இன்றைய இளைஞர்கள் தனக்குப் பிடித்ததில் செய்வதில் ஒரு வெறியுடன் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரது மகன் சிங்கப்பூரில் வேலையை விட்டு விட்டு வீடியோ கேமராவைப் பிடித்திருக்கிறான். பல கட்டிட தொழில் நுட்பம் படித்தவர்கள் சால்சா வகுப்புக்குப் போய் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்கள் என்பது நான் அறிந்த உண்மை. அதனாலேயே என்னால் இந்தத் திரைப்படத்தை புரிந்து கொள்ள முடிந்ததோ என்னமோ? வேறு ஏதோ எதிர்பார்த்த திரையரங்கக் கூட்டத்திற்கு பெரும் ஏமாற்றம். அது கேட் கால்ஸாகவும், அசிங்கக் காமெண்டு களாகவும் […]
சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள். ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே […]
முதல் பாகம் – கிருஷ்ணபுரம் 1580-1620 ” இம்மலைகள் நிரந்தரம், என்றேனும் சிதற நேர்ந்தாலும் பாறாங்கல்லாய், ஒரு சிறுகல்லாய் ஒரு கைப்பிடிமணலாய் இதே இடத்தில் தான் வாழ்ந்ததற்கு தானே சாட்சியாக கிடக்கலாம். ஆர்ப்பாட்டங்களுடன் கதைசெய்யும் மனிதன்மட்டும் பிறர் ஊடாக தான் வாழ்ந்ததை நினைவூட்டவேண்டும். ” 3. இறையெடுத்த மிருகத்தைப்போல பாதிகண்களைமூடி இரவு மயக்கத்தில் மூழ்கியிருக்கக் கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது. நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் மரங்கள் அவ்வப்போது அசைந்து கொடுத்தன. மௌனமான அந்த அதிர்வை […]
சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான். கதை அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை […]
ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய […]
மண்ணைப் பிழிந்து நீரை உரிஞ்சுகின்றன ஆலமரத்தின் வேர்கள்… தனக்கான நீரின்றி துவள்கிறது அருகிலேயே செவ்வாழையொன்று… குடியோன் பசிக்கு நிழலை அள்ளியள்ளித் தந்துவிட்டு கைபிசைந்து நிற்கிறது ஆலமரம்…
கனவு பறந்து கொண்டே இருக்கிறது நினைவு என்ற இலக்கை நோக்கி… கனவின் இறக்கைகளை கத்தரித்துக் கொண்டே இருக்கிறது காலம். காலம் கனவை இரவாய் பார்க்கிறது. கனவு காலத்தைப் பகலாய் பார்க்கிறது. கனவோடு பறக்கிற காலத்தின் போட்டியில் கனவு காலத்தை வென்றே விடுகிறது பலத் தருணங்களில்.
அழகற்ற்வை மெள்னங்கள் என்பதுணர்ந்து உதறி வீசி எறிகிறேன் அது பலி கொண்டவற்றில் என் நேசமும் ஒன்று. சிறுகச் சிறுக சேமித்த கனவுகளின் ஊர்கோலம்பற்றிய மயக்கங்களும் இப்போது இல்லை மழையைப் போலவோ காற்றைப் போலவோ விடுதலை பெற்று வாழ விருப்பம். கசக்கி வீசிய தொட்டு துரத்தும் ஞாபகங்கள் அவற்றில் தெரிகிறதே மங்கலாகிப் போன மக்கிப்போன சிதைவுற்றுப் போன என் இதயத்தின் தோற்றம்
வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது அறுவர்க்கும், அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது ஒருவர்க்குமாக ஏழு மூத்த கலைஞர் பெருமக்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கப்படவிருக்கிறது. அவ்வமயம் கவிஞர் கறுத்தடையான் அவர்களின் ஊட்டு கவிதைப்பிரதி வெளியீடும், தோற்பாவை, கட்டபொம்மலாட்ட, கூத்துக்கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களை குறித்த விதைத்தவசம் என்றவோர் ஆவணப்பட திரையிடலும், […]
வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் உயிரற்றதும் உயிருள்ளதுமான கடலுலகில் பொய்கள் உலவாதென யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆழக் கடலில் காற்று காறித் துப்புகிறதாம் வாசனைத் தைலக் குப்பிக்குள் புழுக்கள்தான் நெளிகிறதாம் கொழுவியிருக்கும் அளகாபுரி மாளிகை ஓவியத்துள் பேய்கள் குடியிருக்கிறதாம். நானும் நம்புவதாய் பசப்பிப் புன்னகைத்து தாண்டிக் கடக்க ஊமையென நடிக்கும் ஓடு முதிர்ந்த ஆமையொன்று கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது சீக்கும் சாக்காடும் […]