அது

நடுநிசியில் யார் கதவைத் தட்டுவது பிரமையா தூக்கம் வராத இரவுகளை எதிர்கொள்கையில் நரகம் பற்றிய பயம் அதிகரிக்கின்றது சிநேகிதர்கள் ஒவ்வொருவராக பிரியும் போது கதவைத் தட்டியது எமன் தானோ என்று தோன்றுகிறது பருவத்தில் படமெடுத்து ஆடிய மனது இன்று பயந்து பம்முகிறது…

மழையாகிவிட்ட தவளையின் சாகசம்

ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய பாறை மனது கெக்கலித்து புரளும் நினைவில்…

எல்லார் இதயங்களிலும்

கர்ப்பிணிக்கான சிறப்பு இருக்கையில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி கேட்டார் ‘இது கர்ப்பிணிக்கான இருக்கை அமரவிடும் என்னை’ அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார் மரியாதையாய் நின்றார் பிறவிக் குருடர் அவரென்று நின்றபின்தான் தெரிந்தது ‘முந்நூறு நாள்தான் கரு வாழ்க்கை உங்களுக்கோ…

பயணக்குறிப்புகள்

_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல வண்ணங்களில் பிறழ்வாய் பிறவாய். சகபயணிகளில் இது…

படிமங்கள்

என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை ஆக்குவது என்பதில் பெரும் போட்டிகளும் போராட்டங்களும்…

நெஞ்சிற்கு நீதி

-- மன்னார் அமுதன் கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த நீதிமான்களைக் காலம் வெல்லும் கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும் கீழான மனிதர்தம் பாதம் தொட்டு…

அந்த நொடி

அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும் கொண்டு நிர்ப்பிவிடலமா? மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது! பதற்றமான பல பொழுதுகளில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "உனக்கொரு பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிந்தால் உறுதியோடு நீ அதை தீர்வு செய்ய முனைந்திடு ! அதுவே வல்லமை படைத்தோர் செய்வது. முதியோர் ஆலோசனையைக் கேட்டுக் கொள்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குருநாதரின் ஞான ஒளி பொழியும் போது கூட இருந்த குறை அறிவாளி பேசி மகிழ்ந்து பெருமிதம் அடைவான் ! பிறகு விரைவில் தாறுமாறாய் ஒழுக்க மற்று உரக்க…

மென் இலக்குகள்

__ரமணி ஓர் இனிப்பைச் சுவைப்பது போல என்னைத் திட்டிக்கொண்டிருந்தான் என் உயர் அதிகாரி. என் இயலாமையின் மீது விளையாடிக்கொண்டிருந்தது அவன் மூர்க்கம். பதிலடி கொடுப்பதின் இழப்புச் சுமை வாழ்க்கையை நசுக்கிவிடும் என்பதாலேயே என் சுயம் நெடுஞ்சாலையில் நசுங்கிய தவளையைப்போலக் கால் பரப்பி…