தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு

This entry is part 9 of 9 in the series 18 ஜூன் 2023

தமிழ்நாட்டில் வெகுகாலத்துக்கு முன்னால், திமுக ஒரு அணியிலும் காங்கிரஸ் மற்றொரு அணியிலும் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, நீதிகட்சியின் புது அவதாரமான திமுக அந்த இடத்தை பிடித்தது. பக்தவத்சலம் தலைமை தாங்கிய காங்கிரஸ் 41.10 சதவீத வாக்குக்களையும், திமுக 40.69 சத வாக்குக்களையும் பெற்றாலும் ஸ்வதந்திரா கட்சி (ராஜாஜியின் கட்சி) 5.30 சதவீத வாக்குக்களாலும் சிபிஎம்மின் 4.07 சதவீத வாக்குகளாலும் திமுக வெற்றி பெற்று 137 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 51 இடங்களை பெற்றது. அடுத்த […]

மௌனி

This entry is part 8 of 9 in the series 18 ஜூன் 2023

ஆர் வத்ஸலா உனது மூன்று முகங்களை கண்டு உன் பால் ஈர்புற்றவள் நான் ஒரு மகனின் ஆதூரத்துடன் அணுகி எனக்கு தேவையானதை நான் கேட்காமலேயே தந்தாய் ஒரு நண்பனாக என்னுடன் விவாதித்தாய் பல்வேறு விஷயங்களை வியக்கத்தக்க வகையில்  நாம் கருத்தொருமித்தோம் ஒரு கண்டிப்பான ஆசானாக எனக்கு சிலதை மிக நன்றாக கற்றுக் கொடுத்தாய் பிறகு வந்தது ஒரு நீள்மௌனம் குதறிப் போட்டுக் கொண்டு பல்லாண்டு  என்னை காயங்கள் ஆறி நான் மீளும் நேரமிது இப்போது புதிதாகக் காட்டுகிறாய் […]

நாவல்  தினை              அத்தியாயம்  பத்தொன்பது          CE 1900

This entry is part 7 of 9 in the series 18 ஜூன் 2023

     * எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது.  இறங்க வேண்டாம்   காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது.  இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று […]

நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்

This entry is part 6 of 9 in the series 18 ஜூன் 2023

துயர் பகிர்வோம்: நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன். இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது. கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன்,  மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை […]

ஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்

This entry is part 5 of 9 in the series 18 ஜூன் 2023

தேனிசீருடையான் சொல்லப்படாத கதைகள். ஜனநேசன். பாரதி புத்தகாலயம். பக்கம் 92. விலை 110/ முதல் பதிப்பு டிசம்பர் 2022 நூல் அறிமுகம்.  எளிய மனிதர்களைப்பற்றிய எளிமையான கதைகள். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடு ரத்தமும் சதையுமாய் எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. எல்லாமே சின்னஞ்சிறு கதைகள். 1980களில் ஆனந்தவிகடன் வார இதழ் சின்னஞ்சிறு கதைகளுக்கான போட்டியை நடத்தியது. முக்கியப் படைப்பாளிகள் பலரும் இரண்டு அல்லது மூன்று பக்க அளவில் சின்ன வடிவில் கதைகள் எழுதினார்கள். போன்சாய்த் தாவரங்கள் போல அவை சின்ன […]

நிழலாடும் நினைவுகள்

This entry is part 4 of 9 in the series 18 ஜூன் 2023

.      ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி. .                                                              கோடை வெயில் தகிக்கும்  மாதமிது. பள்ளிகளுக்கு விடுமுறை ,பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். பணி காரணமாக அயலூரில் இருப்பவர்கள் பெற்றவர்களோடு , உற்றவர்களோடு இருக்க சொந்த ஊருக்கு வருவார்கள். அப்படிதான் வேணியும் லக்னோவிலிருந்து ஊருக்கு […]

திரை

This entry is part 3 of 9 in the series 18 ஜூன் 2023

ஸிந்துஜா   காசி ஐயாவின் வீட்டை அடைந்த போது மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்து, வந்த காரியம் பங்கமெதுவுமில்லாமல் நடந்து விட்டால், வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து விட்டு கிரவுண்டுக்கு ஓட வேண்டும். ஒன்பது மணிக்குள் அங்கு நிற்காவிட்டால் அவன் இடத்தைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் முத்துசாமியை கேப்டன் எடுத்துக் கொண்டு விடுவான். மறுபடியும் சான்ஸ் கிடைக்க கேப்டனின் காலில் எவ்வளவு தடவை விழ வேண்டும் என்று அந்தக் கேப்டனுக்கே தெரியாது.அவன் ஆல்ரவுண்டராக நன்றாக விளையாடுவதால் கேப்டனாகி விட்டான். காசிக்கு ரொம்ப […]

அப்பாவின் கை பற்றி…

This entry is part 2 of 9 in the series 18 ஜூன் 2023

பிஞ்சு வயதில் அப்பா கை பற்றி உலக அற்புதங்களை காண பழகுகையில் கண்டேன்  மின்மினி பூச்சியையும் அதன் வால்விளக்கையும் அப்பாவிடம் கேட்டேன் சந்திரன் இருக்கும்போது மின்மினி பூச்சிக்கு விளக்கெதெற்கென அப்பா சொன்னார் – ‘என் கண்ணே, மின்மினி பூச்சி அறிவாளி அதற்குத் தெரியும் சில சில சமயம் சந்திரனும், சூரியனும், நட்சத்திரமும் நம்மிடம் கூறாமலே காணாமற் போய்விடும் ஆகவே எப்பொழுதும் கைவசம் ஒரு சிறு விளக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென அதனால்தான்  நான் பாதை துழாவாமல் நடக்கிறேன் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்: அங்கம் -2 காட்சி -3 பாகம் -1

This entry is part 1 of 9 in the series 18 ஜூன் 2023

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 2  பாகம் -1 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் ஒரு தெரு நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.  [தளபதி ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] [கூட வந்த அறிவிப்பாளன் பியூகிள் ஊதிக் கூறுகிறான்] அறிவிப்பாளி;  சைப்பிரஸ் பொது மக்களே !  துருக்கிப் படகுகள் அனைத்தும் புயலில்  முறிந்தன.  தப்பிய சில படகுகள் திருப்பிப் பாராமல் சென்றன.  இந்த வெற்றியை நாம் ஆடிப்பாடி, மதுபானம் குடித்துக் கொண்டாடுவோம்.  அத்துடன் தளபதி ஒத்தல்லோ திருமண […]