நினைவு

This entry is part 30 of 43 in the series 24 ஜூன் 2012

மராத்தி மூலம்- சதீஷ் அலேக்கர் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி   திரை விலகும் போது மேடையில் அடர்த்தியான இருள்.    மெல்ல ஒளிபடர்ந்து மேடையில் இருப்பவை மங்கலாகக் காட்சிக்குக் கிடைக்கின்றன.  மேடையின் ஒருபுறம் உயர்ந்த சாய்மானம் கொண்ட சிம்மாசனம் போன்ற இரு நாற்காலிகள் இருக்கின்றன.  இந்த நாற்காலிகளிலும் ஒரு ஆணும் ஒரு பெண்மணியும்  ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.  பெண்மணிக்கு   35 வயது இருக்கும். ஆணுக்கு சுமார் 40 வயது இருக்கலாம். இரு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7

This entry is part 27 of 43 in the series 24 ஜூன் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

காசி

This entry is part 25 of 43 in the series 24 ஜூன் 2012

மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை குயிலிக்கு. யாராக இருக்கும் இந்த மனிதர்… பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்குதே என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்று, மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்தாள். நல்ல வேளையாக மூச்சு இருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், நெற்றியின் இடது புறம் இரத்தம் வந்து காய்ந்து கிடந்தது. சுய நினைவின்றி கிடப்பது தெரிந்தது. யாரையாவது துணைக்குக் கூப்பிடலாம் […]

மஞ்சள் கயிறு…….!

This entry is part 22 of 43 in the series 24 ஜூன் 2012

திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு  நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின்  கார் விர்ரென்று கிளம்பிச் சென்றது. உள்ளே நுழையும் மகளை…வா…வா..என்ன திடீர் விஜயம்..? என்றழைத்த பார்வதியின்  மனசு “வந்ததும் வராததுமா…இப்போவே கேட்காதே…ன்னு தடுத்தது…” . ” ம்மா….இன்னைக்கு நேக்கு ஒரே…தலைவலி…அதான்…ஆஃபீஸுக்கு  லீவைப் போட்டுட்டு சுரேஷை இங்கே  இறக்கி விடச் சொன்னேன்…ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிப்பான்.  சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு செருப்பை ஓரமாக  கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள்  கைப்பையில் இருந்து தான்  கொண்டு […]

திருடுப் போன கோடாலி

This entry is part 17 of 43 in the series 24 ஜூன் 2012

ஒரு விறகு வெட்டி ஒரு நாள் காலை, விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். விறகை வெட்டி கட்டுக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தான். தன் பட்டறையில் பெரிய விறகுகளை சிறிதாக வெட்டிச் சந்தைக்கு விற்கச் சென்றான். மதியம் மறுபடியும் சந்தைச் சென்று மேலும் விறகுகளை விற்கச் செல்லலாம் என்று எண்ணி கோடாலியைத் தேடினான். அதிர்ச்சிக்குள்ளானான். விறகுகளை வெட்ட இருந்த ஒரு கோடாலி எங்கே சென்றது என்று பதறிப்போய் வீடு முழுக்கத் தேடினான். வீட்டைச் சுற்றிலும் தேடினான். […]

முள்வெளி அத்தியாயம் -14

This entry is part 11 of 43 in the series 24 ஜூன் 2012

தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் தூங்காமலிருந்ததில் பற்றி எரியும் கண்களையும், பித்தக் கசப்பு தட்டிய நாக்கையும் மீறி மனதில் சிறு நிம்மதி பரவியது. பொறுமையாக, கவனமாக எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதி விட வேண்டும். ஹால் டிக்கெட்டோடு கொண்டு வந்திருந்த பழனி முருகன் படத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். இரண்டு பென்சில்கள், […]

மனநல மருத்துவர்

This entry is part 10 of 43 in the series 24 ஜூன் 2012

சூர்யா கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக்‍ காரணம், அவர் அவரது கட்டை விரலை, வாய்க்‍குள்ளே வைத்து சூம்பிக்‍ கொண்டிருந்தார். என்னதான் ஏராளமான மன நோயாளிகளுக்‍கு மருத்துவம் செய்து குணப்படுத்தியிருந்தாலும், வாய்க்‍குள் பெருவிரலை வைத்து்க கொண்டு வித்தியாசமாக பேசும் அந்த இளைஞனின் வார்த்தைகளை […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31

This entry is part 3 of 43 in the series 24 ஜூன் 2012

34. நாயக்கர் அவையை அலங்கரித்திருந்தார். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டியிருந்தது. சிறையிலடைத்திருந்த முதல் குற்றவாளியை நாயக்கர் அழைத்துவரும்படி கட்டளையிட்டார். – கள்வனை அவைக்கு கொணருங்கள். வேல்கம்பு காவலர்கள் இருவர் கள்வனை அவை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர். கள்வனுக்குக் கடப்பக்கால் போட்டிருந்தது. – தளவாய் என்ன நடந்தது? தளவாய் தமது ஆசனத்திலிருந்து எழுந்து மன்னரை கைகூப்பி வணங்கினார். கூப்பிய கைகள் கூப்பியவண்ணமிருக்க, அவர் தலை சக காரியஸ்தர்கள்மீது விழிகளை ஒருமுறை ஓடவிட்டு, மீண்டும் […]

முள்ளாகும் உறவுகள்

This entry is part 1 of 43 in the series 24 ஜூன் 2012

சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். அவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டார். அவர் கடைக்கண் ஓரம் ஈரம் கசிந்தது. மூன்று கட்டு வீடு. முன்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. பின்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. முன்னால் ஒரு பூங்காவைப் போல் மலர் தோட்டம். பின்னால் காய்கறித் தோட்டம். அத்தனையும் சங்கா, அவரை அப்படித்தான் அவரது […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு

This entry is part 43 of 43 in the series 17 ஜூன் 2012

1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். கொஞ்ச நேரம் அங்கே இருந்து டாக்டர் வார்டு வார்டாக வரும்போது அவரை எதிர்கொள்ள வேண்டும். நாயுடுவின் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தாலே அது சாத்தியம். வெள்ளைக்கார டாக்டர் என்பதால் அவர் கேட்பதற்கு எல்லாம் இங்கிலீஷில் பதில் சொல்லி, அவரிடமிருந்து நாயுடு தேக நிலை பற்றி புதுசாகத் தகவலும், மருந்து மாத்திரை சம்பந்தமான விஷயங்களும் […]