இயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது எதையும் அடக்க முடிவதில்லை ஒண்ணுக்குப் போவதை ரெண்டுக்கு வருவதை கடைவாயில் வழியும் எச்சிலை. ஆனால் அடங்கிப் போய் விட்டது கவிதையில் உருகுவதும் கதையில் மயங்குவதும்.. ஒப்பனைகள் அப்பாவின் நிழல் கலைஞரின் கால் நெல்வேலிக் கைகள் காளானாய் முளைத்த கள்ளக் குரல்கள் இவையேதுமில்லா எனக்கெப்படிக் கிடைக்கும் உள்நாட்டு […]
தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன், விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே. [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு] இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால் தம் உயிரை விட்டு விடாது, அத்தலைமுன் தங்கள் உடலின் மூலாக்கினியை மேலெழச் செய்து, யோகாக்கினியான விளக்கை ஏற்றுவர். ===================================================================================== அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார் நகவனச மலர்குவிய வலம்வருவர் தாமே. [92] […]
நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் உலுக்கிக்கொண்டுள்ள கரோனா சக்தி வாய்ந்ததா? இல்லை நாம் வணங்குகின்ற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களா? நாம் சார்ந்துள்ள மதங்கள், சாதிகள் சக்தி வாய்ந்தவைகளா? உலகத்துக்கே தலைவன் நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் வல்லரசு நாடுகள் சக்தி வாய்ந்தவைகளா? அல்லது பணம் படைத்தவர்கள் சக்தி வாய்ந்தவர்களா? உலகம் முழுக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் இவை போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள். கரோனாவால் கொத்துக்கொத்தாக மடியும் அமொிக்க மண்ணில் அடுத்த அடி ‘டோனேடோ’ எனும் கடும்புயல். […]
உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் முட்களுக்கு ஆதரவளிக்கின்றன என்னை வாரிவாரி விழுங்கிய பின்னும் எச்சத்தின் தவிப்பு திறந்து போடுகிறது பெரும் ஆசை வெளியை… என் எல்லா சொற்களையும் பிடிங்கிக் கொண்டு எப்போதாவது ஒன்றிரண்டை என் கையில் திணித்துப் போகிறாய் சுருள் சுருளாய் விழுகின்றன ஆசைகள் இருள் இழைத்து இழைத்துக் குவித்ததில்… காலத்தின் முன் வலைப்பட்டுக் கட்டுண்ட என் காலடியில் நகர்கிறது பூமி தன் முடிவிலாப் பயணமாய்…
முகநூல் எழுத்து என்பது அழகான கனவு. அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு. ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான நண்பர்கள். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்குகள் குவியும் . பலர் அதை பகிர்வார்கள். பாராட்டி பலர் பின்னூட்டம் போடுவார்கள் . ஒருமுறை தனது,நூல் வெளியீட்டு விழாவுக்கு தன் ரசிகர்களை அழைத்தார். சூப்பர் தல, சுற்றம்சூழ வந்து விடுகிறோம் என பலர் பின்னூட்டம் போட்டார்கள். லைக்குகள் குவிந்தனகடைசியில் பார்த்தால் விழாவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர்தான். இருவரும் அவருக்கு […]
கோ. மன்றவாணன் தமிழகத்தின் பல ஊர்களில் இலக்கிய அமைப்புகள் உள்ளன. அவர்களால் முடிந்த அளவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிலர் இலக்கியத்தையும் தமிழையும் வளர்க்கிறார்கள். சிலர், தங்களைப் பற்றிய புகழை வளர்ப்பதற்காகவே அந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். நெல்லுக்குப் பாயும் போது சற்றுப் புல்லுக்கும் பாய்வதுபோல் என்றொரு பழமொழி உண்டு. நெல்லுக்குப் பாய்வதுபோல் தங்களின் புகழை வளர்த்தாலும் புல்லுக்குப் பாய்வதுபோல் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் சிறுபயன் கிடைக்கத்தான் செய்கிறது. பட்டி தொட்டி எங்கும் நாடு நகரம் […]
பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , […]
அ. « you don’t value a thing unless you have it » அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில் கவிஞன் வாழ்கிறான். « நூலுக்காக கவிதைகள் அல்ல , கவிதைகளுக்காக நூல் ». கவிதைக்கு மட்டுமல்ல கலை, இலக்கிய ஆக்கங்களுக்கும் இம்முத்திரை பொருந்தும். « The Laguna » என்றொரு ஆங்கில நாவல். ஆசிரியர் Barbara Kingsolver . ஆழ்நீரில் மூழ்கும் விளையாட்டில் […]
எம். வி வெங்கட்ராம் (பி.1920 – இ. 2000) ‘இலக்கிய வட்டம்’ என்றொரு மாத இதழ் தொடங்குவதற்கு அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. இரண்டு பத்திரிகைகள் நடத்தி சேதப்பட்டவர் அவர். தேனீ மாத ஏடு நடத்தி எனக்கு உண்டான நஷ்டத்தின் அளவு அவருக்குத் தெரியும். படைப்பாளிகளின் கலை ஆர்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு எவ்வளவு கொடிய சோதனைக்குக் காரணம் ஆகிறது என்று எனக்கு மட்டுமல்ல,அவருக்கும் தெரியும். இலக்கிய வட்டத்தால் உடனடியாகப் பாதிக்கப்படப் போகிறவர்கள் ஸ்ரீமதி க.நா.சு.வும், மகளும்தான். ஆனால் அவரோ உற்சாகமாகப் பேசினார்: “எம்.வி.வி. முதல் இதழிலிருந்தே நீர் எழுத வேண்டும்.” எழுதுவதைக் காசாக்க வேண்டிய இக்கட்டில் […]
செந்தில் நிலத்தை வெற்றி கொள்ளபந்தயமிட்டு பற்றிப் பரவும்பாதங்கள் அற்ற பாம்பும்,மண் புழுவும் காலத்தின் குறியீடு! வேர்கள் விலங்கிட்டாலும்விசும்பை வெற்றி கொள்ளவிண்ணோக்கி உயரும் மரம் செடி கொடியும் காற்றின் குறியீடு! காலத்தை வெற்றி கொள்ள இரவும் பகலும் எந்நாளும் திசை மாறாது சுழலும் திங்களும் ஞாயிறும் நிலத்தின் குறியீடு! பால் (ழ்) வெளியில் பலகோடி நூறாண்டு பரமபதம் விளையாடும் விண்மீன்கள்காலாதீதத்தின் குறியீடு! கண்ணுக்குத் தெரியாத காலாதீத கணங்களை குறிக்க கணக்கில் அடங்கா தெய்வங்கள்! காற்றில் ஒருகாலும், சேற்றில் […]