This entry is part 7 of 10 in the series 4 அக்டோபர் 2026

பா.சத்தியமோகன்

மழைலீவு !
                     –

மழை புயல் வருமெனவும்
பள்ளிக்கூரை பறக்குமெனவும்
மனதில்  வரித்து
விடுமுறைக்காக ஏங்கி ஏங்கி
கடைசி பீரியட் விடுமுறை விட்டதும்
எதிர்படும் மனிதரிடமெல்லாம்
“மழைலீவு” எனப் பேசிக்குதித்து
தூற்றல் போடும் பிள்ளைமனம்
மேகம் கலைந்தால்
“உட்காருங்கடா அத்தினிபேரும்!” எனும் வாத்தியார் குரலால்
அதிரும் இடி இடிக்கும்
சிறு பள்ளி மாணவன் மனம் பதை பதைக்கும்
ஈரமான மழை பெய்யும் கண்ணில்
மூட்டை கட்டி எடுத்துவைத்த புத்தகப்பை மீண்டும் விரிக்க
எங்கோ இடி இடிக்கும்.

***

Series Navigationதீவிடாய்