கீதங்கள் இசைத்து கிரிக்கட் விளையாடி வெள்ளித் திரையில் சின்னத் திரையில் மேடைகளில் நடித்து கொலை செய்து கொள்ளையடித்து தாதாவாகி மிரட்டி அதுவும் முடியாதெனில் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையொன்றையாவது பிரயோகித்து பெயரை உருவாக்கிக் கொண்டு உருவத்தை அலங்கரித்து உடலைச் சமைத்து அப் பெயரை விற்று தேர்தலில் வென்று அமைச்சரவையில் ஆசனமொன்றையும் பெற்றுக் கொள்ளும் சோறுண்ணும் எருமைகள் அநேகமுள்ள நாட்டில் புல்லுண்ணும் எருமைகள் வாழ்க !!! – பியன்காரகே பந்துல ஜயவீர (சிங்கள மொழியில்) தமிழில் – […]
இன்று வியாழன்… நேற்றுதான் சென்றது வெள்ளிக் கிழமை, எத்தனை வேகமாய் கடக்கிறது இந்தியனின் இளமை அமீரகத்தில்?! எத்தனை காலமல்ல குடும்ப வாழ்க்கை எத்தனை தடவை என்றாகிப்போனதே! ஊரிலிருந்து வந்த நண்பன் உன் நினைவுகள் மொய்க்கும் பெட்டியொன்று தந்தான். அட்டைப்பெட்டியின் மேல் எழுதியிருந்த என் பெயர் சற்றே அழிந்தது நீ அட்டைப் பெட்டி ஒட்டிக் கட்டுகையில் பட்டுத் தெறித்த உன் நெற்றி பொட்டின் வியர்வையா சொட்டுக் கண்ணீர் பட்டா? […]
நான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும் குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய் ஆனாலும் உன் முன்னால் உனைச் சூழச் சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் உனைக் காண்பவர்க்கெலாம் நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க் கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும் எனக்குள்ளிருக்கும் உன் மழைக்கால நினைவுகளைத்தான் நீ மீட்கிறாயென எனை உணரவைக்கிறது எனது தூய்மை மட்டும் […]
* முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர் அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல் குருதிச் சுழியிலென் மண்டையோடுகள் ஓய்வற்றுச் சுழல்கின்றன * *** கலாசுரன்
வசந்தகாலம் துவங்கியதால் சாலையின் இருபுறமும் பசுமை துளிர்க்க ஆரம்பித்து விட்டது.அமெரிக்க கிராமபுற சாலையொன்றில் தனியாக என் காரில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.கேரிகன் பிரதர்ஸ் வைனரி 1 மைல் என்ற போர்டு என்னை வரவேற்றது.வைனரியை நெருங்கினேன்.காரிகன் பிரதர்ஸின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரம் வெளியே என்னை வரவேற்றது. சாதா விவசாயிகள்…குடும்ப தொழிலாக விவசாயம் செய்து மது விற்கிறார்கள்.சர்வசாதாரணமாக விளம்பரம் செய்கிறார்கள்.எந்த பிரச்சனையுமின்றி தொழிலில் ஈடுபடுகிறார்கள்.அமெரிக்க அரசு மதுவிற்பனையை தேசியமயமாக்கவில்லை.மது விற்க மந்திரியின் கையை காலை பிடித்து லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை.மதுக்கடை […]
புதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை. அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் […]
வணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ மீரான் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும், என்றும் மாறா அன்புடன் நந்திதா
சூர்யா சாலையில் சிங்கமாய் சீறி இயந்திரக் குதிரைகளில் பறந்தவர்களை காவல் துறை கேமிராக் கண்களில் பார்த்து கைகளில் விலங்கை மாட்டியது. சிறையின் கம்பிகளுக்குள் இருந்து கண்ணயர்ந்தவர்களின் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள்.. போட்டிகளுக்கென்றே களங்கள் இருக்கின்றன.. திறன்களையெல்லாம் அங்கே கொட்டினால் கோப்பைகளெல்லாம் வீட்டில் குவியுமே என்று.
”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு’ எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே […]
முள்ளால் தைத்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள் கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா என்றவொரு ஏக்கம் இன்றும் என் மனதில் தவியாய் தவிக்கிறது எம் உறவுகளின் சாம்பல் மேடுகளில் பட்டு வரும் காற்றை சுவாசிக்கும் கொடுமை அழுகுரல்கள் நிறைந்த அந்த அவல ஓசையின் எதிரொலிகளை கேட்கின்ற சுமைகள் அரச பயங்கரவாதம் எம்மவர் சதை தின்று நரபலி எடுத்த நினைவுகள் பசியால் துடிதுடித்தே இறந்து போன சொந்தங்கள் உடல் உபாதையினால் உயிர்விட்ட எம் உறவுகள் நோயின் உச்சத்தில் […]