Articles Posted by the Author:

 • எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

  எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 

      மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித மனத்தைச் சீண்டுகிறது. இதன் செல்வாக்கு ஆண் பெண் உறவுகளின் நிலைப்பாட்டில் தீவிரம் கொள்ளும் போது ஏற்படும் காயங்கள், வலிகள் உறவின் உன்னதத்தைச் சீரழிக்க முனைகின்றன. குறிப்பாகக்  குடும்ப உறவுகளில் இயங்கும் கணவன் மனைவியிடையே அவர்களது அன்னியோன்னியம் அல்லது பிளவுபடுதலில் முக்கியத் துவம் பெறுகிறது. நான் […]


 • முழைஞ்சில்

  முழைஞ்சில்

      ஸிந்துஜா      சாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. நாலு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப்,  ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு ஸ்தாபன ஹாப்காம்ஸ், ஒரு நர்சரி, மங்களூர் பட்டர் நடத்தும் ஸ்நாக் பார், ஒரு டெய்லரிங் ஷாப், இரண்டு மருந்துக் கடைகள், மினி பல்பொருள் அங்காடி ஒன்று, டாக்டர் லலிதா என்று பெயர்ப் பலகை தொங்கிய விஷ்வாஸ் கிளினிக்,  மேலே கணினி நிலையம், கீழே ஜெராக்ஸ் கடை,  ஒரு மட்டன் […]


 • ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

      ஸிந்துஜா    நான் பொதுவாக யாரையும் போய்க் கட்டிக் கொள்ள மாட்டேன். அதே சமயம் கைகுலுக்க வருபவரின் கைகளைக் குலுக்குவதில் எந்தவிதத் தயக்கமும் ஏற்பட்டதில்லை. எனக்குப் பிடித்தவர்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும், என்னைத் தேடி வருபவர் களிடத்திலும்தான் நட்பு தோன்றியிருக்கிறது. எண்ணிக்கையில் இது குறைவாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.   எதற்காக இந்தப் பீடிகை? இன்று அழகியசிங்கரின் ஒரு கதையைப் படித்தேன். மிகவும் உற்சாகமடைந்தேன். அழகியசிங்கர் என் சிறிய நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர். அலட்டல் இல்லாத மனிதர். அவருடைய கட்டுரைகளில் ‘தெரியாது’ […]


 • மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்

  தமிழில்: ட்டி.ஆர். நடராஜன்  இரக்கம்  பால் லாரன்ஸ் டன்பர்  அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்  காயமுற்ற  அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு –  கதவுக் கம்பிகளில் அதன்  படபடப்பு – எக்களிப்போ மகிழ்சியோ அல்ல  வெளிவருவது . இதயத்தின் ஆழத்திலிருந்து அது இறைஞ்சுகிறது  :  சொர்க்கத்தை நோக்கி மேலே என்னைப்  பறக்க  விடு. அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்   ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வருகையில்  பில்லிஸ்  வீட்லி  கருணை என்னை அந்தக் காட்டிலிருந்து கூட்டி வந்தது. வெளிச்சம் […]


 • எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு

  ஸிந்துஜா  “அவர் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஒரங்கள் விமர்சகர்களின் வரைபடக் கோடுகளை ஒட்டி வராமல் துரத்திக் கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அதுவே வடிவமாகி விடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்… வாசகனை நிமிர்த்தி உட்கார வைக்கும் அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது”  என்று “இலக்கிய வட்டம்” ஜூலை 1964 இதழில் எம் .வி. வெங்கட்ராம் பற்றி தி. ஜானகிராமன் எழுதுகிறார். இந்த வரிகளில் காணப்படும் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வெங்கட்ராம் தன் எழுத்தில் நிதானமாகவும் அழுத்தமாகவும் ஸ்தாபித்திருக்கிறார், அவரது அறுபது வருஷ இலக்கிய வாழ்வின் பரிபூரணத்தை அவரது கதைகளில் நாம் காணமுடிகிறது. இதற்கு முன்பு “நிதானம்” என்று ஒரு […]


 • நான்கு கவிதைகள்

  நான்கு கவிதைகள்

      பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும்  ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம்.   விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். ரசமெல்லாம் கச்சிதமாகத்தான் இருந்தது. அவர்கள் காணவிரும்பிய தோற்றத்தைத்தான் அது காண்பிக்கவில்லை. (நி)தரிசனம் ஜில்லென்ற புல்வெளியில் காலை அழுத்தித் தேய்த்து நடந்தான். ‘ஆஹா, என்ன சுகம்’ […]


 • தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

  தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

  ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் “இவைகள் கதைகளல்ல, காட்சிகள்” என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப்  பல கட்டுரைகளில் தனது  கதைகளைப் பற்றி அவர் பேசும் போது நாம் கவனிக்க முடியும். ‘பிள்ளையார் பிடிக்கிறேன்’ என்று குரங்கைப் பிடித்து விட்டு மர்க்கட கணபதி என்று கூப்பிடும் சூழலில் இது ஒரு அதிசயித்தக்க குரல்.   […]


 • கானல்

  கானல்

  கைக்கெடிகாரத்தைப் பார்த்தார் கந்தாடை. ஆறு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. சூரியன் மேற்கே விழுந்து கொண்டிருந்தான். அவர் தான் உட்கார்ந்திருந்த பார்க் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டார். ரத்த ஓட்டம் சமநிலைக்கு வர சில நிமிஷங்கள் ஆகும். வயதாவதை இது போன்றவற்றை அல்லாமல் வேறு எப்படித்தான் இயற்கை மனுஷனுக்கு உணர்த்துவதாம்? இருட்ட இன்னும் ஒரு கால் மணி, அரை மணியாகும். ஆனால் அவர் இப்போது கிளம்பினால்தான் பதினேழாவது கிராஸில் உள்ள வீட்டைத் தெரு விளக்குகள் எரியத் […]


 • தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

  தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

    “தூரப் பிரயாணத்”தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று  அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால்  மற்ற விசேஷ அம்சங்களை நாம் தவற விட்டிருப்போம் என்னும் உறுதியான எண்ணம் இக்கதையைப் பலமுறை படித்த பின் தோன்றுகிறது.   ஜானகிராமனின் சம்பாஷணைகள் கத்தி மேல் நடப்பது போன்ற லாகவத்தைத் தம்முள் அடக்கிய வண்ணம் இருப்பது இந்தச் சிறுகதையில் விஸ்தாரமாகவே வந்திருக்கிறது.  கல்யாணமாவதற்கு முன், பாலியின் நட்பில் இருந்த ரங்கு அவளுக்குத் திருமணமான பின்னும், ஏன் அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்ட பின்னும் […]


 • தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி

  தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி

  மார்க்கம் ஒரு இருபத்திஐந்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு மெஸ் நடத்துபவர். அவர் சாப்பாடு போடும் விதம் எப்படி? தெருவோடு போகிறவர்களுக்கு அவர் சாதம் போடும் ஓசையைக் கேட்டால் ஏதோ முறம் முறமாய் இலையில் சாதத்தைச் சரித்துக் கொட்டுகிற மாதிரி இருக்கும். மார்க்கம் ஈயம் பூசிய பித்தளை முறத்தில் சாதம் கொண்டு வருவார். அந்த முறம் நடுவில் ஒடிந்து கொஞ்சம் குழிவாக இருக்கும். சாதம் சரிவதற்காக அவரே செய்த யுக்தி.அந்த முறத்தைத் டம டமவென்று தட்டுவார். ஆர்ப்பாட்டம் செய்வார். […]