தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்

ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள்  சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை விருட்சங்களாக வேறொரு நாள் இளைப்பாறுதலுக்கு இணக்கமாகுமென. அச்ச ரேகைகளை அழிக்கத் தெரியாதவர்கள்…

தவம்

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் கோபுரமும்  எல்லாமே அவனதா? கேள்விக்கேட்டு  தியானத்தில் அமர்ந்தவனுக்கு  அவனே  ஒன்றுமில்லா  உயிராக…

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.  அடுத்த படகில்  அதே…

பணம்

பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை  எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல்  கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு…

ஒரு பெண்ணும், சில ஆண்களும்

அவளை அழைத்தார்கள்.  விளம்பர உலகின்  மாடலாக,  அவள் கைகள், கண்கள்  இடுப்பும், தொடையும்  வழியும் போதை  கண்களில் கண்டனர்  ஆண்கள்.  முதலில்  பியானோ மீது சரிந்தாள்  கைகளில், கால்களில்  தைலம் தடவினார் கேமிரா கண்களுக்கு …

இரு கவிதைகள்

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம் கொள்கின்றன. சர்ப்ப மேனி ஜொலிக்க சதிராட்டம்.…

நீ

ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன்  மலர்களின் மடியில்.  வாழ்க்கை என்ன  நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில்  நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும்  ஒவ்வொரு கதைச்சொல்லும்  அதில்  ஆனந்தமும் வரும்  அழுகையும் வரும் …

நிணம்

புரிபடாதவைகள்  ஆயிரம் புரிந்தவைகள்  சொற்பம் புரிந்தும்  புரியாமலும்  கடந்து  கொண்டிருக்கிறோம் காதல்  கொண்ட  இரு  உடல்  எந்திரங்கள் விடுதலைக்கான  யுத்தகளத்தில்  நிற்கின்றன ஆழ்ந்த  மானுடப்  புரிதலை  ஆயுதங்களாய்  ஏந்தியிருக்கின்றன கனவு  காண்பது  மனசுக்கு  நிம்மதி…

ஏழாவது சுவையின் இணக்கம்.

பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.

  விடை தெரியா வினாக்கள்

                                                 -------வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால்  ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் உள்ளம் எல்லாவற்றையும் குருதி நிறத்திலேயே…