சருகான கதை

This entry is part 8 of 18 in the series 5 மார்ச் 2023

ஆதியோகி + பிணைப்பில் கொஞ்சம் தளர்வை எப்படியோ அடையாளம் கண்டு  உலுக்கி உலுக்கி அசைத்துப் பிரித்தெடுத்துத் தன்னோடு அழைத்துப் போய்க் கொஞ்ச நேரம் அந்தரத்தில் ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப் பிறகு குப்பையில் சேர்த்து விட்டுப்  போயிற்று காற்று…!                                     – ஆதியோகி

சுமைகள்

This entry is part 7 of 18 in the series 5 மார்ச் 2023

பருத்து வீங்கிய பணப்பைகையிலும் அடங்கவில்லைபையிலும் அடங்கவில்லைஅதக்கிய குரங்குவாய் மாதிரிசே! ஒரு நாள்சுங்கச்சாவடியாகிபணப்பையை சலித்தேன் காலாவதி பற்றுச்சீட்டுகள்ஒரு காலாவதி சிம்அட்டைசில மாத்திரைகள்பயனற்ற சாவிஒரு ஊக்குஇந்திய ரூபாய்கள்ஒற்றுத்தாள்கள்கடைச்சாமான் பட்டியல்கள்புகைப்படங்கள்பெயர் அட்டைகள்பேசி எண்கள்பல்குச்சிகள்செவிப் பஞ்சுகள்ஒரு பித்தான் இத்தனை சுமைகளோடுதான்நானா அமீதாம்மாள்

வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10

This entry is part 6 of 18 in the series 5 மார்ச் 2023

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 18 in the series 5 மார்ச் 2023

அக்கம்பக்கத்தில்தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..அவ்வளவுதான்ஏதும் செய்யவியலாது.இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.தற்கொலை செய்யத் துணிந்தவர்கோழையா தைரியசாலியாஎன்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோதான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்பொருட்டோநடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலைஅல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாதஅரைகுறை நம்பிக்கையில்…..நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்இல்லாத பெட்ரோல், அல்லதுஇருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,மங்கலாகிவிட்ட பார்வை,எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..கற்பனையாய் குழந்தைகள் […]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

This entry is part 4 of 18 in the series 5 மார்ச் 2023

யாழன் ஆதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது. வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். சிறந்த கவிதைத் தொகுப்பு  : கொடிச்சி             – திரு.என்.டி.ராஜ்குமார் சிறந்த சிறுகதைத் தொகுப்பு : பஞ்சவர்ணக் குகை   – திரு.நட.சிவகுமார் சிறந்த நாவல்              […]

நினைவில் படபடத்த தட்டான் பூச்சி

This entry is part 3 of 18 in the series 5 மார்ச் 2023

கு. அழகர்சாமி அசதியாயிருக்கும் அந்திவானில் சுறுசுறுப்பாய்த்  திரியும் தட்டான் பூச்சிகள் கண்டு சிறு வயதில் நான் குறும்பாய் வாலில் நூலை முடிச்சிட்டு வேடிக்கை பார்த்த ஒரு தட்டான் பூச்சியின் நினைவு உயிர்த்தது. உயிர்த்த என் நினைவில் உயிர்த்துப் படபடத்த தட்டான் பூச்சி பறக்கும் மற்ற தட்டான் பூச்சிகளோடு சேர்ந்து என் நினைவின் பிடியிலிருந்து தப்பித்துப் பறந்து போக ஆசைப்பட்டது. ஆசையாய் அது பறந்து போக, என் நினைவுள் நான் நுழைந்து நான் முடிச்சிட்ட நூலை நானே அவிழ்த்து […]

அகழ்நானூறு 17

This entry is part 2 of 18 in the series 5 மார்ச் 2023

சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய‌ விரல் அளைக்கோடுகள் வரிய வரிய‌ சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும் மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து கசிநீர் விசும்பில் கனவின் எரிந்தாள். கடையல குரலம் கழையூடு கஞல‌ அடர்வெங்கானம் நடைபயில் உழுவை பைந்நிணம் கிழிக்க பாய்தந்தன்ன‌ பிரிதுயர் பிய்த்த உயிர்நைந்தாள் என்னே. யா மரத்துச் சாமரத்தன்ன அணிநிரல் பூக்களின் படுநிழல் ஆங்கு வேழம் கிடந்த உருசெத்து […]

படபடக்கிறது

This entry is part 1 of 18 in the series 5 மார்ச் 2023

ருத்ரா பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.அதன் முகமோ முழுநிலவாகவேஎப்போதும் உனக்குபால் வார்க்கிறது வெளிச்சத்தில்.வாழ்க்கைப் புத்தகம்புத்தக திருவிழாக்களில்அகப்படுவது இல்லை.மகிழ்ச்சியும் துயரமுமேஅச்சுக்கூடங்கள்.அந்த புத்தகத்தைபுரட்டிக்கொண்டிருக்கத்தான்உன்னால் முடியும்.எழுத்துக்கூட்டி வாசித்துப்பார்.உயிர் எழுத்துக்கு மெய் எழுத்துஒட்ட வருவதில்லை.உயிர் மெய் எழுத்துக்கூட்டங்களும்கூட‌வெறும் உணர்ச்சிகளின்கூட்டாஞ்சோறு மட்டுமே.பசியும் சோறும்பந்திவிரிக்கும் நாட்களில்உன் புத்தகம் காற்றில்படபடக்கிறதுவெற்றுப்பக்கங்களாய்!