This entry is part 2 of 10 in the series 20 செப்டம்பர் 2026

மழை நீக்குமா பற்று எனும் அழுக்கை?

இருட்டிலிருக்கும் சாலை
கண் புரியாமைக்கு நாம் வருந்தியதில்லை
சற்று பார்த்து வந்திருக்கலாமெனும்
சமாதானம் மட்டும் கொண்டோம்.

இருட்டில் பெய்யும் பெருமழை மீது
அன்பு கவனிப்பு  நமக்கு ஏற்பட்டதில்லை
கண்ணற்ற மழை என்றே   நினைக்கிறோம்

இருட்டிலிருக்கும்  மனிதர் வாழ்வு
வெளிச்சம் காண
பற்றுக பற்றற்றான் பற்றினை எனும்
பாதைகள் உண்டென திருக்குறள் போதித்தும்  
மீண்டும் மீண்டும் உணர மறுத்த
மனம் கொண்ட மனிதர்கள் நம் மேலே
பற்று எனும் அழுக்கு நீக்க
பெய்யுது மழை
நம் வெளி உடம்பின் மேலே மட்டும்
பலகாலமும் தோல்வியுற்றும் விடாமல்.

***

Series Navigationசோனா மானாநிழலின் பயம்