லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது குறித்தும் மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் கையிருப்பு 26,000 ரூபாய் மட்டுமே. எங்கள் நிறுவனத் தலைவர் அமரர் டாக்டர் ஜி.ஜெயராமன் […]
ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா பெருங்காதல் என்று யாரிடம் கேட்க….. ஆறு மனமே ஆறு….. ”வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி வேகவேகமாயக் வாயைத்திறந்து கவ்வியெடுத்துக் கொள்கிறது _ விலகியே இரு தாத்தாவிடமிருந்து” என்று சொன்ன அப்பா அவருடைய அப்பாவை ஆதுரத்தோடு நெருங்கி அருகில் அமர்ந்து அந்தத் தளர்ந்த கரங்களைத் தன் கைகளுக்குள் பொதிந்துகொள்வதைப் பார்த்து அவருடைய தலைக்கு மேலாய் […]
லதா ராமகிருஷ்ணன் சென்னையின் வானிலை எப்போதுமே HOT, HOTTER, HOTTEST என்று சொல்வார்கள். அதுவும் மார்ச் ஆரம்பத்திலிருந்து ஜூன் முடிய வெய்யிலின் தாக்கம் ஏறிக்கொண்டே போகும். இந்த நாட்களில்மனிதர்களிடையே நிறைய சண்டை-சச்சரவுகள், கைகலப்புகள் எழுவது வழக்கம். அரசுப் பேருந்துகளில் பயணமாகும்போது இதைப் பார்த்தி ருக்கிறேன். பங்கெடுத்திருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன். உலகப்புகழ் பெற்ற ஓவியர் VAN GAUG இன் வாழ்க்கை யைப் பேசும் புனைவான THE LUST FOR LIFE நூலில் பஸிஃபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தாஹிதி […]
இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக ஒளிந்து கொண்டு தானே அம்பு எய்தி தர்மம் நிலை நாட்டுவாய். குறி பார்க்க உனக்கு கூச்சம். தர்மத்தையும் தர்மமாகத்தானே “ஸ்தாபனம்”செய்ய வேண்டும் என்று இவர்கள் சுலோகங்களை குவித்து வைத்திருக்கிறார்களே ! உன் பக்தர்கள் எனும் இடிராமர்கள் அந்த கல்லறைக்கோவிலை இடித்தது தவறு என்று தராசுத்தட்டுகள் தடுமாறி தடுமாறிச் சொன்னது உனக்கு உறுத்தலை தந்திருக்குமே ! அதற்கும் மேல் அமங்கலமாய் அந்த “சமாதி”மேலா மங்களாசாசனம் செய்யப்பட்டு அமரப்போகிறாய்? பரவாயில்லை […]
1 சுடும் உண்மை இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை விளக்குகள் அணைப்பதில்லை. 2. ஞானம் உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம் என் நாவல்களைப் பாராட்டவும் விழா எடுக்கவும் ஒரு குழு தேவை. ஏஜன்ட்டுகள் விண்ணப்பிக்கவும். 4 இந்தியா எனது இந்தியா முதலாமவர் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு வக்கீல் ஆபீசில் இருந்தபடி ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியைப் புரட்டி வார்த்தைகளைத் தேடுகிறார் வெளியே விட்டெறிய. இரண்டாமவர் ஜாமீன் ஜாக்கிரதையில் கேம்பிரிட்ஜ் அகராதியில் சாது […]
மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு நாடுகளுக்கிடையே சாதனையிலும் போட்டி சாவிலும் போட்டி அனைவர் கழுத்திலும் தொங்கும் வாசகம் ‘அபாயம். தொடாதே’ ஆயுள் ரேகையை ஒரு ரப்பர் அழிக்கிறது கல்யாணமோ கருமாதியோ பத்துப் பேர்தான் அனைவரையும் சுற்றி அந்நியன் கொரோனா விவசாயம் மனிதர்கள் அறுவடை வாழ்க்கை கழுவுமுன் கைகளைக கழுவுங்கள் கடன்களைச் மறைத்தாலும் இருப்பைச் சொல்லுங்கள் […]
++++++++++++ +++++++++++++++++ 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார். இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார் என்று ஒப்பிடப் படுகிறது. இப்போதெல்லாம் இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், பேய்மழை […]
வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி யமுனை கௌதமை மகரம்மேய் தட மகோததி இவை விடாது உறை தருண மாதர்! கடை திறமினோ. [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்; தருணமாதர்=இளம்பெண்கள்] வடக்கில் ஓடும் கங்கை, தெற்கே பாயும் காவிரி, யமுனை, கோதாவரி ஆகிய ஆறுகளையும், மீன்கள் நிறைந்த விரிந்து அகன்ற கடல்களையும், வசிப்பிடமாகக் கொண்ட தேவருலக இளம்பெண்களே! கதவைத் திறவுங்கள். ==================================================================================== […]
பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020) 1, மனமெல்லாம் இருளாகி மகிழ்வெல்லாம் அரிதாகி மவுனத்தில் உள்ளுக்குள் குமைகிறோம்-எந்த மகிமையினால் தீருமென கரைகிறோம் 2, என்னென்ன வழியுண்டோ எந்தெந்த முறையுண்டோ அத்தனையும் செய்துநாம் தடுக்கிறோம்-வென்று அனைவருக்கும் நலம்வழங்க துடிக்கிறோம் 3, வீணாக அலையாதீர் வெறும்பேச்சில் உழலாதீர் முகம்மூடி இடைவெளியைப் பேணுங்கள்-விரைவில் முகம்மலர நன்மைவரும் பாருங்கள் 4, தடுக்கின்ற வழிதேடி […]
குமரி எஸ். நீலகண்டன் ஒருவன் நடக்க முடியாமல் தடுமாறுகிறான். இன்னொருவன் கைத்தாங்கலாய் அனுசரணையுடன் உதவுகிறான். நோயுற்று இருக்கும் அம்மாவின் துயரத்தைச் சொல்லி ஒருவன் கதறி கதறி அழ சுற்றி இருக்கும் பலரின் கண்களில் நெருப்பு எரிய தீ அணைக்கும் வண்டி போல் கன்னத்திலெல்லாம் நீர் பாய்ந்து வழிகிறது. ஒருவன் செருமி செருமி இரும பக்கத்திலொருவன் கோப்பையில் தண்ணீர் விட்டு உதவுகிறான். ஆடையே இல்லாமல் ஒருவன் அழுது புலம்ப இன்னொருவன் தன் ஆடையை அவிழ்த்து அவன் மானம் காக்கிறான். […]