ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15

This entry is part 35 of 36 in the series 18 மார்ச் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஏழு கொடூரப் பாபங்கள் ! அவை என்ன தெரியமா ?  உணவு, உடை, எரிசக்தி, வரி, வாடகை, மானிட மதிப்பு, குழந்தைகள் ஆகியவை ஏழு கொடூரப் பாபங்கள் என் நோக்கப்படி.  அத்தனை மானிடப் பாபங்களுக்கும் விமோச்சனம் அளிப்பது ஒன்றே ஒன்றுதான் !  அதுதான் பணம்.  உலகில் அனைவரும் தேடும், தொழும், ஏங்கும் பணம் !  அதை நம் தொழிற்சாலைகள் விளைவிக்க […]

நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

This entry is part 32 of 36 in the series 18 மார்ச் 2012

ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும் அங்குதான் படிப்பார்கள். ரயில்வேமீது பாசம் வைத்தவர்களும் பள்ளிக்குப் பணம் கட்டமுடியாதவர்களும் ” படிக்கிற பையனாயிருந்தா எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிப்பான் ! ஸ்கூலும் வாத்தியார்களும் என்ன பண்ணுவார்கள்? ” என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை ரயில்வே […]

பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்

This entry is part 29 of 36 in the series 18 மார்ச் 2012

ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு காட்டுப் பன்றியைச் சந்தித்தான். அதன் உருவம் கறுத்த மலையின் உச்சிபோல் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனே, அவன் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து, பின்வரும் செய்யுளைச் சொன்னான். எனது வில்லையும் அதில் தொடுத்துள்ள அம்பையும் கண்டபிறகும் அது பயமில்லாமல் என்னை நெருங்குகிறது. நிச்சயமாக அதை யமன் என்னருகில் அனுப்பி வைத்திருக்கிறான் […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று

This entry is part 28 of 36 in the series 18 மார்ச் 2012

1927 January 30 அக்ஷய வருஷம் மார்கழி 17 ஞாயிற்றுக்கிழமை அறையில் மொத்தம் நாலு பேர் இருந்தார்கள். நீள்சதுரமாக ஒரு மரமேஜை. நிறம் மங்கிய ஆனால் அழுக்கோ கறையோ இல்லாத நீலத் துணி விரித்து வைத்த அந்த மேஜை மேல் நாலைந்து பேர் வசதியாகச் சாப்பிடத் தகுந்த விதத்தில் ரொட்டித் துண்டுகள், ஆப்பிள் பழம், வார்த்து அடுக்கி வைத்த கல் தோசைகள், விழுதாக இஞ்சியும் கொத்தமல்லியும் சேர்த்து நைய்ய அரைத்த துவையல், ஆரஞ்சுப் பழச் சாறு, ஓரமாக […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 27 of 36 in the series 18 மார்ச் 2012

போர்ச்சுகல்லில்கூட இதுபோன்றதொரு நகரை பார்த்ததில்லைதான். ஒருவேளை லிஸ்பன் நகரை வேண்டுமானால் கிருஷ்ணபுரத்துடன் ஒப்பிட்டுபேசலாம். கீழை நாடுகளின் ‘ட்ராய்’ என்று வர்ணிக்கவும் எனக்குத் தயக்கமில்லை. 19. இதே நாட்களில் மக்களை வாட்டிவதைத்த வெயிற் காலங்களுமுண்டு. அப்போதெல்லாம் சிங்கவரம் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்துவிட்டு, கிருஷ்னபுரத்தையும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மிதித்திடவேண்டுமென்று நான்கு திசைகளிலிருந்து கால் நடையாகவும், வண்டிகட்டிக்கொண்டும் வந்துபோகும் ஆயிரக்கணக்கான மக்கட் கூட்டத்தினராலும், மன்னரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்ககளின் குதிரைகளின் குளம்படிபட்டும், முன்னூறுக்கு மேற்பட்ட யானைகள் அவ்வபோது வீதிகளில் […]

முன்னணியின் பின்னணிகள் – 32

This entry is part 23 of 36 in the series 18 மார்ச் 2012

  சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> பிளாக்ஸ்டேபிளுக்குத் திரும்பும்போது திருமதி திரிஃபீல்ட் தனது காரை அனுப்பியுதவ முன்வந்தாள். ஆனால் எனக்கு நடக்கலாமாய் இருந்தது. அடுத்த நாள் மதியச் சாப்பாட்டுக்கு அவசியம் வருகிறேன், என விடைபெற்றுக் கொண்டேன். அதனிடையே எட்வர்ட் திரிஃபீல்டுடன் நான் கலந்துறவாடிய அந்த இரு பருவங்கள், அவற்றைப் பற்றிய என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தர முடியுமா என்றும் யத்தனிக்கலாம். பாதை பாம்பு வளைசலாய்ப் போனது. வழியில் நடமாட்டமே யில்லை. இவர்களிடம் என்னவெல்லாம் […]

“நிலைத்தல்“

This entry is part 20 of 36 in the series 18 மார்ச் 2012

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை. மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை […]

காய்க்காத மரம்….

This entry is part 6 of 36 in the series 18 மார்ச் 2012

அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ…….இந்த மரம் தான்… கந்தசாமி…! .அப்போ…..நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ எனக்குத் தெரியாது…நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது…இது காய்க்காத மரம்….வெட்டிப்போடு… ஆமா…. சொல்லிப்புட்டேன்..மத்தபடி பேசினதெல்லாம் நியாபகம் இருக்குதுல்லே…என்ன….நீ ஒரு ஐநூறு ரூபா கூட ..தர மாட்டேங்கறே…. இந்த மரத்துக்கு….ரொம்ப கறாரா கட்டாதுன்னு சொல்றே…..அதான் எனக்கு குறையாத் தெரியுது…..என்று ஆதங்கத்தோடு கேட்க.. நெசமாலுமே…கட்டாது சாமி…தோ ..பாருங்க….!..நானே…ஒரு மெசினை வாடகைக்கு எடுத்தாத்தான் வேலை […]

முன்னணியின் பின்னணிகள் – 31

This entry is part 33 of 35 in the series 11 மார்ச் 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> யாத்ரிகர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திருமதி திரிஃபீல்ட் எங்களிடம் வந்தபோது அவள் கையில் சிறு பெட்டி. ”அருமையான இளைஞர்கள்…” என்றாள் அவள். ”நம்ம இளைஞர்களும் அமெரிக்காவில் போல அத்தனை ஈர்ப்பும் ஈடுபாடும் இலக்கியத்தில் வெச்சிக்கிட்டா நல்லாருக்கும். எட்வர்டின் கடைசி காலத்தில் எடுத்த ஒரு படம் அவர்களுக்குத் தந்தேன். அவர்கள் என்னுடைய படம் ஒண்ணும் கேட்டார்கள். கையெழுத்திட்டுக் குடுத்தேன்.” பிறகு பெருந்தன்மையுடன் ராய் பக்கம் திரும்பினாள். ”உங்களைப் பத்தி நல்லாச் சொன்னாங்க […]

பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்

This entry is part 31 of 35 in the series 11 மார்ச் 2012

அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன். ஒருநாள் விடியற்காலையில் நான் விழித்துக்கொண்டேன். பிராமணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டவாறு இருந்தேன். பிராமணன் சொன்னான்: ‘’அன்பே, நாளைக் காலையில் தட்சிணாயன சங்கராந்தி வருகிறது. மிகவும் லாபகரமானதாக இருக்கும். எனவே வேறொரு கிராமத்துக்குப் போய் நான் வீட்டுக்கு […]