மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20

This entry is part 26 of 41 in the series 8 ஏப்ரல் 2012

“அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். கொஞ்சம் இப்படி வாருங்கள். இந்த இடத்தில் காதை வைத்து கேளுங்கள். ” 22. சாம்பல் நிற கீரி ஒன்று முட்செடிபுதரிலிருந்து மெல்ல ஓடி வருகிறது. இவர்களைப்பார்த்ததும் அசையாமல் ஓரிரு கனங்கள் நிற்கிறது. தனது கூர்மையான கருத்த மூக்கை அரசமர சருகுகளைச் சீய்த்து எதையோ தேடுவதுபோல பாவனை செய்தது. நிமிர்ந்தபோது அதன்கண்களிரண்டும் இளம்வெயிலில் ஈரத்தன்மையுடன் ஒளிர்ந்தன. […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18

This entry is part 21 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)  மூவங்க நாடகம்            (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 18 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா சார்லஸ் ஒரு முட்டாள் !  அடால்·பஸ் வெறும் பேச்சாளி !  ஸ்டீ·பன் ஒரு சோம்பேரி !  பார்பரா ஒரு பைத்தியக்காரி !  ஆன்ரூ நீ ஒரு சூது வர்த்தகன் !  இவை என் சொந்தக் கருத்துக்கள்.  […]

கடைசித் திருத்தம்

This entry is part 18 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக வடக்குப் பக்கம் நடந்தால் வரும் மண் ரோட்டில் வலது புறம் திரும்பினால் இருக்கும் நான்கு வீடுகள் கொண்ட ப்ளாக்கில் கோடி வீடுதான் என் நண்பன் ராஜேந்திரன் வீடு. ராஜேந்திரனின் அக்காவும் என் அக்காவும் வகுப்புத் தோழிகள் என்பதால் அவன் வீட்டிற்கு அடிக்கடி கணக்கு நோட்டு, ரெகார்ட் நோட்டு என எதையாவது வாங்க என் அக்கா என்னை […]

பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி

This entry is part 14 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் நெய்து கொண்டிருந்தான். எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தபோதிலும், உணவுக்கும் துணிக்கும் வேண்டியதற்கு மேலாக அவனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மோட்டா ரகத் துணிகளை நெய்த இதர நெசவாளிகள் பணத்தில் புரளுவதையும் அவன் கண்டான். தன் மனைவியிடம், ‘’அன்பே அவர்களைப் பார்! அவர்கள் மோட்டா ரகத் துணிதான் நெய்கிறார்கள். என்றாலும் பணத்தைக் குவித்தவாறு இருக்கிறார்கள். இந்த ஊர் […]

சுணக்கம்

This entry is part 10 of 41 in the series 8 ஏப்ரல் 2012

வழக்கம் போல இன்றைக்கும் நான் ஆபீஸுக்கு லேட். என்ன பண்றது?.எனக்கு வாய்ச்ச மகராசி எட்டு மணிக்குத்தான் டிபன் தருவாள்.எட்டரை மணிக்குத்தான் லஞ்ச் பாக்ஸ் ரெடியாகும்.அதுக்கு மேல இந்தக் கூட்ட நெரிசலில் பஸ் பிடிக்கணும்.எங்கே?,கண்ணதாசன் நகரிலிருந்து வேளச்சேரி போவணும். ஆபீஸ் அமைதியாக இருந்தது.டைரக்டர் ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறார்,அறையில் ஃபேன் ஓடிக்கிட்டிருக்கு. “ வாய்யா! எவர் லேட் ஏகாம்பரம்.”—இது ஏ4 ன் நக்கல். “டிராஃபிக்ஜாம்யா.” “இது வழக்கமா சொல்றது. எதையாவது புதுசா சொல்லப்பா.நாங்க 8-30க்கே ஆஜர் தெரியுமில்லே?.” “ அதிசயம்தான் சரீ […]

ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்

This entry is part 4 of 41 in the series 8 ஏப்ரல் 2012

வாத்தியார் வேணு நாயக்கருக்குக் கலியாணம். வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் அல்ல. கழி சுழற்றவும் பிடிகள் போட்டு எதிராளிக்கு முதுகில் மண் ஒட்டச் செய்யவும் கற்றுக்கொடுக்கிற வாத்தியார். அதனாலேயே அவருக்கு வாலிப வயது சிஷ்யப் பிள்ளைகள் அதிகம். ஆனால் வாத்தியார் வேணு கவிஞருக்கு சீடர் மாதிரி. கவிஞரிடம் பாட்டுக் கட்டப் படிப்பதெல்லாம் அவரால் நடக்கிற காரியம் இல்லை. கவிஞரிடமும் வேணுவுக்குக் கற்றுக் கொடுக்கும்படியான வித்தை எதுவும் இல்லை. சொல்லப் போனால் கவிஞர்தான் வேணுவிடம் சில உடற் பயிற்சி […]

முள்வெளி – அத்தியாயம் -3

This entry is part 2 of 41 in the series 8 ஏப்ரல் 2012

அறையின் மூன்று பக்கமும் பால்கனி. ஹாலிலிருந்தும் இரண்டு பால்கனிக்குக் கதவு உண்டு. அந்த இரண்டு பால்கனியில் மட்டுமே செடி கொடிகள். ஒரு பால்கனியில் பூந்தொட்டிகள், பூ பூக்கும் கொடிகள். இன்னொரு பால்கனியில் பூ இல்லாத செடி வகைகள், துளசி, போன்ஸாய் செடிகள், உயரமாக வளரும் வரை பால்கனியில் இருக்கும் மரக் கன்றுகள். மூன்றாவது பால்கனியில் நிறைய சிமெண்ட் நாற்காலிகள், சிமெண்ட் ‘பென்ச்’கள், அது அறையிலிருந்து மட்டும் தான் திறக்கும்.அறைக்குள்ளே புத்தக அலமாரி, மேஜை, கம்ப்யூட்டர், சிறிய திவான். […]

”பின் புத்தி”

This entry is part 38 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்

This entry is part 30 of 40 in the series 1 ஏப்ரல் 2012

1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு பிரம்மாண்டமான பறவை சாவகாசமாக ஜலப் பிரவாகத்தில் மிதந்து கொண்டு அசைந்து ஆடுகிறதுபோல் அந்தக் கப்பல் நின்றது. புத்தம் புதுசு. கம்பமும், படியும், கொடியும், உருளைக் கம்பிகளும், இரும்புச் சங்கிலிகளும் பளபள என்று புதுக்கருக்கோடு சூரிய வெளிச்சத்தில் ஜ்வலித்தன. இவ்வளவு நீளமும் அகலமும் விஸ்தீரணமும் கொண்ட கப்பலை நான் என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை. தோணியிலோ கட்டு மரத்திலோ ஏறி நின்றபடிக்கு இந்த சுந்தர ஸ்வரூபமான சமுத்திர வாகனத்தை நாலு […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17

This entry is part 29 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஆழ்ந்து கவனம் செலுத்துபவன் நான்.  உனது ஆன்மீகவாதிகள்தான் வறுமைக்கும் ஏழ்மைக்கும் கவலைப் படாதவர் !  அவற்றைப் போக்கக் கையில் பணமில்லாவர் !  எந்த வழி முறையும் தெரியாதவர் !  நான் வறுமையில் ஏழையாய் வாடுவதற்குப் பதிலாகத் திருடனாக மாற விரும்புகிறேன் !  பிச்சைக்காரனாய் யாசிப்பதற்குப் பதிலாக வெடி மருந்துக் கொலைகாரனாக ஆக விழைகிறேன் ! . […]