கற்றுத் தரல்  

This entry is part 9 of 19 in the series 25 ஜூன் 2023

வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத்  தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும்  இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண்.  கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை  காகம் அறியாது. வாலால் அடிக்க இயலாமல் முடிந்தமட்டும் தலையை ஆட்டிப் பார்க்கிறது காளை. விலகி விலகிப் போனாலும்  மீண்டும் மீண்டும் வந்து   கொத்தி வாழ்க்கையைக்  கற்றுத் தருகிறது காக்கை. 

உள்மன ஆழம் 

This entry is part 8 of 19 in the series 25 ஜூன் 2023

வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால்  ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும்  சுருள் புகையும் எப்படிச்  சுற்றிச் சுற்றி  அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில்  என் காலை மிதிப்பது  தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே. அருகருகே தோளுரசி  நடக்கும்போது இருவரும் கைகள் கலந்தும்  கலக்காமலும் போனதையும்  கவிதையாக்கி இருக்கிறாய். ஆனால் கல்லிலிருந்து  தலை நீட்ட மறுக்கும் பாம்புக் குட்டியாய் நீ பரிதவிப்பது தெரிகிறது. நீ ஒப்புக் கொள்ளாவிடினும் உன் உள்மன […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900

This entry is part 7 of 19 in the series 25 ஜூன் 2023

  கபிதாள்.  கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே! பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள்.  அது இரண்டு வருஷத்துக்கு முன். […]

மாணவர் சேர்க்கையும் பேராசிரியர்கள் நிலையும்

This entry is part 6 of 19 in the series 25 ஜூன் 2023

– முனைவர் ம இராமச்சந்திரன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தமிழ்நாடு முழுவதும் உயர் கல்விக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவம் பொறியியல் கலை மற்றும் அறிவியல் பாலிடெக்னிக் மற்றும் பல படிப்புகளில் சேர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளிலோ அரசு வேலை வாய்ப்பிலோ தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முக்கியமான காலகட்டமாக இக்காலம் விளங்குகிறது. பெற்றோரின் வசதிக்கேற்பவும் மாணவர்களின் திறன்சார் ஆற்றலுக்கு ஏற்படவும் மாபெரும் […]

பழித்தலும் பழித்தல் நிமித்தமும்

This entry is part 5 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான் பொம்மைகளைக் கொண்டாடி மகிழும் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது நாம் நம்மீது கொண்டது அழுக்கடர்ந்து சட்டை கிழிந்தலையும் பைத்தியத் தனமாய் இருக்கிறது காலம் நம்மீது கொண்டது நான் உன்னை அன்பு செய்கிறேன்  என பகிரியிலும் உரையாடல்களிலும் எவ்வளவு அபத்தமாய் சொல்லியிருக்கிறேன் நீயில்லாத வாழ்வை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதென நான் சொன்னதை இப்போது நீ நினைத்திருந்தால் ஏளனமாய் சிரிப்பாய் தானே அதனதன் போக்கில்  காலத்தை நாம் பழிவாங்கியது போல் அதுவும் நம்மைப் பழி கொண்டது. […]

தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டவர்

This entry is part 4 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான் நீங்கள் யாரென்றே தெரியாத என்னிடம் தானாய் வந்து கைக்குலுக்கி உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர் சுய புராணத்தை புகழ விட்டீர் தோள்மீது கை போட்டு உடன் வந்தீர் சூடாய் தேநீர்ப்பருக கூட்டிச்சென்றீர் கோப்பையின் வெதுவெதுப்பாய்ப் பேசத்தொடங்கினீர் இடது கையின் இரண்டு விரல்களுக்கிடையில் புகைச் சுருட்டை புகைத்துத் தள்ளினீர் எதற்கும் நினைவாய் இருக்கட்டுமேயென சிரித்த முகத்துடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டீர் தூரத்தில் யாரோ காணத்தெரிந்ததும் கைத்தட்டி இருக்கச்சொன்னீர் இதோ வருகிறேன் என ஓடிப்போய் கைக்குலுக்கினீர் பழைய பாக்கி சொச்சத்துடன் […]

நட்புக்காக

This entry is part 3 of 19 in the series 25 ஜூன் 2023

உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள்.  எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் […]

ஆதியோகி கவிதைகள்

This entry is part 2 of 19 in the series 25 ஜூன் 2023

ஆதியோகி நிழல்களைப்பாதிப்பதேயில்லை,நிஜங்களின்உணர்வுகள்…!***நிர்வாணம் என்கிறஒற்றை நிஜத்தைமறைப்பதற்குத்தான்விதவிதமாய்எத்தனை ஒப்பனைகள்…!***என்னதான் கடந்துவந்துவிட்ட போதிலும்அவ்வப்போதுஉணர்வுகளின் ஊடாய்முகம் காட்டி விட்டுத்தான்போகின்றன,முந்தைய பல பரிமாணங்கள்…!                                      – ஆதியோகி +++++++++++++++++++++++

முள்வேலிப் பூக்கள்

This entry is part 1 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான் வேலி சலசலக்க முன் விரைந்தோடுகிறது ஓர் அணில் அதன் அடியொற்றி பின் துரத்துகிறது மற்றொன்று வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும் படர்ந்திருக்கிறது அன்றலர்ந்த பூக்கள்.      -கோவிந்த் பகவான்