__________________________
நான் கட்டுவது கற்பனைக் கோட்டை
காற்றுக்கும் மழைக்கும் தப்பிக்கும்
கண பெருமூச்சில் சுக்குநூறாய் உடைந்து சிதறும்
மழைத்துளி விழுந்தது
விழித்தது உயிர்
உயிருக்குள் உயிர் துளிர்த்தது
ஆறுமுகனுக்கு ஆறு தலை
இராவணனுக்கு பத்து தலை
தீரவில்லை தமிழனுக்கு இக்கட்டு நிலை
கடமையைச் செய்கிறோம்
பலனை எதிர்பார்க்கிறோம்
இனியும் பரிதவிக்க தயாராயில்லை
அமுது படைப்பவள் தெய்வம்
அன்பைத் தருபவள் தாய்
இரண்டறக் கலந்து ஒன்றானவள் பெண்
அப்பங்களுக்காக வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
காடைகளும் பறந்து வரவில்லை
பசி எம்மைத் தின்று கொண்டிருக்கிறது
புத்தன் ஆவது சுலபம்
சித்தன் மாறுவது எளிது
மனிதனாய் குடும்பஸ்தனாய் வாழ்வது கடினம்.
தேக்கம் புலி தலையில ஆயிரத்தெட்டு பேனு
நேரியல் துண்டு மினுங்க ஊர்கோலம் போச்சு
ஆக்கங் கெட்ட கூகைக்கு ஆம்பளன்னு பேரு
நெருப்புன்னா வாய் வெந்துருமா?
நீருன்னா தாகம் தீந்துருமா?
கோழி மிதுச்சு குஞ்சு செத்துருமா?
சிறகுகள் துளிர்க்கின்றன
மனதில் கனவுகள் திரளுகின்றன
வானம் விரிந்து கிடக்கிறது
நுங்கும் நுரையுமாக வரும் புது வெள்ளம்
தங்க இடமின்றி பாயும் கடலினுள்
சங்கொலித்து அலையும் ஆண்டிப்பண்டாரம்.

வசந்ததீபன்