முன்னணியின் பின்னணிகள் – 33

This entry is part 39 of 42 in the series 25 மார்ச் 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”ஒரு விஷயம் கேட்கலாமா, ரோசி?” என்று கேட்டேன். ”அந்தப் புத்தகத்தில் குழந்தையின் மரணத்திற்கப்பாலான சம்பவங்கள், அவை நடந்ததா?” என்னை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தாள். அவள் அதரங்கள் சுழித்து சின்னப் புன்னகை. ”ம். அதெல்லாம் எத்தனை வருஷத்துக்கு முந்தைய கதை. எனக்கு அதைச் சொல்றதில் எந்த விகல்பமுங் கிடையாது. அவர் அதைச் சரியா யூகிச்சதாச் சொல்ல இயலாது. அது அவரோட கற்பனைதானே? அவருக்கு இதெல்லாம் தெரியும்ன்றதே எனக்கு ஆச்சர்யம். […]

”கீரை வாங்கலியோ…கீராய்…!”

This entry is part 36 of 42 in the series 25 மார்ச் 2012

நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவருக்கு ரெகுலர் கஸ்டமர் நீ….இப்போ தீடீர்னு என்னை சொல்லச் சொன்னா எப்டி? நீயே சொல்லிடு….அதுதான் சரி…. – நாதன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். சும்மாச் சொல்லுங்க ஒரு நாளைக்கு…பரவாயில்லே… உறாங்…அதெப்படீ? நா அவர்ட்ட இதுநாள் வரை பேசினது கூட இல்லை…முத முதல்ல போய் அவர்ட்ட இதைச் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது… தெரு ஆரம்பத்தில் […]

ரஸ்கோல்நிக்கோவ்

This entry is part 32 of 42 in the series 25 மார்ச் 2012

நிர்மல் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து வரும் சுபாவமாதலால் காரணமெல்லாம் தெரியாது. எப்போதாவது பொது இடத்தில், பின்னிருந்து யாராவது தன் பெயரைச் சொல்லி அழைத்தால், திக்கென்றிருக்கும் அவனுக்கு. யாரென்று திரும்பிப் பார்த்தால் யாராவது நண்பர்களாகத் தானிருக்கும். அவ்வளவு ஏன், தெருவில் யாரோ யாரையோ ‘ஏய்!’ என்று ஒரு குரல் கொடுத்தால் போதும். தன்னைத் தான் கூப்பிடுகிறார்களோ என்று பயம் சூழ்ந்து கொள்ளும். பின்னால் திரும்பிப் பார்க்கவே அச்சப்படுவான். அன்று அப்படி யாரும் அவனை அழைக்கவில்லை. ஆனாலும் நடப்பவை வழமைக்கு […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 28 of 42 in the series 25 மார்ச் 2012

20. சாளரத்தின் வழியே பகற்பொழுதின் ஒரு துண்டு பிமெண்ட்டா அறையிலும் கிடந்தது. குளிர்ந்த காற்று சலசலவென்று காதருகே சலங்கைபோல ஒலித்துக் கடந்தது. அக்காற்றுடன் மைனாக்களின் கீச்சு கீச்சும், ஒன்றிரண்டு காகங்களின் கரைதலும், இரட்டை வால் குருவியின் கிக் -கிக்கும், குயிலொன்றின் குக்கூ அக்கோவும் கலந்திருந்தன. மீட்பரின் குரல்போல அவை பேசின. அறையில் தளும்பிக்கொண்டிருந்த குளிர்காற்றில் சிறிது நேரம் அசையாமற் கிடந்தார். எத்தனை சுகமான அனுபவம். எட்டுமணி நேரத்திற்கு முன்பு எரிமலைக்கருகில் கிடத்தியதுப்போலவிருந்தது. இப்போதோ நேற்றைய மனநிலை இல்லை. […]

சொல்லாமல் போனது

This entry is part 24 of 42 in the series 25 மார்ச் 2012

நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு எப்போதாவது அவள் அசந்திருக்கும்போதோ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருக்கும்போதோ எதையாவது எடுத்துத் தின்றுவிடும் வலது பக்க வீட்டுப் பெண் சகுந்தலாவையோ அல்லது என்னையும் சகுந்தலாவையும்விட பெரியவளான வயதில் பெரிய, என் பெரிய சகோதரிகளையொத்த […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16

This entry is part 21 of 42 in the series 25 மார்ச் 2012

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா உன் சல்வேசன் அணியில் வேலை கிடைக்காமல் ஆத்மா நோகும் ஒருவனைக் கொண்டுவா !  நான் அவனுக்கு ஊழியம் அளித்து வாரத்துக்கு 40 ஷில்லிங் ஊதியம் தருகிறேன். சுத்தமான ஒரு வீதியில் புது வீடும் கொடுக்கிறேன்.  அவனுக்கு உன்னைப் போல் நான் […]

குளவி கொட்டிய புழு

This entry is part 17 of 42 in the series 25 மார்ச் 2012

வசந்த காலத்தை வரவேற்று, சரம், சரமாக மங்கலமான மஞ்சள் வண்ணத்தில் , மெல்லிய நறுமணமும் பரப்பிக் கொண்டு, குடையாய் விரிந்த கொன்றை மரம். விடியற்காலை வேளை. ஆதவன் தன் வெப்ப கிரணங்களை அள்ளி வீசும் முன் குளிர்ந்த தென்றல் வீசும் இதமான காலம். மயில் போல தோகையும் செம்போத்து பறவை போன்ற தோற்றமும் கொண்ட பறவை ஒன்று விர்ரென்று பறந்து வந்து கிளை ஒன்றில் அமர்ந்து தம் சிறு தோகையை விரித்து அழகு காட்டிக் கொண்டே, குகுக்….. […]

பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?

This entry is part 16 of 42 in the series 25 மார்ச் 2012

அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் ஏளனத்துக்கு இருப்பிடம்; அது பயத்தின் களஞ்சியம்; சந்தேகத்தின் விளைநிலம்; ஆபத்தின் உறைவிடம்; மானமுள்ளவர்களின் தேசுவைப் பறிக்கும் காலன்; அது ஒரு வகைச் சாவு. தன்மானமுள்ளவனுக்குப் பிச்சையெடுப்பது என்பது ஒரு நரகமே தவிர வேறில்லை. பிச்சைக்காரன் மானமழிகிறான். மானம் போனதால் கர்வத்தை விடுகிறான். கர்வம் போனதால் சிறுமையடைகிறான். சிறுமை யடைவதால் வேதனைப்படுகிறான். வேதனைப்படுவதால் துயரம் அடைகிறான். […]

ஜீன்கள்

This entry is part 10 of 42 in the series 25 மார்ச் 2012

காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும். வித்தியாசமாய் டாக்டர்.இளமாறன்.?. அவங்கப்பா தமிழ் வாத்தியா இருந்திருக்கணும்..இளமாறன் தான் .. டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜெனெட்டிக் ரிசர்ச் அண்டு அனலைஸஸ் என்கிற எங்கள் துறையின் தலைவர்.. .நிறைய மூளை,நிறைய படிப்ஸ்.—மாலிக்யூலர் பயாலஜியில் போஸ்ட் கிராஜுவேட், ப்ளஸ் கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிலையத்தில், ஜீன் ம்யூட்டேஷனில் நான்கு வருட ஆராய்ச்சி டாக்டரேட். அதைவிட நிறைய முன்கோபம், கொஞ்சம் […]

‘பெற்ற’ மனங்கள்…..

This entry is part 8 of 42 in the series 25 மார்ச் 2012

வாணி ஜெயம்,பாகான் வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன் விருட்டென்று வீட்டினுள் நுழைந்து கூடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையை எட்டி பார்க்கையில் அவனது கணிப்பு பொய்த்துவிட வில்லை. பொன்னி அக்கா ஒருகழித்து எதிர்புற சுவரை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள்.அவன் மெல்ல நெருங்கி அக்காவின் தோளைத் தொட்டு, “பொன்னிக்கா” என்றழைத்தான். பொன்னி அக்கா திடுக்கிட்டு விழித்தாள்.விழிகளில் ஆச்சரியம் விரிய மெல்ல நிதானமாக எழுந்து அமர்ந்தாள். […]