கடிகாரமின்றி
கதவு தாண்டியதில்லை
அன்றும் அப்படித்தான்
காலையில் ஒரு திருமணம்
பிறகு ஒரு நூல் அறிமுகம்
மாலையில் சந்திப்பு
இரவில் ஒரு விருந்து
எல்லாம் முடித்து
வீடு வந்தேன்
கடிகாரம் பார்த்தேன்
அட!
அதுவே ஓடவேயில்லை
இடையே
நேரம் பார்க்கவுமில்லை
யாரும் கேட்கவுமில்லை
மீண்டும் பார்த்தேன்
அந்தக் கடிகாரத்தை
சிரிப்பு வந்தது
அது
எத்தனையோ உண்மைகளை
மௌனமாய்ப் பேசுவது
நன்றாகவே கேட்கிறது
அமீதாம்மாள்
- முறி…
- மௌனம் பேசும்
- பிரியாணி
- மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு
- …பிறந்த பொன்னாடும்…
- ஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்
- கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன
- சமூகம் கொடுக்கும் அழுத்தம்…
- அதுவும் கவிதைதான்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை
- ஆண் பால் -அத்தியாயம் ஐந்து