Articles Posted by the Author:

 • அழகின் மறுபெயர்……

  அழகின் மறுபெயர்……

    (11.9.2018)   ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை அள்ளிக்குவிக்கும் ஊற்று….   ஒளிமலர்களைப் பருகிப்பார்த்து துடிப்பின் லயம் தட்ப வெப்ப நிலையாய்…   தண்ணீரிலும் வெப்பம் தீண்டுவது; ஆவியாய் முகம்காட்டுவது உச்சரிப்பின் உச்சமாகும்   எதையும் மறைக்காத தருணங்களில் எல்லாம் தானாய்க் கரைகிறது….   வைட்டமின் வாழ்க்கை கைவசமாகிறபோது அரிய தரிசனம் கைகூடிவிடுகிறது     ஒருபாதி  வையத்திற்கு இப்படி இறந்து பிறப்பது இயல்பாகிவிடுகிறது   இன்னொரு பாதி அறியப்படாத கோள்களாய் சுற்றிவருகிறது   பகலின் மறுபக்கத்தை […]


 • வேறென்ன வேண்டும்?

  வேறென்ன வேண்டும்?

  பிச்சினிக்காடு இளங்கோ இறைவா நீ வயிற்றுக்குச்சோறிடும் உழவனாய் இருப்பதறிந்து மதிக்கிறேன் இறைவா உன்னை கழிவுகள் அகற்றும் துப்பரவுத்தொழிலாளியாய்க் கண்டு துதிக்கிறேன் இறைவா உன்னை வியர்வையை விதைக்கும் தோழனாய்க் கண்டு தொழுகிறேன் இறைவா நீ நீதிமன்றத்தில் நடுவராய் இருந்து வழங்கிய நீதிக்கு வணங்குகிறேன் வாங்கிக்கொண்டு நீதியை விற்றதுகண்டு வெதும்புகிறேன் நடுவராய் இருந்து நடுநிலைப்பேணினால் நல்லது ஒருபக்கம் தலைசாயும் உனக்காகத் தலைவணங்குவது நியாயமா? கர்ப்பகிரகத்திலேயே கண்டுகொள்ளாமல் இருக்கும் உன்னை கண்டுகொள்வது எப்படி? உன்னைத்தொழுவதாய் உன்பெயரைச்சொல்லி உன்முன்னே உன்னைமறப்பவனை உன்னைமறைப்பவனை விளையாட […]


 • காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)

  காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)

  அதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல் “பார்வையா தாக்கும் படையா ” என்னையறியாமல் என்மனம் மயங்குவதெப்படி? ஒ இவள்தான் காரணம்! அணிகலன்களால் கனத்திருக்கும் கனத்த அணிகலன்களால் அழகோடிருக்கும் இவள்தான் காரணம் இவளென்ன இவ்வுலகின் இயலபான பெண்ணா? இல்லை அழகிய மயிலா இல்லை தெய்வப்பெண்ணா மயங்குகிறதே மனம் எப்படி? அவள் பார்வை அப்படி! பார்க்கிறாள் எனப்பார்த்தால் ஒரு படையுடன்வந்து தாக்கும் தெய்வப்பெண் போலல்லவா பார்க்கிறாள் பெண்மை பெருகிவழியும் இவள் பார்வையின் வழி கண்டர்றியாத கண்டறியமுடியாத காலனைக்கண்டேன் போதையாய் வடிவெடுத்த […]


 • ஈரமுடன் வாழ்வோம்

  பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) பரந்துகிடக்கும் உலகில் பரவியிருக்கும் தமிழர்களின் தமிழ் தலைநிமிர தமிழ்த்தலை நிமிர தமிழர்களின் நிலையுயர எழுதுகோலை மட்டுமே தலைவணங்கவைக்கும் வணங்காமுடிகளே! உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தமிழ்வெளிச்சம் பரப்பும் தமிழ்மூளைகளே! மூளைச்சூரியன்களே நிலாக்களே! நித்திலங்களே! நம்மைச்சந்திக்க வைத்த-தமிழைச் சிந்திக்கவைத்த திருமூலர்களே! மாநாட்டு மூலவர்களே முனைப்புடன் முன்னின்றுழைத்த முன்னோடிகளே! அரசுமொழியாய்த் தமிழ் முரசுகொட்டும் அதிபர் பதவியும் அரிய பதவியும் தமிழர்க்குக் கிட்டும் அதிசய நாடாம் கடல்நுரை கொலுசணிந்த கன்னி கட்டடக்கவிதைகளின் தொகுப்பு கப்பல் வாத்துகளின் விளையாட்டு மைதானம் […]


 • அம்மா

  அம்மா

  பிச்சினிக்காடு இளங்கோ எல்லார்க்கும் போலத்தான் எனக்கும் அம்மா ஆனால் என் அம்மா என் அம்மாதான் தைரியத்தின் படிமம் பன்முகச்சிந்தனையின் வடிவம் இரக்கத்தின் குறியீடு உலகத்திற்காகவும் உலகமாயும் சிந்தித்தவள் சிந்திக்கச்சொல்பவள் சகோதரப்பாசம், பற்று உறவினர்மீது பரிவு ,அக்கறை உதிரத்தில் கலந்தவள் செயலில் காட்டியவள் கொடுத்துதவுவதில் அப்பாவுக்குப்போட்டி சொல்லில் செயலில் நேர்மையற்றவரை நேர்நின்று பேசாதவள் வாழ்க்கை இலக்கணம் வகுத்தவள் வாழ்ந்துகாட்டியவள் லட்சுமி மவனா என்றுதான் என்னை பெண்சமூகம் விளித்தது ஆறுமவத்தண்ணன் மவனா என ஆண்சமூகம் அழைத்தது குழந்தைகளில் பேதம்பார்க்காத தெய்வம் […]


 • வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

    “பசலை படுத்தும்பாடு ”   பிரிவை என்னிடம் பேசாதீர் என்ற நான் என் காதலர்பிரிவுக்கு உடன்பட்டேன் விளைவு! பசலைபடரக்காரணமானேன்   அன்று பிரிவை மறுதலித்துப் பின் பிரிவை அனுமதித்த நான் பசலை படர்ந்ததை யாரிடம் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்?   பசலையைத்தந்தவர் காதலர் காதலர்தந்ததால்   காதலர்தந்தார் என்ற செல்லத்தால்; காதலர்தந்தார் என்ற உரிமையில்; காதலர் தந்தார் என்ற காரணம் காட்டி பசலை நீக்கமற படர்கிறது என்மீது   என் அழகையும் என்னோடு இருக்கும்; என்னோடு இருந்த […]


 • (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”

  (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”

        கண்கள்தாம் கண்டன அவரை கண்களால்(தான்) நானும் கண்டேன் அவரை அதனால்தான் எனக்கு இத்தீராநோய்   தீராகாமநோய் தீயில் இருப்பது நான் தீர்வின்றித் தவிப்பது நான் துடிப்பது நான் துவள்வது நான்   கண்கள் ஏன் அழுகின்றன? எதற்கு அழுகின்றன?   காரணமின்றிக் கண்ணீர் சிந்துவதேன்?   ஆய்ந்து அறியாமல் அவரைப்பார்க்க அவசரப்பட்ட கண்கள்; பார்த்தலால் காதல்தீ பற்றிக்கொண்ட கண்கள்; நல்லவரெனப் பார்வையில் பரிவை அன்பை பகிர்ந்த கண்கள்; காரணமறிந்தும் காரணமின்றி வருந்துவதேன்?   […]


 • காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்

  காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்

        (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் )(9) அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல்   “நீள் இரவு கொடியது”   நான் காமநோயை மறைப்பேன்   அந்நோய் யாரும் அறியக்கூடாத நோய் ஆகவே அந்நோயை மறைப்பேன்   ஆனால் கொடுமை! அது இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுநீர்போல் பெருகும்!       மறைக்கமுடியாமல் நான்படும் துன்பம் அதிகம் அதை அந்நோய்தந்த காதலருக்குச்சொல்லுதல் இன்னும் வெட்கமானது வெட்கம்கலந்த துன்பமானது காதல்துன்பம் தாங்காமல் தவிக்கும் என்னுடலில் […]


 • உயிரோட்டம்

      பெளர்ணமியாய்   பவனி எனினும்   குகைக்குள் கொஞ்சம்   அமாவாசை     இதை   மறந்தும்; மறைத்தும்   நடிக்கும் பாத்திரமாய்   பகல் இரவு     முழு பூசணிக்காயை   மறைக்க முடிவதைப்போலவே   முழுநிலவாய் காட்டிக்கொள்வதும்     சிலர்   நிலவென்று சிலாகித்தனர்   சிலர்   இருளென்று ஆர்ப்பரித்தனர்     தவிர்க்க முடியாத   மதிப்பீடுகளோடுதான்   தரையிறங்கி   கால் பதித்து   […]


 • பிரியும் penனே

  பிரியும் penனே

  பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை என்னோடு வைத்திருந்ததில் கர்வப்பட்டிருக்கிறேன் எது இருந்ததோ இல்லையோ இல்லாமல் நீ இருந்ததில்லை நான் என்னோடு நீ இருந்ததால்தான் எனக்குப் புகழ் நீ வந்தபின்புதான் பெருமை என்னிடம் வந்தது ஒருபோதும் எனக்குப் பெருமை வந்ததில்லை பெருமிதம் வந்ததுண்டு நான் நினைத்ததை வடித்தது நீதானே […]