அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி

This entry is part 9 of 24 in the series 25 அக்டோபர் 2015

  சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது…   அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது… சேறுகளும், சகதிகளும் அதை ஒன்றும் செய்யவில்லை…   மீன்கள், தவளைகள், புழுக்கள், பூச்சிகளென எல்லோரையும் அன்பாய் அரவணைத்தது அந்த மலர். அதன் வேர்கள் ஒரு பெரிய தணியா தாகத்துடன் விரிந்து விரிந்து பூமியின் அகல […]

இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்

This entry is part 10 of 24 in the series 25 அக்டோபர் 2015

தமிழாசிரியர்களின் கவிதைகளைப் படிக்கையில் கொஞ்சம் பயம் ஏற்படும் எனக்கு. புறக்கணித்து வசவாய் சிலர் தள்ள முற்படுவார்கள். என் பயம் அப்படியல்ல. மொழியை நன்கு கற்றுணர்ந்தவர்கள் மொழியைப் பிரயோகிப்பதிலும் இறைச்சி, திணை என்று என்னென்னவோ பாகுபாட்டில் அவர்கள் கவிதையை  சங்க  விளக்கத்தில் நிறுத்தி விடுவார்கள். அப்படி இனம் காண முடியாத சிக்கலில் வேறு வகையான விமர்சன பாதிப்பில் இன்னோரு புறம் நின்று அவர்களின் கவிதைகளைப் பார்ப்பது சவுகரியமாகப்படுகிற பட்சத்தில் அவர்களின் பிரத்யோகப் பார்வை மனதில் பிடிபடாமல் போகிறதே  என்ற […]

கவிதைகள் – நித்ய சைதன்யா

This entry is part 11 of 24 in the series 25 அக்டோபர் 2015

பா.சங்கரநாராயணன் 1. அன்றும் அவனுக்காக காத்திருக்கும் உன்னைக் கண்டேன் ஒன்றுமே நடக்காததைப்போல அத்தனை அழகையும் முகத்தி்ல் தேக்கி மலா்களின் வாசனை கிரக்க மாலை மயங்கும் எழிலுடன் திண்ணையில் அமா்ந்திருக்கிறாய் எப்படி முடிகிறது உன்னால் பிள்ளைகளையும் உன்னையும் பிறிதொருத்திக்காக பிரிந்தவனை இன்னமும் நம்பி இல்லறம் தொடர. .———————————————– 2 சுவா்களுக்குள் இருந்து முளைக்கும் மாயக்கரம் பற்றி அடா்வனம் புகுந்தபின் அழைக்கிறாய் பசுமையின் அலையடிப்பில் வழிதெற்றி திசைபோதமற்று உன்பாதச்சுவடுகள் தேடி பயணம் இலைகள்தேக்கிய குளுமையில் அழைத்துச்செல்கிறது காடு அவிழா புதிர்களின் […]

அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

This entry is part 12 of 24 in the series 25 அக்டோபர் 2015

ஒருவன் தன் தாய்நாட்டை இழப்பதைப்போல் துன்பம் வேறு எதுவும் இல்லை என்று கிரேக்க அறிஞர் யூரிப்டஸ் கி.மு.431 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். அக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணை இழப்பது அல்லது பிரிவது என்பது துயரங்களில் எல்லாம் கொடிய துயரமே. பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மரபுகளையும் நேசித்து அவற்றோடு ஒன்றாய்க் கலந்துவிட்ட மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல மிகப்பெரிய துயரத்தை தரக்கூடியதாகும். இவ்வாறான சோகமும் கொடுமைகளும் எந்தெந்த நாடுகளில் உருவாக்கப்படுகிறது. அல்லது உருவாகிறது என […]

அவன், அவள். அது…! -7

This entry is part 13 of 24 in the series 25 அக்டோபர் 2015

தலையைக் குனிந்தவாறே இருந்த கண்ணனை சேதுராமனின் வார்த்தைகள் ஆட வைத்தன. உன் அப்பா அம்மா கஷ்டத்திலே இருக்காங்கன்னா அதுவும் அது மனக்கஷ்டம்னு தெரிஞ்சா அது முதல்லே எனக்குமுண்டு…அதை என்னன்னு அறிஞ்சு தீர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. கடமை. அதான் உடனடியாப் புறப்பட்டு வந்தேன். உங்கப்பாவும் நானும் சகோதரர்கள். அவனுக்கு ஒரு துன்பம்னா அது எனக்கும்தான். அந்தக் குடும்பத்துல இருக்கிற சந்தோஷம் எல்லாமும் அவங்களுக்குன்னா, அங்கே கவிழ்ற துன்பத்தை நான் கையிலெடுத்து அதை சந்தோஷமா மாத்திக் கொடுக்கிறதை […]

தொடுவானம் 91. தேவை ஒரு பாவை

This entry is part 14 of 24 in the series 25 அக்டோபர் 2015

நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் சந்திப்பு அடைந்தேன். சூடாகத் தேநீர் அருந்தியபின் இருக்கையில் படுத்துவிட்டேன். அது முதல் வகுப்பு பெட்டி என்பதால் என்னைத்தவிர வேறு பிரயாணிகள் இல்லை. வண்டி ஓடும் வேகம் தாலாட்டு போன்று உறங்கமூட்டியது. விடியலில்தான் கண் விழித்தேன். கண்ணமங்கலம் தாண்டியாயிற்று. இனி வேலூர் கண்டோன்மென்ட்தான். கழிவறை சென்று முகம் கழுவிக்கொண்டேன். சன்னலைத் திறந்து விட்டேன். ஜிலிஜிலுவென்று குளிர் காற்று உள்ளே புகுந்தது. காலைப் பனி மூட்டம் வெளியில் படர்ந்திருந்தது. இங்கு ஆறுகள் இல்லை. வானம் பார்த்த […]

அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

This entry is part 15 of 24 in the series 25 அக்டோபர் 2015

அதங்கோடு கிராமம் குமரி மாவட்டத்தில் உள்ளது. அனிஷ்குமார் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுக் கல்லூரியில் பணிபுரிகிறார். ‘ நிறங்களின் பேராசைக்காரர்கள் ‘ என்ற தொகுப்பில் 51 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளில் சில புரியும். சில பூடகத்தன்மை அல்லது இருண்மை கொண்டு கடினமாக இருக்கும் பொதுவாக , சொற்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. சக மனிதர்களை விமர்சிக்கும் உள்ளடக்கம் கொண்ட கவிதைகள் சில உக்கிரம் மிக்கவை ! ‘ விலங்கிடும் விலங்குகள் ‘ மனிதக் குணக்கேடுகளைக் காட்டும் விமர்சப் பாங்கானது. […]

அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

This entry is part 16 of 24 in the series 25 அக்டோபர் 2015

சத்யபாமா  ராஜகோபாலன் அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி….. கலைத்தாயின் புதல்வன் கலைத்தாயின் தினத்தன்று அவள் திருவடிகளை அடைந்துள்ளார். தமிழ் எழுத்துலகிற்குப் பெரும் நஷ்டம்…. மலர் மன்னனும் அவரும் எழுதும் கட்டுரைகளை ஒருவருக்கொருவர் படித்து தங்கள கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்….. கடைசியாக அவர் சென்னை வந்தபோது பார்க்க முடியவில்லை என்னால்…. இன்னன்பூரான் சௌந்தர் ராஜன் ஐயா சொன்னார். ஸ்வாமிநாதன் பெசண்ட் நகரில் இரு தினங்கள் முன் நான் சந்தித்தேன் நீயும் போய் பார்மா என்று கூறினார்.என் உடல் நலம் சரியில்லாத […]

அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 17 of 24 in the series 25 அக்டோபர் 2015

  தமிழில் முதுகலை முடித்து மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அ. ரோஸ்லின். ‘ அழுகிய முதல் துளி ‘ பெண் எனும் மழை ‘ , ‘ மஞ்சள் முத்தம் ‘ என மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். செறிவான நடை கொண்ட கவி மொழிக்குச் சொந்தக்காரர். புதிய புதிய சொற்சேர்க்கையால் சுய நடை இவர் கவிதைகளில் முன்நிற்கும் நல்லியல்பாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ மஞ்சள் முத்தம் ‘ […]

உயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!

This entry is part 18 of 24 in the series 25 அக்டோபர் 2015

அலைக்கற்றை ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற இன்னும் பல்வேறு ஊழல்களில் கோடிக்கணக்கில் பணத்தை ஏப்பம் விட்டு எழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு அடி கோலிய காங்கிரசுக்குப் பாடம் புகட்ட எண்ணி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து அதை அரியணையில் அமர்த்தியது சிங்கத்திடமிருந்து தப்பிப் புலிவாயில் ஒருவன் சிக்கிய கதையைத்தான் நினைவூட்டுகிறது. தெய்வம், தேசம் ஆகியவற்றக் காட்டிலும் மதத்தின் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்களுக்கு வாக்களித்தால் என்ன நேரும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி […]