This entry is part 6 of 10 in the series 4 அக்டோபர் 2026

எல்லா காலடிகளும் 

அந்த முடிவிலிருந்துதான் 

தொடர்கின்றன.

பக்கத்தில் ஓடும்

ஆற்றில் முழ்கி 

பிறவிக்கொடுத்த

ஆத்தாளுக்கு 

மூன்று முழுக்க கொடுத்த 

மகன் 

வெள்ளைத்துணியோடு

வீடு போய் சேர்ந்தான். 

வீடு நிறைய மக்கள். 

ஓரத்தில் 

ஆத்தாள் 

மெளனமாக நின்றாள் 

அகல் விளக்கு வெளிசத்தில். 

அவள் பிண்டத்தில் 

வளர்ந்த 

அத்தனை மக்களும்

அடுத்த வேளை சோற்றுக்கு 

பற்ற வைத்தனர் அடுப்பை. 

சுடுகாட்டிலும் 

தீ

வீட்டிலும் 

தீ. 

ஆத்தாள் நின்றாள் 

தீயாக 

அடுத்தப்பிறவியாக. 

இரா.ஜெயானந்தன்.

Series Navigationகாற்றுவெளி இதழின் காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த சிறப்பிதழ்மழைபுராணம் – 50