சி. ஜெயபாரதன், கனடா 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார். இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார் என்று ஒப்பிடப் படுகிறது. இப்போதெல்லாம் இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், […]
ஸிந்துஜா “குட்டியக் கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மதுரையில் இருந்து அன்று காலையில்தான் வந்திருந்தார். “ஆமாப்பா. எட்டரைக்கு அங்க இருக்கணும்ல. நீங்க டிபன் சாப்பிட வாரீங்களா?” என்று குஞ்சம்மா கேட்டாள். முன்தினம் சுகுணா அவளிடம் அவர் ஊரிலிருந்து வரப் போகிறார் என்று சொன்னவுடன் “பொங்கல் சட்டினி கொத்சு செஞ்சிடலாம்மா. அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்” […]
வைரஸ் தீ… விட்டில் மக்கள்…. இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ…. நாடு கேட்கிறது பொருள் கேட்கவில்லை ‘புரிந்துகொள்’ என்கிறது விலை கேட்கவில்லை ‘விலகி இரு’ என்கிறது கட்டியதைக் காப்பாற்ற ‘வீட்டிலிரு’ என்கிறது எல்லார் கையிலும் குவளைப் பால் குடம் நிரப்புவோம் ஒரு கிண்ணம் விஷமானால் குடம் பாலும் கொடு விஷம் என்ன செய்யப்போகிறோம்? முடிவெடுக்கும் […]
நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம் வழக்கமாகிவிட்ட பின்னரும் _ வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும் குருவி வெடிகளைக் காணும்நேரம் குலைநடுங்கி யதிர்வதுபோல் அஞ்சி நடுங்கும் மனம் _ இன்னொரு முறை யந்தச் சொல்லைக் கேட்க நேரும் தருணத்தின் அவலமெண்ணி அல்லும் பகலும் அலைக்கழிந்துகொண்டிருக்கும். 2.சிறகு மட்டுமல்லவே பறவை! அறுந்த சிறகின் இன்மையை ஏற்க மறுத்து சில காலம் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர். ’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும் சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார் கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர். ’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’ என்பார் சிலர். ’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான விடுமுறை’ […]
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !எல்லாரும்ஏற்பதில்லை தமிழ் உலகில்.சித்திரை முதல் நாளை திருவள்ளுவர் பிறப்பாண்டாய் துவக்கிக் கொள்வோம்.சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெறும் !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர், […]
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும் இவை அத்தனையையும் வாகனப்பிரிவு துல்லியமாய்ச் செய்யவேண்டும். அந்த நிறுவனம்தான் வெற்றிபெறும். அந்த வகையில் ரவிச்சந்திரனின் கப்பல்துறை நிறுவனம் வெற்றிபெற்றிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் இருக்கும் அந்த நிறுவனத்தின் வாகனத்துறை குபேரனின் கையில். ரவிச்சந்திரன் அடிக்கடி சொல்வார். […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்– ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை – கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை – அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி– கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன் நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன் மிகப்பெரிய அதிசயம் – அமர்நாத் கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ் சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன் கண்காட்சி – ராம்பிரசாத் நவம் – லோகேஷ் ரகுராமன் தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com உங்கள் படைப்புகளையும் இதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் வோர்ட் ஃபார்மட்டில், யூனிகோட்/ ஃபானெடிக் அச்செழுத்துகளால் ஆன கோப்பாக இருக்க வேண்டும். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழு
நந்தாகுமாரன் ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்உங்களுக்கு அவ்வளவு எளிதில்புரிந்துவிடலாகாதுஅதன் உள்மூச்சுஉங்களை மோப்பம் பிடிக்கும் போதேஅதன் வெளிமுச்சுநெருப்பு கக்கத் தயாராவதைக்கண்டுபிடித்தாலும்கண்டு கொள்ளாதீர்கள்அதன் குதர்கமும் குரூரமும்உங்களைப் பிடித்துக் கடித்தாலும் சரிஅமைதியாக இருங்கள்உங்களுக்குத் தான் எதுவுமே ஆகாதேநீங்கள் தான் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவைதடுப்பூசி போட்டிருக்கிறீர்களேஒரு கவிதையைப் போன்றேஒரு எதிர்கவிதையின் ஒவ்வொரு சொல்லும்ரூபமோட்சம் அடையத் துடிக்கும்காமரோபோ தான்என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்இப்போதைக்குட்ரோன்களுக்கு இருக்கும் வானம் கூடவாபறவைகளுக்குக் கிடைக்காதுஎன்ற கேள்வியைக் கேட்கத் தான் தோன்றும்என்ன செய்யமுகூர்த்தத்திற்கு நாழியாகும் வரைநீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும் – நந்தாகுமாரன்
” எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி ஏதாவது வாங்கித் தந்தாதா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மோண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “ போன வாரம் அசோகமித்திரன் அவர்களின் நினைவு தினம் வந்து சென்றது. அப்போது அவர் ஒரு உரையாடலில் சொன்ன குருவி என்ற கதையையும் அவரின் மேற்கண்ட பேச்சையும் நினைத்துக் கொண்டேன்.அந்த உரையாடல் 90ன் ஆரம்பத்தில் அவர் செகந்திராபாத்திற்கு வந்த போது என்னுடனான […]