக் குறிப்புகளிலிருந்து வெள்ளைக் கொடி வீசி மெல்ல எழும்பிவந்த கருணை சொரியும் அந்த கண்கள் தீரா கோபத்தின் தாண்டவ உடல் மறுபடியும் சீறிப் […]
அரிதான காட்சிதான்! விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் ஒரு வீட்டு பூனை! என்னவெல்லாம் சாகசம் செய்கிறது! பாயும் புலியாக! ஆடாமல் அசையாமல்! பதுங்கி பாய்ந்து! தாவிக்குதித்து! தடம் பார்த்து! தீவிரமாய் திட்டம் தீட்டி! அடி மேல் அடி வைத்து! கிளைக்கு கிளை தாவி! இருட்டில் இப்படியும் அப்படியும் இடைவிடாது அழையும் பூனை! அரிதொன்றும் இல்லை விடிந்தால் மறையும் விண்மீன் கண்டு அரிதாரம் பூசி ஆட்டம் காட்டும் நட்சத்திர நாயகர்கள்-காண்! அசட்டு ஆசாமிகள்காண்!