This entry is part 13 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதி:

கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதி:

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.

நாடகத்துறையிலிருந்த போது திரு. அஸ்வகோஷ் அவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு அவர் எழுதி புத்தகமாக வெளிவந்த நாடகம் ஒன்றை அவர் முன்னி லையில் அரங்கேற்றியிருக்கிறார்.

படிக்கிறபோதே, 1980 களில் “ஆத்மா” கையெழுத்து இதழை ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாதம் ஒரு இதழாக நெய்வேலி நூலகத்தில் வைத்தார். “ஆத்மா” பௌர்ணமி இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடத்தினார்.

1988-89 ல் கணையாழியில் திரு.அசோகமித்ரன் பணியி லிருந்த சமயத்தில் ஒரு மாத காலம் அச்சு கோர்ப்ப வராகவும், புரூப் ரீடராகவும் அங்கு பணிபுரிந்திருக் கிறார்.

ஆத்மாஜி என்ற பெயரை “ஆத்மாஜீவ்” என்று நியூம ராலஜியின்படி பெயர் மாற்றி தந்தவர் திரு. பிரமீள்.

வேர்கள் ராமலிங்கம், திரு. கோணங்கி, ரவி சுப்ர மணியம், இரா.நடராசன், பாவண்ணன், பிரம்மராஜன், நாகார்ஜூனன், கால சுப்ரமணியம் போன்ற பலருடன் நேர் மற்றும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தார்.

1990களில் “காலக்ரமம்” என்ற பெயரில் கவிதைகளுக் கான காலாண்டிதழ் ஆரம்பித்து சுமார் 15 இதழ்கள் வரை பல சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தி யவர்.

இவரது கவிதைகள் தமிழின் முக்கியமான சிறுபத்திரி கைகளில் வெளியாகியுள்ளன. கவிதைத் தொகுப்பு களும் வெளியாகியுள்ளன.

“அறியப்படாத உலகம்”, “வெகு தொலைவில்”, “மீன்கள் நீந்த மறுக்கும் கரை”, அனாமிகா ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப் பில் ஒரு கவிதை தொகுப்பும், ஸ்ரீவத்ஸா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு கவிதை தொகுப்பும் ஆக ஐந்து கவிதை தொகுப்புகள் இதுவரை வெளி யாகியிருக்கின்றன. இது தவிர “நடு நிசியில்” என்ற அமானுஷ்ய குறுநாவல் ஒன்றும் “தினமலர்” வெளியீடாக வெளியாகி இருக்கி றது.

தற்போதைய நிலை:
வாழ்வாதாரமின்றி வறுமையில் வாடும் கவிஞர் ஆத்மாஜீவின் குடும்பத்துக்கு உதவுங்கள் தோழர்களே…

ஓர் ஏழைக் கவிஞனான அவர், தனது மோசமான உடல்நிலை, குடும்பத்தின் மிக வறுமையான நிலை, இவற்றுடன் தினம் தினம் நோயுடனும், பலவிதமான பிரச்சனைகளுடனும், கடன்காரர்களின் மிகக் கேவல மான நெருக்கடிகளுடனும், தினந்தோறும் செத்துப் பிழைக்கும் மிக அவலமான வாழ்க்கையை, வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உங்களால் முடிந்த தொகையை வழங்கிட உடனடி யாக முன்வாருங்கள்.
.
தங்களின் தொகை, அவருக்கும், அவரின் குடும்பத்திற் கும் பெரிய உதவியாக இருக்கும் நண்பர்களே…

வறுமை காரணமாக தன் குடும்பத்தை காப்பாற்ற, உணவுக்காக கையேந்தும் ஓர் ஏழைக் கவிஞனுக்கு, தயவுசெய்து உதவுங்கள் தோழர்களே.

அவருக்கு உதவுவதை நமது கடமையாகக் கருதி, கீழ்க் கண்ட ஜிபே நம்பருக்குத் தொகையை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

ஜிபே நம்பர்: 78455 76241
பெயர்: ஆர். லதா(லதா ராமகிருஷ்ணன்)

இந்த நல நிதி திரட்டும் காலம்: இன்று முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை.

இதற்கான வாட்ஸ்அப் குரூப்பில் இணைய விரும்பி னால், கமெண்ட்டில் ஆம் என்று பதிவிடவும்.

கவிஞர் ஆத்மாஜீவுக்குக் கை கொடுப்போம்.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நல நிதிக் குழு உறுப்பினர்கள்:
லதா ராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)
கண்ணன் விஸ்வகாந்தி (கவிஞர்)
—-

உதவிகோரி வேண்டுகோள் கவிஞர் ஆத்மாஜீவ்

1980 களில் “ஆத்மா” என்ற கையெழுத்து இதழை ஆரம் பித்து தொடர்ந்து மூன்றாண்டு கள் மாதம் ஒரு இதழ் நடத்திவந்த நான், 1990 களில் ”காலக்ரமம்” என்னும் கவி தைகளுக்கான காலாண்டிதழை துவங்கி,  சுமார் 15 இதழ்கள் வெளியிட்டேன். பல முன்னணி கவிஞர்களும் காலக்ரமம் இதழில் தங்கள் கவி தைகளை பதிவி செய்திருக்கிறார்கள். தற்போது இரண்டு இதழ் கள் மட் டுமே என் கைவசமிருக்கிறது.

1991 ல் காலக்ரமம் வெளியீடாக எனது “அறியப்படாத உலகம்” சிறு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டேன். தொடர்ந்து ஊர் மாறிக்கொண்டேயிருந்ததில் எந்த பிரதிகளையும் பத்திரப் படுத்த முடியவில்லை. “ஆத்மா” என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்த என்னை “ஆத்மா ஜீவ்” என்ற பெயரில் எழுதச் சொல்லி நியூமராலஜியின் படி பெயர் அமைத்துக் கொடுத்த திரு. பிரமீள் அவர்களை இன்றளவும் நன்றியுடன் நினைத்துக் கொண் டிருக் கிறேன்.

காலம் எத்தனை மாற்றங்களை செய்கிறது. “கணை யாழி”யில் 1988-89 ல் ஒரு மாதம் அச்சு கோர்ப்பு செக்ச னில் இருந்த என்னை புரூப் திருத்தக் கற்றுத் தந்து புரூப் ரீடாராக பணிபுரிய சொன்னவர் திரு. அசோகமித்ரன் அவர்கள். ஆனால் அவர்தான் அசோகமித்திரன் என்று அங்கு பணிபுரிந்தபோது எனக்கு தெரியவில்லை. என் இலக்கிய அறிதல் அன்று அந்தளவுதான் இருந்தது. அதன் பின்பு தான் நவீன இலக்கியம் குறித்த தேடல் துவங்கியது. அன்றைய “மீட்சி” “விருட்சம்” “கணையாழி” போன்ற பல நவீன சிற்றிதழ் களிலும், வேறு சில சிற்றிதழ் களிலும் எழுத ஆரம்பித்தேன்.

1994ல் திருமணத்திற்கு பிறகு வேலை தேடி ஊர்ஊராக அலைந்து கோவையில் ஒரு 15 வருடங்கள் வாழ்ந்திருந்த போதும் பிரசுரத் திற்கென எதையும் செய்ய வில்லை. அதிகமும் எழுதவும் இல்லை.  ஆனால் ஓரளவு இலக்கிய நண்பர்களுடன் தொடர்பில் தான் இருந் தேன். அவ்வப்போது எழுதிய எல்லாம் என் உணர்வு களுக்கு ஒரு வடிகாலாகத்தான் கருதினேன். பிரசுரிக்கத் தோன்றவில்லை. ஆனாலும் ஒரு குயர் நோட்டில் எழுதுவதும், பின் அதை எரித்துவிடுவதும்தான் தொடர்ந் தது.

“தாய் தொண்டு மையம்” நடத்திக்கொண்டிருந்த இளைய சகோதரனுக்கு மட்டும் அவன் வாசிப்பதற்காக கவிதைகளை இன்லேனட் கடிதத்தில் அனுப்புவேன். அவைகளை அவன் நடத்திக்கொண்டிருந்த “நிவேதிதா” இதழில் பிரசுரித்ததுடன், 2008 ல் “தாய் தொண்டு மையம்’ நடத்திய ஆண்டுவிழாவில், திரு. இன்குலாப் அவர்க ளின் தலைமையில், அவர் கையால் “வெகு தொலை வில்” என்ற என் இரண்டாவது கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி னான். முக நூலை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னை மீண்டும் தீவிரமாக எழுத வைத்தது திரு.ஆர். வி .ஆர். ராஜேந் திரன் அவர்கள்தான்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை நானும் என் பெயருக் கேற்ப மிக ஆத்மார்த்த மாகத்தான் முகநூலில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தேன். மகள் திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கை தன் முகத்தை முழுமையாக எனக்கு என் குடும்பத் திற்கு காட்டியது. இன்று மணமுறிவு பெற்று கைக்குழந்தையு டன் நிற்கும் மகளை கண்டு நெஞ்சம் உடைந்துபோயிருக் கிறோம். வறுமையும் கடனும் உடல் உபாதைகளும் என்னை முற்றிலும் தகர்த்துவிட்டிருக்கிறது. வட்டி கட்ட வட்டிக்கு கடன் வாங்கி, அந்தக் கடனுக்கு வட்டி கட்ட மீண்டும் கடன் வாங்கி,  கந்து வட்டி வாரவட்டி என இன்று எல்லாக் கடன்காரர்களும் வீட்டு வாசலிலும், போனிலும் மாறி மாறி வந்து நிற்கிறார் கள். ஏகவசனத்தில் திட்டுகள் வாங்க வேண்டிய நிலைமை. முற்றி லும் மனமுடைந்து தவறான முடிவை அடிக்கடி யோசிக்க வைக் கிறது இன்றைய சூழ்நிலை. முகநூல் நண்பர்களின் உதவியால் தான் இன்று என் குடும்பத்தின் உணவுத்தட்டுப் பாட்டை ஓரளவு சமாளித்துக்கொண்டிருக்கிறேன்.
நண்பர்களே, எனது கவிதைத்தொகுப்புகள் கவிதை மீதான என் தணியா ஆர்வத்தையும், தரமான கவிதையெழுதும் கவிஞனாக என் அடையாளத்தையும் அழுத்தமாக எடுத்துக்காட்டும் என்பது என் ஆழமான நம்பிக்கை. கவிதைகள் எழுத வேண்டி யவன் இன்று கையேந்தும் நிலைமைக்கு ஆளாகி விட்டேன். உடலும் மனமும் தளர்ந் திருக்கும் ஓர் ஏழைக் கவிஞனும் அவனது குடும்பமும் உயிர் வாழ உங்களாலான உதவியை மனமு வந்து செய்யும்படி பணி வுடன் வேண்டுகிறேன்.

சக படைப்பாளிகள் தோழர் கண்ணன் விஸ்வகாந்தி, லதா ராமகிருஷ்ணன் மற்றும் சில நண்பர்கள் எனக்காக மேற்கொண் டிருக்கும் ‘நிதி திரட்டல்’ முயற்சியில் பங்கேற்று என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என்று உங்களெல்லோ ரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்குத்

தங்கள் உண்மையுள்ள

ஆத்மாஜீவ்

Series Navigationஒப்பனையரங்க ஒத்திகை