தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

பேசும் படங்கள்

  கோவிந்த் கோச்சா இன்று இந்தியா முழுக்க பெருமாபலான பெற்றோர்களை பிடித்து ஆட்டுவது, தன் பிள்ளைகளை ஐ ஐ டி-யில் சேர்க்க வேண்டும் என்று.   அதனால் எங்கெங்கு காணினும் கோச்சிங் செண்டர்களடா எனும்…

கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது. தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும்,…

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்

- இந்திக ஹேவாவிதாரண தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 10

சத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை பொய், இருப்பது இல்லாதது, இனிப்பு கசப்பு இப்படி இரன்டில் ஒன்றைத் தேடுவதாகவோ அல்லது இனங்காணுவதாகவோ வாழ்க்கைகள் கழிந்து வரலாறாய் மாறின. ஆன்மீகம் என்பது…

பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். கடந்த 6.9.11…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !

(கட்டுரை : 73) (Was the Universe Born Spinning ?) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை ! பிண்டமும் இல்லை !…

இலக்கியக்கட்டுரைகள்

அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-

அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில்…

எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்

எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் 'சரஸ்வதி' இதழில் படித்தேன். பிறகு 'ஆனந்தவிகடனி'ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர்…

“மச்சி ஓப்பன் த பாட்டில்”

பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் செய்யாமல் , குறுக்கு வழியில்"Easy Money"யை அடைந்து விடத்துடிக்கும் ஒரு கூட்டம்…

கடிதங்கள் அறிவிப்புகள்

உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற…

மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா

பேரா .  பெஞ்சமின் லெபோ , பாரீஸ் . பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு  உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல. இந்த…

கதைகள்

முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில்…

பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்

ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்   சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். மந்தையின் இடையே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக்…

கண்ணீருக்கு விலை

ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உண்டென்றால்…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஏழு பாப மரணத் தேவைகள் என்று குறிப்பிடப்படுபவை : உணவு, உடை, எரிபொருள், வரி அடைப்பு, சுய…

பூரணச் சந்திர சாமியார்

சகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை…

இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!

"எல்லாம் ரெடியா? வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு", ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, வெற்றிலை தெளிக்க வெளிவந்தது.…

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46

    இந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.   काकस्य उपायः kākasya upāyaḥ காக்கையின்தீர்வு…

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து "உன்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஏழ்மைத் தோழனே ! நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட இனத்துக்கு இனிதானது.…

இலைகள் இல்லா தரை

உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் .... ‘உயிரின் உறக்கம்’ - என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை - சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம்…

நட்பு அழைப்பு. :-

கோமாதாக்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கறக்கின்றன. கோவர்த்தனகிரிகள் கூறாகி கிரைண்டர் கல்லும்., தரையுமாய். யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில் கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு. வெண்ணை தின்னும் ஒபீஸ் கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில் கோபர்களும் கோபிகைகளும்…

நிலா அதிசயங்கள்

அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித் தடவி தடாகங்களில்…

அந்த இருவர்..

கடவுள் சிலநேரம் கண்ணை மூடிக்கொள்வதால், இடையில் வந்தவனுக்குக் கிடைக்கிறது சிவிகை.. நடையாய் நடந்தவன் நடந்துகொண்டேயிருக்கிறான் ! இடையில் ஏற்றம் பெற்றவன், அதிஷ;டம் என்கிறான்.. நடந்தவன் அதையே விதி என்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..

மட்டைகள்

அமீதாம்மாள் தேங்காயின் மட்டைகள் உரிக்கப்படும் கழிவுக் குட்டையில் முக்கப்படும் நையப் புடைக்கப்பட்டு நார் நாராய்க் கிழிக்கப்படும் மீண்டும் முறுக்கேற்றி திரிக்கப்படும் திரிக்கப்பட்ட நார்கள் கயிறாகி எதைக் கட்ட என்று கேட்கும் ஆயிரம் புத்தகங்கள் பேசாத…

மாணவ பிள்ளைதாச்சிகள்

ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி வைக்கப்படுவதில்லை குந்திகளின் முக்கை அறுக்கும் பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும…

வைகையிலிருந்து காவிரி வரை

சங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும் விலகியும் உறவுகள் போலப் பாதைகள் கிளைக்க ஈர்த்துச்…

மாலை சூட

ஒளிகளாய் நிரம்பியுள்ளது எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக…

தொலைந்த ஒன்று.:-

தொலைத்தது எங்கே எனத் தெரியவில்லை தேடுவது எங்கே எனவும் பிடிபடாததாக. இருட்டிலும் வெளிச்சத்திலும் துழாவிக் கொண்டிருந்தேன் தொலைத்த இடம் என நம்பப்பட்ட இடத்தில்.. அது என்னுடையதாகத்தான் இருந்ததாகத் தோன்றியது வேறொன்றுடையதாகவும் இருந்திருக்கலாம். என்னுடைய உணர்வில்…

புதிய சுடர்

இப்படியொரு புயல் அடிக்குமென்று  எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க  வாய்ப்பில்லை  இப்படியொரு கத்தி  கழுத்திற்கு வருமென்று  தேசத்தை சுரண்டுவோர் யாரும்  சிந்தித்து இருக்கவும்  வாய்ப்பில்லை . இந்த தேசத்தேரை  நல்வழியில் செலுத்த  எந்தக்…

தீயின் தரிசனம்

சருகுப் புதரிடை மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி நெருப்பைக் கடைகிறான். அம்மா தயிர் கடைகிற அதே பாவனையோடு . டிஸ்கவரி சேனலில் நான் கண்ட காட்சி வேகவேகமாக கடையக் கடைய சட்டென்று புகை அவிழ்கிறது நெருப்புக் கங்குடன்…

நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்

எதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும்,   என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் தூண்ட இயலாதபோதும், என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும், என் கண்களில் ஈரம்…