This entry is part 1 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

வளவ. துரையன்

உறவுகள் இனிமையானவை

நீரை அடித்தால் இரு பிரிவுகளாகும்

ஆனால் மீண்டும் ஒன்றாகும்

நல்ல உறவைப் போல;

சிலநேரம் நம் கையே நம்

கண்ணைக் குத்துதல்போல்

உறவுகளும் குறும்புகள்

செய்து தொல்லை தரும்தான்;

கண்ணில் விழுந்துவிட்ட தூசியாய்

அவற்றைத் துடைத்தாலும்

காலம் கடந்தும் வடுவாக

நின்று நினைவூட்டும்;

சில உறவுகள்

காற்றடிக்கும் திசை செல்லும்

காற்றாடி போலச் செல்லும்;

அவை நம்மையும்

இழுத்துத் தள்ளப் பார்க்கும்;

ஆற்றில் மிதக்கும்

தக்கை மேலிருக்கும் எறும்பாக

​​​நாம்தான் நம்மை நினைத்து

​​​எதிர் நீச்சலும் கற்று

                  மறத்தல் நன்று.

Series Navigationஅடாத   ஆணியம்!