23 மறுவாழ்வு பிரிட்டிஷார் 31ஆகஸ்டு1957 இல் மலாயாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். அவர்கள் இந்நாட்டைவிட்டு வெளியேறிய போது, அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய அரசியல் பொருளாதார,சமூக,கல்வி, சமய,மற்றும் இதர உரிமைகளைப் புதிய மலாயா அரசியலமைப்புச் சாசனத்தில் முழுமையாக உறுதிப்படுத்தாமல் சென்றுவிட்டதால் இந்தியர்கள் இன்று பல துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைத் தந்த இந்தியர்கள் இந்நாட்டின் சிறப்புச் சலுகைகள் பெறும் பிரஜையாக ஆக்காமல் தமிழர்களைச் ‘சப்பி எறியப்பட்ட […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=swNXPxqgW_w Astronomers discover comet factory in distant star system, called : Oph-IRS 48 சில்லி விண்ணோக்கி மூலம் முதன்முறை வால்மீன் உற்பத்தி செய்யும் வளையத் தட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார் ! முந்திரிப் பருப்பு போல் தோற்றம் ! வளையத் தட்டில் வடை போல் மையத்தில் துளை ! பரிதிக்கு அருகில் உருவாகும் ஓர் அண்டக் கோள் ! […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் […]
ஜென் பாதை அந்திப் பொழுது பறவைகள் கூடடையும் விடியும் வரை சுவர்க்கோழி சப்தம் முன்பனி கம்பளி ஆடைக்குள் நானும், நிலாவும் தண்ணீருக்கு வெளியே தத்தளிக்கும் மீன் சில நாழிகைக்குள் குழம்பில் மிதக்கும் கருக்கல் இருளைக் கிழிக்கும் பரிதியின் கிரணம் சிதறிய நீர்த்துளிகள் ஒவ்வொன்றிலும் பரிதியின் பிம்பம் கொட்டும் மழை வெள்ள நீரில் மிதக்கும் பிணம் மேகத்தை பின்தொடர்ந்தேன் சிறிது தொலைவைக் கடந்ததும் மேகம் கரைந்தது வானம் எஞ்சியது […]
உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு ஆக்ஸ்ட் 3ஆம் நாள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் மூத்தவர்கள், பெய்ஜிங்கிலுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள், இந்தியச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், சீனாவுக்கான இந்தியா மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களின் அலுவலர்கள், நேயர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதில் கலந்து கொண்டனர். நேயர்களின் ஈடுபாடு, பல்வேறு சர்வதேசச் செய்தி ஊடகங்களில் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி, சீன வானொலி தமிழ்ச் சேவையின் […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை விக்ரமாதித்யன் தந்துள்ளார். இதில் ‘கவி மனம்’ என்ற தலைப்பில் கே.ராஜேஷ்வர் அணிந்துரை தந்துள்ளார். கவிஞனைப் பற்றித் தத்துவப் பின்னணியில் மிக அழகாக எழுதியுள்ளார். கரடி சைக்கிள் விடும்போது நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா? என்ற கேள்வி எவ்வளவு நம்பிக்கை தருகிறது! அணிந்துரையின் முடிவில், உரைநடையில் கவித்துவம் சுனாமி வேகத்தில் பாய்ந்துள்ளது. தத்துவ விசாரம் உச்சம் பெறுகிறது! ‘வார்த்தை’ என்பது பலமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]
பள்ளியில் பத்தாவது வரை படித்த அனைத்தும் விக்கிபீடியா’வில் பார்த்து ஒரு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம் என்றாகிவிட்டது போல,பழைய ஜாம்பவான்கள் நாற்பது வருடங்களாக இழைந்து இழைந்து கொடுத்தவற்றை நேற்று வந்த அநிருத் மூன்றாவது படத்திலேயே கொடுத்திருக்கிறார். பாம்பேயில் கூட பல வருடங்களாக தனியான ஆல்பம் என்ற விஷயங்கள் பரவலாக ஆரம்பித்து விட்ட போதும் இன்னும் தமிழுக்கு அந்த இசைக்கோர்வைகள், தனியான ஆல்பங்கள் , சினிமா சேராத ஆல்பங்கள் என்றவை வர இன்னமும் காலம் பிடிக்கும், தமிழன் இந்த விஷயங்களில் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என்னை மூச்சுத் திணற வைப்பவர் எனது காதலியர் ! என் உதடுகளில் முத்தமிடக் கூடும் கூட்டம் ! நுழைந்திடுவார் தடித்த என்தோல் துளைகளில் ! நேரடி மோதல் நேர்ந்திடும் எனக்கு எனது ஊர்த் தெருக்களில், பொதுத் தளங்களில் ! இரவில் என்முன் அமணமாய் வருவார் ! பகலில் அழுதிடும் பாவனைகள் ! ஆற்றோரப் பாறை இடுக்கில் […]
நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்று நூலுக்கான டி.வி.ராமசுப்பையர் இலக்கிய விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணனுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான முரசொலிமாறன் இலக்கிய விருது ந.கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது என்று கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவையின் மேலாண் இயக்குநர் கவிஞர் தியாகி தெ.வெ.பகவதிப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
“வாங்க, மேடம்!…. அப்பா! நான் சொன்னேனே, அந்த சிந்தியா தீனதயாளன் இவங்கதான்!… உள்ள வாங்க, மேடம் நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? …எல்லா டிகெகெட்சும் வித்தாச்சு, மேடம்!” என்று ஒரு போலியான உற்சாகத்துடன் ராதிகா அவளை உள்ளே அழைத்தாள். தமக்கு முதன் முதலாய் அறிமுகப்படுத்தப்பட்டவருக்குச் சொல்லுவது போல், தீனதயாளன், “வணக்கம்!” என்றார். “இவர் என் அப்பா. மிஸ்டர் தீனதயாளன். ரெய்ல்வே டிபார்ட்மெண்ட்ல இருக்காரு.” “அப்ப ரிசெர்வேஷனுக் கெல்லாம் உங்கப்பாவை அப்ரோச் பண்ணலாம்னு சொல்லு!” என்று […]