ரவி அல்லது.

எட்டும் தூரத்தில்
இங்குமங்கும்
சிறகசைத்து மிதந்த
வண்ணத்துப்பூச்சி
சற்றேத் தொடுமாறு
அமர்ந்தது மூச்சு வாங்க.
அருகே நின்று
ஆச்சரியப்பட்டச்
சிறுமிதான்
‘அச்சச்சோ’ என்றதென்று
சொல்லிவிட முடியாது.
**
ரவி அல்லது.
ravialladhu@gmail.com
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை