வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா

This entry is part 9 of 30 in the series 28 ஜூலை 2013

 வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 

என்னைப் பற்றிய பாடல் – 27 

(Song of Myself)

 

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

ஊக்கமூட்டும் என் ஆத்மா

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

என்னைப் பற்றிச் சொல்ல

நல்ல தருணம் இது !

எல்லோரும் நிமிர்ந்து நிற்போம் !

தெரிந்த வற்றை நான்

உரித்தெடுப்பேன் !

ஆடவரை, மாதரை  

முன்னேற்ற

வழிநடத்திச் செல்வேன்

என்னோடு !.

கடிகாரம் காட்டுது நிகழும்

காலத்தை !

முடிவின்மை* எதைக் காட்டுது ?

இதுவரை இப்படியே

களைத்துப் போய் வேனிற் காலம்,

குளிர் காலம் கடந்து

பல்லாயிர மில்லியன் ஆண்டுகள்

பயணம் செய்துள்ளோம் !

பல்கோடி மில்லியன் ஆண்டுக்

காலங்கள்

இன்னும் உள்ளது

கண்முன்னே !

அதற்கு அப்பாலும் பல மில்லியன்

ஆண்டுகள்

நீண்டு செல்லும் !

 

 

மனிதரின் தோற்றங்கள் ஈந்துள்ளன

செல்வச் செழிப்புகளை !

பேதமான பல்வேறு பயன்பெறும்

சாதனங்களைத்

தோற்று வித்துள்ளன !

மற்றவர் தோற்றமும் கொண்டுவரும்

செல்வம், பல்வேறு

செழிப்புகளை !

மேலென்று சிலரையும்,

கீழென்று சிலரையும் நான்

பேதம் பார்ப்ப தில்லை.

காலத்துக்கு ஏற்ப,

வாழும் இட நிலைக்கு ஏற்ப

சமத்துவம் மாறி விடும் !  

  

 

எனது சகோதர, சகோதரிகளே !

மனித இனம் உமக்கு

மரணம் விளைவித்ததா ? அல்லது

உம்மீது பொறாமை கொண்டதா ?  

அப்படி யானால்

உமக்காக வருந்துகிறேன் !

என்னைக் கொல்ல வரவில்லை,

என்மேல் பொறாமை இல்லை !

பரிவுடன் உள்ளார்

என்னிடம்;

நான் பட்ட

துயருக்குக் கணக்கில்லை

என்னிடம் !   

உன்னத சாதனைகளின்

உச்சியில் நான் உள்ளேன் !

என்னைச் சுற்றி இருப்பவை

அடுத்த வருக்கு

அவசிய மானவை !

 

 

ஏணிப் படிகளில் சிகர உச்சியை

எட்டிப் பிடிக்க

ஏறிவரும் என் பாதங்கள் !

ஒவ்வொரு படியும்

பற்பல யுகங்களின் களஞ்சியம் !

படியிடையே

அடுத்த யுகத்தின் தொடர்ச்சிகள் !

இவற்றின் ஊடே

பயணம் செய்யும் நான்

இன்னும் தொடர்ந்து

ஏறி ஏறி ஏறி வருகிறேன் !

எல்லா வித உந்து விசைகளும்

என் வாழ்வு முழுமை

அடைய

இடைவிடாது பயன்பட்டு

இனிமை அளித்தன !

இந்த இடத்தில் நிற்கிறேன்  

ஊக்கமூட்டும்

என் ஆத்மாவுடன் !

 

+++++++++++++

முடிவின்மை* Eternity

+++++++++++++

தகவல்:

 1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
 2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
  Cowley [First 1855 Edition] [ 1986]
 3. Britannica Concise Encyclopedia [2003]
 4. Encyclopedia Britannica [1978]
 5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
 6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
  [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (July 24, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationசிரட்டை !புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

  இது எவரும் எழுதிய பின்னோட்டம் அல்ல. தவறாக இங்கே இடப் பட்டுள்ளது.

  தயவு செய்து நீக்கி விடுங்கள்.
  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *