அழகிப்போட்டி

This entry is part 5 of 31 in the series 13 அக்டோபர் 2013

ப.அழகுநிலா   “கொஞ்சம் தள்ளி ஒட்கார முடியுமா? நின்னு நின்னு கால்வலி உசுரு போவுது” ‘’அதுக்கென்ன! இப்படி ஒட்காருங்க. இந்த போட்டில இப்பதான் மொத தடவையா கலந்துக்கிறிங்களா!’’ “ஆமாம். எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?’’ ‘’போட்டி ஆரம்பிச்சு ரெண்டு மணிநேரம் கூட ஆகலை. அதுக்குள்ள கால்வலிக்குதுங்கிறிங்களே! அதை வச்சுதான்’’ “போட்டி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும்?’’ ‘’அது சாயந்திரம் ஆயிடும். எடையில லன்ச் பிரேக் ஒரு மணிநேரம்’’ ‘’நீங்க எத்தனை வருஷமா கலந்துக்கிறிங்க?’’ ‘’இந்த போட்டி ஆரம்பிச்சதிலேந்து கிட்டத்தட்ட […]

கல்யாணக் கல்லாப்பொட்டி

This entry is part 26 of 29 in the series 12 மே 2013

                               -நீச்சல்காரன் “தம்பி கொஞ்சம் வாங்களேன்” என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா கூப்பிடுறாரோனு கொஞ்சம் சட்டைக் காலரை திருத்திக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு “அங்கிள், கேமிராக்காரர் வந்துட்டாரா?” என்போம். “அதோ சாப்பிட்டுக் கொண்டிருக்காரு குமாரு! ” என்று வழிந்து கொண்டிருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே “சாப்பிட்டையா!” […]

குறட்டை ஞானம்

This entry is part 11 of 26 in the series 24 பிப்ரவரி 2013

முஷர்ரப்( முஷாபி ) இலங்கை   வாழ்வில் எம்மை அசௌகரியத்துக்குள்ளாக்குகின்ற எத்தனையோ சம்பவங்கள் எம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவசரமாக வேலைக்குச் செல்லும் போது வீதியில் ஏற்படும் வாகன நெறிசல், அமைதியாக தியானம் பண்ணும் போது மட்டும் ஆங்காங்கே ஊறிச் செல்கின்ற கட்டெறும்பு, அழகழகாய் கட்டிக்கொண்டிருக்கும் மணல் கோட்டையை ஒரே நொடியில் அழித்துவிடும் கடலலை என எம்மை அசௌகரியப்படுத்தும் ஏகப்பட் சமாச்சாரங்கள் எம்மோடும் எம்மைச் சூழவும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வகை சின்ன சின்ன அசௌகரியங்கள் எமக்கு […]

ரயில் நிலைய அவதிகள்

This entry is part 28 of 28 in the series 27 ஜனவரி 2013

கடல், மயில், யானை, குழந்தை, வானவில் இந்த வரிசையில் பெரும்பாலோருக்குப் பிடித்த ஒன்று ரயில்.  ரயில் ஓடிவரும்போது பார்த்து ரசிக்காம இருக்க முடியாது. அழகான ராட்சசன் வர்றது போல இருக்கும். அவ்வளவு காதல் எனக்கு ரயில் மீது. அதே அளவு காதல் ரயில்வே ஸ்டேஷன்கள் மீதும். காரைக்குடியிலும் கும்பகோணத்திலும் மிக நீண்ட ரயில்வே ப்ளாட்பாரங்கள் உண்டு. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும்  ஏதோ பைபாஸ் ரோட்டை கண் கொள்ளும் அளவு பார்க்குற மாதிரிப் பார்க்கலாம். வாகிங் போறவுங்க, […]

டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

This entry is part 26 of 27 in the series 23 டிசம்பர் 2012

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன் சிங் இதனை ஒட்டி நம் நாட்டு மக்களிடம் உரையாற்றி இறுதியாக “டீக் ஹை?” (சரியா சொன்னேனா என்ற பொருளில்) கூறியது தற்போது உலகப்பிரசித்தம் பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அடுல் […]

ரசமோ ரசம்

This entry is part 24 of 29 in the series 18 நவம்பர் 2012

மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார்.  மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் தயாரிக்கலாம். நான் சாப்பிடும் ரசம் பத்தி சொல்றேன்பா.   குங்குமம் தோழியில் இணைப்புக்காக இப்ப குளிர்காலம் ஆயிற்றே என ரசம் டிப்ஸ் அனுப்பி இருந்தேன். அது பிரசுரமாகி இருக்கு. பொதுவா நாம சாம்பார் சாதம் , வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்ட பின்னாடி ரசம் சாதம் சாப்பிடுவோம். சிலர் ரசத்தை குடிக்கக்கூட செய்வாங்க.   […]

சார் .. தந்தி..

This entry is part 22 of 31 in the series 4 நவம்பர் 2012

  ஐயோ தந்தியா.. என்று மக்கள் அதிர்ந்த காலம் உண்டு. தந்தி என்றாலே ஏதோ கெட்ட செய்தி என்று பயம். பொதுவாக யாராவது சீரியஸ் என்றால் மட்டும் தந்தி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.   எஸ்வி சேகரின் நாடகத்தில் ( அல்வான்னு நினைக்கிறேன்). சார் தந்தி என்று 4 முறை தந்தி வரும். ஐந்தாவதா ஒரு ஆள் சார் தந்தி என்று சொல்வார். அட..அது தினத்தந்தின்னு சொல்லி பேப்பர்ல ந்யூஸ் படிக்க ஆரம்பிச்சிடுவார் எஸ்வி சேகர். இப்ப […]

கொசுறு பக்கங்கள்

This entry is part 8 of 34 in the series 28அக்டோபர் 2012

·பேம் மல்டிப்ளெக்சில் சக்கரவியூஹ் இந்திப்படம். பத்து ரூபாய் டிக்கெட்டை பாப்கார்னோடு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாலும், பாப்கார்னும் பெப்சியும் நிதான நிலையில் நான் உட்கொள்வதில்லை என்பதாலும், 120 டிக்கெட்டில் போனேன். என் சீட் எம் 8. அஷ்டமத்தில் சனி! 7ம் நம்பர் ஆசாமி பழைய துணி போட்டு வாங்கிய பிளாட்டிக் டப்பில் பாப்கார்ன் கொரித்துக் கொண்டிருந்தார். ஆள் இரட்டை நாடி. இரு புறமும் கடோத்கஜ புஜங்கள். ஒடுங்கிக் கொண்டு படம் பார்த்தது பத்ம வியூக அனுபவம் எனக்கு. ஆயாளும் […]

வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்

This entry is part 3 of 23 in the series 14 அக்டோபர் 2012

மேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity Diagrams போன்றவை சில உத்திகளாகும். சில சமயங்களில் இதில் எந்த முறையிலும் அடங்காமல் சில விவாதங்கள் நடைபெறும். அதை பற்றி ஜாலியாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நீங்களும் படிச்சு சிரிச்சு சந்தோசமாக இருங்க.   […]

பத்தி எரியுது பவர் கட்டு

This entry is part 28 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  பத்தி எரியுது பவர் கட்டு செப்புவது யாரிடம் சொல்லடி..? சுத்தி எரியுது சூரியன் … தோலை உரிக்குது வேர்வை ! நெஞ்சில் ஷாக் அடிக்குது நிறுத்தி விட்ட மின்சாரம்…! ராஜியத்தில் நடக்குது அம்மா வுக்கு.. ஆராதனை .! பூஜியத்தில் பவர் மீட்டர் பூஜித் தாலும் பயனில்லை ! பானைச் சாதம் பொங்கலை பார்ப்ப தெப்படி ஜெயா டிவி  ? நகரில் பவர் போனதால் நங்கை யர்க்குத்  திண்டாட்டம்..! உயிரோடு புதையும் சீரியல் பெட்டி .. பெட்டிப் […]