ஆசை வெட்கமறியாதோ..?

This entry is part 1 of 5 in the series 18 பிப்ரவரி 2024

 குரு அரவிந்தன் (நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.சரியா பிழையா தெரியவில்லை. ) எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் […]

க…… விதைகள்

This entry is part 6 of 14 in the series 19 மார்ச் 2023

1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3 நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்வதும் பொய் அவன் சொல்வதும் பொய் அவனவன் சொல்வதும்  பொய் 4 சிவப்பு பச்சை விதி வாகனங்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும்தான் 5 பேச்சால்  யாரையும் துன்புறுத்தாமல் பேசுவது ஓர்  இன்பமான துன்பம் 6 நீ தந்த முதல் தேநீரைச் சுவைக்கையில் ஒரு சொட்டு […]

அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்

This entry is part 4 of 11 in the series 19 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் 1 – காட்டுப் பன்றிகள் யூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை, காலை நேரம் வானம் வெளித்திருந்தது. பாடசாலை விடுமுறையாகையால், வழமைபோல அவர்கள் தங்கள் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு பெற்றோரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சிறுவர்களாக இருந்தாலும், அன்று பயிற்சி நாள் என்பதால் உதைபந்தாட்டக் குழுவினரான அவர்களின் பயிற்றுநரின் வீட்டிற்குச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விளையாட்டுப் பிடிக்கும், அதுமாதிரி இவர்களுக்குக் உதைபந்தாட்டம் பிடித்திருந்தது, பிடித்திருந்தது என்று சொல்வதைவிட உதைபந்தாட்டத்தில் […]

தேர் வீதியும் பொது வீதியும்…

This entry is part 17 of 20 in the series 29 ஜனவரி 2023

செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு  பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி…சந்தை களைகட்டுகிறது…கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்… கடை விரித்தும்கருத்துளம் கொள்வாரின்றிசந்தை விட்டு சயனக்கிரகம் வீற்றிருக்கும்உண்மைப் பொருள் ஓங்குயர்பெருமாள் நோக்கிதான்  நகரும் எவ்வழியும்.. தனி வழி ஏதும் இல்லைவைகுந்தப் பெருமாளுக்கு என்றுணர்த்தத்தான்இப்படி பலப்பல பொது வழிகள்… உண்மைக்கு ஏது ஒரு வழி…படிகள் இல்லா உலகிற்க்குதிசைகள் இல்லா […]

இரண்டு ரூபாய்….

This entry is part 6 of 20 in the series 29 ஜனவரி 2023

வெங்கடேசன். ரா அது என் கல்லூரி காலம்.  நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட.  நான் அனுதினமும் கல்லூரி சென்று வர,  என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு ரூபாய்.   நான் காலையில் கல்லூரிக்கு புகைவண்டியில் செல்ல ஒரு ரூபாய் , திரும்பி பேருந்தில் வர ஒரு ரூபாய் என , ஆக மொத்தம் இரண்டு ரூபாய்.  சில நேரங்களில் அவரிடமே பணம் தட்டுபாடு ஏற்படும் போது ,  அன்றைய தினம் […]

பாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..

This entry is part 6 of 11 in the series 15 ஜனவரி 2023

சுப்ரபாரதிமணியன் பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. . இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ […]

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….

This entry is part 3 of 9 in the series 18 டிசம்பர் 2022

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்……. _ லதா ராமகிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன் – 80களில் என்று நினைக்கி றேன் – என் உறவினர் ஒருவருடைய மனைவி அந்தக் காலத்திலேயே டைட் பாண்ட், டைட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொள்வார். “இப்படி உடையணிந்து கொள்வது தான் என் கணவருக்குப் பிடிக்கும்”, என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். ஆனால், நான் அறிந்தவரையில் அந்த உறவினர் அப்படியெல்லாம் ‘அல்ட்ரா மாடர்ன்’ பேர்வழியல்ல. ’ஆனால் மிக நெருக்கமான மனிதர்க ளைக் கூட நாம் […]