கடல்புத்திரன்
முகிலுக்கு …வாழ்வின் நிலயாமையை வசந்தனின் சாவு மறுபடியும் நினைவு கொண்டிருந்தது .இங்கே தான் இருந்தான், ஈழம்போல் தூரத்திலு மில்லை . அவன் இறந்தது கூட அவனுக்கு தெரியாமலே போய் விட்டிருக்கிற தே .அது அவனை துயரப்படுத்துகிறது . வந்த புதிதில் தந்தையோடு வசந்தன் தங்கி இருந்த கீழ்வீட்டிற்கு நிறைய தடவை போய் வந்திருக்கிறான் .
முகிலை விட ஐந்து வயசு இளையவன் , இங்கே வந்தலிருந்து உதவியாயிருக்கிற இருந்த ..தோழன் . இனி அவனை படத்தில் மட்டுமே காணலாம் . நெஞ்சில் ஒரு வெறுமை சுளிரென ஓடியது . இயற்கை , செயற்கை.. ஏற்படுத்தும் காயங்கள் வலிக்கவேச் செய்கிறது .ஊரிலேயே இருந்திருந்தால் …தீவு சிறிய தொலைவுத்தூர வசிப்பிடம். இங்கே இருப்பது போல கண்ணில் காணாது இருக்க மாட்டார்கள் . ‘
இறப்பு இயல்பாக சென்றிருக்கும் வருத்தி இருக்காது . அவனின் உறவுகள் கண்ணில் பட்டு ..நீரை நிறுத்தி விடுவர் இங்கே வாழும் முறையே வேறு. அகதி வாழ்வை வாழ வைக்கிற உலகத்தையே அவன் மனம் சபிக்கிறது. உள்நாட்டில் இருப்பதை ,வெளியில் வாழ்தகவு கூட …இருந்தாலும் நம் ஊரைப் போல் வருமா ? அத்திலாந்தி , இந்து , பசுவிக் , மத்தியதரைக் கடல் கள் எம்மை அங்கே பிரிப்பதில்லை . கூட்டணிகளை ஏற்படுத்தி விசராகவே மாறிய பேய் மனிதர்கள் திரியும் கடல் ,
அவனையும் அவர்களாக மாற்றும் நாடுகள் .கொஞ்ச காலமாவது அமைதியாய் , நிம்மதியாய் , திருப்தியாய் வாழ மனம் ஏங்கிறது . சுதந்திரக் காற்றை சுவாசிக்க மூக்கு ஏங்கிறது . .இங்கே இறப்பை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.. முற்பது வருசங்களை உறைய வைத்து அகதியாய் விரட்டுற இனவெறி .
அவன் என்னவோ நடை பிணம் தான்.
கடிபட்ட அவனுக்கு ! துவசம் செய்யவே கோபம் தலைக்கு ஏறுகிறது . இந்த ‘அச்சம்’ ஒன்றும் முகிலை பெரிதாய் அசைக்கும் வலுவற்றது . வயது மீறிச் செல்கிற போதும் கோபமும் உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது .
. கிராமத்தில் முகில் பிரிவிலே விடுதலை அமைப்பிற்கு அள்ளுப்பட்டவர்களை கை விட்டு எண்ணலாம் , அயலில் வேற மாதிரி இருக்கலாம் . அவனும் அப் பிரிவோடு அப்படியே நின்றிருந்திருந்தால் …வாழ்க்கை வேற மாதிரிமாறிப் போயிருக்கலாம் . அவனுள் விடுதலை வேணும் என்ற குரலும் எழாமல் கூட போய் விட்டிருக்கலாம் . ஒவ்வொருவருக்கும் மணி அப்பப்ப அடிக்கும் என்பர் . விடுதலை என்பது ஒரு புனிதவேள்வி . அதில் கலக்காமல் போய் விடுற தவறை நல்லகாலத்திற்கு அவன் செய்திருக்கவில்லை . எப்படியும் வாழலாம் என்பதில் அவனுக்கு உடன்பாடில்லை . கண்னெதிரே அநியாயம் நடக்கிற போது தட்டிக் கேட்கப்பட வேண்டும் . கேட்டேயாக வேண்டும் .
இவனைப் போல கீழ்ப் பிரிவினரே அதிகமாக அள்ளுப்பட்டிருந்தனர் . வெளியில் பலதரப்பினராக சேர அங்கே செய்திகள் விரைவாகப் பரவி இருக்க இங்கே தாமதமாகப் பரவியது.. இருக்கலாம் . செய்தித்தணிக்கைகளின் மத்தியில் அடிப்படை உரிமைகளும் இல்லாது , சிறையில் அடைப்பட்டுக் கிடக்கிற எவ்வளவு நாடுகள் … துன்பப்படுகின்றன . அதிக வருடங்களை உறைய வைத்து விடும் அந்த தனிமை வாழ்க்கைக்கு எதிராக மனிதயினம் எழுந்து போராடியே ஆக வேண்டும் . மத வெறியும், மொழிவெறியும் , சுரண்டல் அரசியலுமே இவற்றுக்கெல்லாம் மூலக்காரணம் .அவற்றை புறமுதுகிட்டு ஓட விரட்டி விட வேண்டும்.
அந்நேரம் ,அவனுக்கு தமிழரசுக்கட்சிக்கு ஒரு குருதி சிந்திய வரலாறு இருக்கிறது என்பது தெரியாத விடுதலைப் பற்றி ஒரு அட்சரமும் தெரியாத அப்பிராணியாய் இருந்தான் .பல இளைஞர்கள் சேர்ந்த போது அவனும் குதித்திருக்க வேண்டும் . சூழ என்ன நடக்கிறது என்பதையே தெரி யாத ளவிற்கு , தணிக்கை கவிந்து கிடந்தது சிங்களவரசு அமுலாக்கி வருகிற சட்டங்கள் எல்லாம் அறியப்பட வேண்டியவை .பொருளாதாரக் கட்டமைப்பும் அடிமைக்குரியது . ஆசிரியர்களுக்கும் அரசியல் பேச வாய்ப்பூட்டும் போட்டிருந்ததாகப் படுகிறது
அரச ஊழியம் அனைத்துமே அரச கதியில் இயங்குபவை . கலாச்சார சுதந்திரம் , சுயாதீனம் தேவைப்படுகின்றன .மொத்தத்தில் விடுதலை தேவைப்படுகிறது . அதற்காக அரசுசாராத்துறைகள் அதிகமாகவே இயங்க வேண்டும் என்று கூறப்படுகின்றன . தனியாராகவில்லாது’ காந்தியம் ‘ போன்ற சேவைப் பிரிவாக இயங்குவதே நன்மை பயக்கும் . இல்லா விட்டால் காலனிநாடுகள் திரும்பவும் நுழைந்து உறிஞ்சி சக்கையாய் துப்பி விடவே முயலும் . சுதேசிய தனியார் 40 வீதமும் , கூட்டு(சேவை) 60 வீதமும் என ஓரளவிற்கு ஓட விடலாம் தான் . லோக்கலே நல்லது , வெளியார் வேண்டாம் .2
ஈழத்தில் முற்றிலும் வேறான இன்னொரு இனம் இருக்கின்றது . அதை அவசியம் ஏற்றிருக்க வேண்டும் என்பதை இங்கே சொல்லவே வேண்டும் . பழைய தமிழரசுக்கட்சி வழியிலேயே சிறு சிறு ஹர்த்தால்களை நடத்திக் கொண்டுச் சென்று கடைசியில் ஒரு மாபெரும் ஹர்த்தாலை சிங்கள அபிமானிக்களுக்கும் அழைப்பு விடுத்து சேர நடத்தும் வழக்கத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் .52 ம் ஆண்டு இடதுசாரிகள் நடத்திய ஹர்த்தாலுக்கு வடக்கு , கிழக்கில் தமிழரசுக்கட்சியும் முழுமையாக சேர்ந்து பங்களிப்பு செய்தன . பிறகும் , இடதுக்கட்சிகள் பிரியாமல் ஒன்றாக நின்றிருந்தால் தமிழர்களுக்கு சில உரிமைகளாவது கிடைத்திருக்கலாம் .எல்லாத் தவறுகளையும் கல்வியிலே சுமத்த வேண்டியிருகிறது .
விடுதலை அமைப்புகள் பிரியாமல் அல்லது கூட்டிணைந்திருந்தாலும் கூட இன்றும் கூட ஒருவேளை போராட்டம் தொடர்ந்திருக்கலாம் .மறைவான கரங்கள் திட்டமிட்டு தான் இந்த பிரிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டுச் செல்கின்றன .
திருக்குறள்கள் பாடங்களை உள்ளடக்கிய செவ்வழிகல்விநெறியை ஏற்படுத்தினால் தெளிவை ஏற்படுத்தி அவன் சிறுநடை போட்டு கல்விக்காக போராடியே ஆக வேண்டிய தர்ணம் இது . இப்படி எத்தனைத் தர்ணங்களை தவற விட்டிருக்கிறார்கள் ?
.தாமதமாகவே 84 கடைசியில் அமைப்பொன்றில் இணைந்து, கிராமத்துப் பொறுப்பாளர் ஆகியை அவன் சிறிய தோழர்களுக்கு வழிகாட்டிச் செல்ல தபால்காரனாகத் திரிந்தவன் . இவர்களை பொதுவில் புதிய வரவினர் எனலாம் . தமிழரசுக்கட்சியின் வரலாறும் தெரியாமல் அமைப்பு பற்றியும்… சரிவர தெரியாமல் அரசியலுக்குள் வந்திருப்பவர்கள் இருந்தாலும், ஊர்கள் -கிராமங்கள் தோறும் ஓரிரு தீவிர கூட்டணித் தொண்டர்கள் அறியக்கூடியவர்களாகவே பிரகாசித்து இருந்தனர் . அவர்கள் அவ்விடத்தின் முத்துக்களாக மதிக்கபடுற மரியாதைக்குரியவர்கள் .எல்லாச் சமூகத்திலும் தொண்டர்கள் இருந்தனர் . சாதிப்பிரச்சனைகள் ஏற்படுற போதெல்லாம் இவர்களே தீர்த்து வைத்தவர்கள் . உண்மையில் , அமைப்பினரும் மக்களும் கூட்டணியினரை வெறுத்தவர்கள் இல்லை .
இளைஞர்பேரவையினர்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட உரச லால் கூட்டணியினர் தம்மை ‘கை விட்டு விட்டார்கள் ‘ என்ற கோபமே மனப் பிரிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது . இருந்தாலும் , புதிய காவலராக உருவெடுத்திருக்கிற முகில் போன்றவர்கள் சமூக பிரச்சனைகளில் இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கத் தவறவில்லை .
வசந்தனோடு பழக முதலே , அப்படி ஒரு தொண்டராக அவனுடைய தந்தையோடு பழகியிருந்தான் . பிறகு , அமைப்புக்கு அவசர உதவிகள் தேவைப்படுற போது வசந்தனும் பெற்றுத் தரதவறியதில்லை . எல்லாருமே , கிராமத்துப் பள்ளியிலே படித்தவர்கள் . கிராமம் என்றால் எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும் . அவனுடைய வகுப்பு நண்பன் ( மெய்வல்லுன) விளையாட்டு வீரன் . அவன் கராட்டி வகுப்புக்கு கூட எடுத்தவன் . அவனோடு வாசிகசாலை வளவில் , இந்த வசந்தனும் சேர்ந்து’பார்’பயிற்சி எடுப்பதைப் பார்த்திருக்கிறான் . ‘அமைப்பு ‘ஒரு கோடு . கோட்டைக் கடந்த பிறகு நண்பனோடு முன்னைய மாதிரி பழக முடியவில்லை . விடுதலைக்கு போவதால் நட்பு இல்லாமல் போய் விடுமா என்ன? .ஆனால் இடையே சில அந்நியங்கள் புகுந்து வலுவிழக்கச் செய்கின்றன . முகிலுக்கும் வசந்தன் தம்பி என்ற நினைப்பு நெஞ்சில் இருந்தது
அவனுடைய கிராமத்து அமைப்புகளில் பகைமை இழைகள் அவ்வளவாக நிலவவில்லை . ஒருத்தருக்கொருத்தர் நேருக்கு நேரேயே கதைத்துக் கொள்வர். அதனால் இடம் பெறவில்லையோ? .ஆனால் ,பல இடங்களில் பகைமை வித்து முளைத்து பதரச் செய்திருந்தன . புத்திரர் , ஆயுதத்தை நீட்டுவதற்கு ‘ பழைய நட்பின் தொடர்ச்சி இல்லாதிருந்ததே காரணம் என்று சொல்ல முடியா விட்டாலும் அது தற்காலிக அமைதி நிலை என்பதை மறப்பதற்கில்லை . வட்டுக்கோட்டையில் , நிலவிய நேசம் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களை இயக்க மோதலுக்கு முதலே எச்சரித்து கொழும்புக்கு போக வைத்திருக்கிறது . இயக்க வேட்டையில் சங்கரலாலைச் சுட்டதை ‘ மனசே சரியில்லையடா” என …கொட்டி அழுவைத்திருக்கிறது . தோழர்களிடமும் லசந்த விக்கிரமசிங்க , போன்றவர்கள் இருக்கவேச் செய்திருக்கிறார்கள் . எதிர்க்கால நட்புக்கு அது ‘ஒரு பாதை எனக் கூறலாம் ‘எனவே படுகிறது
மேலேயிருந்து தான் நாட்டுச் சரித்திரம் எழுதப்படுகிறது . அமைப்பிலும் அப்படியே தான் . உட்கட்சி ஜனநாயகம்- நிலவும் போது …இவை வேலை செய்யும் . ‘ஜனநாயகத்திற்காக போராடும் போராளிகள்’ என்றும் மரியாதைக்குரியவர்கள் .
இவர்களையும் சேர்த்து அமைப்புகள் எழுகிற போதே மணியோசை …கேட்கலாம் . அது கற்பனை நிலை , கையில் வருமா எனத் தெரியவில்லை . இந்திய தேசியக் காங்கிரஸ் , ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்…என வேற விடுதலைப் போராட்ட இயங்களில் ஏற்பட்டிருக்கின்றன தான். .இந்தியாவில் ,பிரீட்டீஸின் கயமையால் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது . ஈழம் நரகமாகப்பட்டிருக்கிறது .பிரிவினை என்றால் , அங்கே இணைய முடியாதளவிற்கு சதிவலைகளையும் பின்னி விடுகின்றன . நாம இனவெறியை சந்திக்கிறோம் .
எங்கும் ஜனநாயகம் , அவசியமாகிக் கிடக்கின்றன . அமைப்புகளில் உட்கட்சி ஜனநாயகம்
முகமுறிப்பு , கோபம் .போன்றவற்றின் கொரூரங்களை பெடியள்கள் , அறிவதில்லை . தீமை தீமையையே விளைவிக்கும் ,நன்மை நன்மையையே விளைவிக்கும் என்ற எளிய கருத்து தான் . அலட்சியமாயிருந்து விட்டால் ,அது , பிறகு சாதிப்பிரச்சனையாய் எல்லாம் கிளை பரப்பித் தள்ளுகிறது .
ஒரு நண்பன் -ஒரு மனிதன், கல்யாணத்திற்குப் பிறகு .ஒரு சமூகப்பிரதிநிதியாயே கருதப்படுகிறான் .அது இயல்பாகவே நிகழ்கிறது. இதுவரையில் கிடந்த பன்முக நட்பு மாயமாய்…கழற அவனுக்கு புதிய கடமைகளும் புரியவதில்லை .பல்கலைக்கழக பட்டம் போல ஒரு பட்டம் , எங்கெங்கேயோ எல்லாம் இழுத்துச் செல்கிறது.சமூகம் பிளவுபடுத்தியதை மேலும் விசாலிக்க போலி ஜனநாயகம் தூண்டிலுடன் காத்திருக்கிறது .
வேலை வாய்ப்பு ,பொதுவான போராட்டமாய் கிடக்கிறது உறவு , இறப்பு என்ற வரைபில் அன்னியம் காவி விடுகிறது . . மத , மொழி அரக்கர்களால் விழ்த்தப்பட்ட நிலை அகதியாய் ஓட வைக்கிறது . கைப்பிடிக்குள் உலகம் சுருங்கி விடுகிறது . அவன் வாழ்வு குடும்பப் பிடிக்குள் சுருங்கி விடுகிறது .
சிவப்பாகிய விடுதலைப் போராட்ட தீ அணைந்து விடுகிறது . வேலை கிடைத்தவன் அதிருஷ்டசாலி , கிடையாதவன் ஏமாளி ‘..என்ற தூண்டிலில் ஆடிக் கொண்டே அவன் வாழ்வு கழிகிறது .
ஈழவரசு தனது அகண்ட சிங்களத்தை அராஜங்களில் வளர்த்து வருவது அறுந்து அறுந்து தொடர்கிறது . .
-ஜனாதிபதி – அரசராக முடி சூடிக் கொண்ட ஜே. ஆர் கிட்லரின் நடை போட்ட கதை தான் கடந்த கால வரலாறு . . இன நடையில் உச்சம் , மத்திமம் , வீழ்ச்சி எல்லாம் கிடையாது படுகொலை என அடைந்த திருப்பப் புள்ளிகள் அதிகம் . விதிகளை மனிதன் எழுதுகிறான் . பெடியள்க் கூட்டம் விடுதலையைக் கையில் எடுத்து … தொங்கிய முகத்துடன் நிற்கிறது . சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேரவில்லை . அனைத்து அராஜகங்களிலும் புகுந்து ஒரு புயலே அடித்து ஒய்ந்திருக்கிறது .
தனிமனிதச் சுதந்திரம் , நிம்மதியான வாழ்வு வேணுமானால் கூட்டுகளைப் பற்றி மேலும் அறிந்து செயல் புரிய வேண்டும் . ஆனால் , புயலின் சேதம் , காயம் , வேதனைகள் ….ஒரு புரட்சிக்கான காலத்தை பின்னால் நீண்ட தூரத்திற்கு தள்ளி விட்டது .
ஆனால் , நச்சு அரசியல் முன்பைப் போல முன்னேயேக் கிடக்கிறது . பாம்பு ஏணி ஆட்டத்தில் பாம்பில் இறங்கி முந்தைய பழைய இடத்திலேயே வந்து இறங்கி நிற்கிறார்கள். அந்த நச்சுப்பாம்புகளை இனி எப்படிக் கையாளப் போகிறார்கள் , கட்டுப்படுத்தப் போகிறார்கள் ?
அமைப்புகள் அசை போடும் காலம் இது .
..அமைப்புகளில் உள்ளே புகுந்த போட்டா போட்டிகளால் பொறாமை யின் ஏற்ற இறக்க வரைபால் நிலப்பரப்பே மேடு பள்ளமாகப் போய் விட்டது
கோவில்களில் பாரதக்கதை , இராமர்க்கதைகளின் கதாகலாச்சேபங்களைக் கேட்பதை யும். அங்கே நிலவிய . வேல் குத்தல் காவடிகள் ,சிலம்பம் ,சூரன் ஆட்டம் , தீ மிதிப்பு முதலான நிகழ்வுக ளில் தலையிடாமலும் அப்படியே அரங்கேற விட்டிருந்தால் , எல்லாமே கலைககளும் விளையாட்டுகளும் தாமே . ஏதோ ஒலிம்பிக்கில் விளையாடுற ஐரோப்பியருடையவை மாத்திரம் விளையாட்டுகளில்லை , நம்முடையதும் விளையாட்டுக்கள் தாம் . அவற்றை ஆசிய ஒலிம்பிக்கில் அரங்கேற்றி பீடு நடை போட வைப்பதோடு இந்த அமைப்புகளிற்கும் கொஞ்சம் புரிதல்கள் ஏற்பட்டிருக்கலாம் போலப்படுகிறது .
பழமையில் குளித்த கோவில்கள் பாரம்பரியங்களை அழிந்து போகாது காப்பாற்றி வருக்கின்றன . மூடநம்பிக்கைகளை அதன் போக்கிலே விட்டு விடுவோம் .
அவசியம் , அவசியமற்றச் செலவுகளை வாழ்க்கையில் செய்வதில்லையா?, நிறையத் தானே செய்கிறார்கள்..வரவுசெலவு திட்டம் போட்டால்..எவராலும் கணிசமாய் சேமிக்கவும் முடியும் . ஆனால் , நாம் அதைச் செய்வதில்லை, ஏன்? . வாழ்க்கையில் ஒட்டியுள்ள சிறிய மகிழ்ச்சிகள் , சந்தோசங்கள் அதனோடு கழன்று போய் விடும் என்பதற்காக , இல்லறம் நல்லறமாக விளங்க .வேண்டும் என்பதற்காக..காதுக்குத்து , பிறந்தநாள் நிகழ்ச்சிகள் .என..எல்லா விசேங்களும் தேவைப்படுகின்றன எனற தார்ப்பரியம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக நம்மினம் விளங்க தேவைப்படுகிறது போல படுகிறது . விடுதலைக்கான ஓர்மம் இவற்றால் குறைந்து விடுமென அமைப்புகள்… அஞ்சுகின்றன . இருந்தும் என்ன பலன் . ஒன்றை நிறுத்தினால் இன்னொரு பூதம் தானே வருகிறது ?.
கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்த சமுதாயம் நம் தமிழ்ச்சமுதாயம் . எனவே கதைக்கூடாகத் தான் அவர்களின் விடுதலையையும் கொண்டு செல்ல வேண்டும் .
எதிர்காலத்திலும் அவர்களின் எதிரிகளை விலத்தியோ அல்லது மனமாற்றத்தை ஏற்படுத்தியோ தான் வாழ வேண்டும் .
தனிக்கையாக இருக்கிற போது சுமையாய் பொறிகிறதுகள் , கூட்டுக்கைகளாக .இருந்தால் பொறிய மாட்டாது . ஆனால் ,எங்கே கூட்டுக்கை ? அங்கே தாம் அவர்கள் சிதறல்களாக இருக்கிறோம் . முகில் போன்றவர்கள் அமைப்பு ஒற்றுமையை , மக்கள் ஒன்றுபட வேண்டுமென தமிழர்கள் , அரசு தமிழ் சிங்கள ஒற்றுமை ….என எல்லாமே ஒரே திசையில்லாமல் கிடக்கின்றன . எல்லாரிடமும் கொடூரங்களும் ….இருக்கின்றன . அவற்றின் பக்கவிளைவு நரபலி கேட்கிறது .
மக்களிடமிருந்தே பார்த்தான் .
ஆரம்பத்தில் கூட்டுக்கையாயிருக்கவே தொழில்ப்பிரிவுகள் எழுந்ததை …அவர்களின் முட்டாள்த்தனத்தாலும் , எதிரிகளின் பிரித்தாளும் தந்திரத்தாலும் சாதிகளாகி சீரழிந்திருக்கிறார்கள் . முகிலுக்கு கடலில் தோணியில் மிதந்து வலை வீசி மீன் பிடிக்க -ஒரு மீனவனாக வாழ எல்லாம் நிறைய பிடிக்கும் . பிள்ளைச் செல்வங்களுக்கு ஒவ்வொரு தொழிலில் சிறக்கவெல்லாம் ஆசை . பெற்றோருக்கு இவன் பொறியிலன் , மருத்துவன் …என்ற பிடிவாத ஆசை . பெற்றவர்கள் மூளைப்பகுதி . வந்தவன் போனவன் எல்லாம் பிரிவினையைப் பெருக்க மூளை விருப்புக்கேற்ப இவன் இந்த சாதி , அவன் அந்த சாதி…என பிரித்து விட்டுச் செல்ல – கடிகாரமே ஓட …பிள்ளைகளின் ஆசைகள் கருகிப் போயிற்று .
பெடியள்கள் வரிந்து கட்டிக் கொண்டு ‘ஆசைகள் எல்லாம் நிறைவேற தர்ணம் வந்து விட்டது ‘ என்று விடுதலைப் போராட்டத்தில் குதிக்க , ஆரம்பத்திலேயே சறுக்கல் . புத்திரர்கள் அவர்களை நோக்கியே துவக்கை திருப்பி விடுகிறார்கள் . ஆமாம் , புதியபுலிகள் இயக்கத்திலிருந்தே உட்கொலையுறல் தொடங்கியது . பிறகு , எல்லா அமைப்புகளிலும் -அது ஒன்றாயிருந்தாலும் சரி இரண்டானாலும் சரி …இல்லை, எத்தனை பொறியாய் பறந்தாலும் சரி …அத்தனையிலும் சுடுறது ஒரு மொழியாகவே இருந்து தொலைத்து விட்டது .
என்ன செய்வது நவீன அகிம்ஷை துவக்கோடு தானே பிறந்திருக்கிறது . கருவியை இயக்கப் பயிற்சி எடுப்பதும் தவிர்க்க முடியாகியது . படையினர் மட்டும் ஆயுதம் வைத்திருக்கலாம் என்ற ஜனநாயகம் இங்கேயும் புகுந்து போலீஸு ..தானே அதிகாரத்தை கையில் எடுத்தது போன்ற கேலிக்கூத்த்தாகி விட்டது . இனி இதெல்லாம் சரிவராது .
இனிமேல் எந்த அரசு , மக்களின் எந்த முயற்சிக்கும் – கை கொடுத்து -வழிகாட்டி அதை லைசென்ஸ் ஆக்கிறதோ அது தான் நமக்குத் தேவை . லைசென்ஸை அரசாங்கம் கொடுக்கிற முறை இல்லை .
கார் செய்யவோ , விமானம் செய்யவோ , ஆயுதம் செய்யவோ , மீன் பிடிக்கவோ , எந்தத் தொழில் ஆகட்டும்…மது வடிக்கிறதும் கூட தான் …மனிதன் சுதந்திரமாகச் செய்யும் நிலை வர வேண்டும் . மனிதனின் சுயமரியாதைக்கு பங்கம் வராத நிலையில் எதிலும் ஈடுபட உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் . அரசிடம் அதிக அதிகாரத்தைக் கொடுத்து பட்டபாடு போதும் . மக்களிடமே …எல்லாமே இருக்கட்டும் . சேவகனாக அரசு இருந்தால் மட்டும் போதும் .
இந்த முறை ஏற்கனவே அமெரிக்காவில் நிலவுகிறது என்கிறீர்களா? . ஆனால் , அமெரிக்கா வெளியாரின் சுயமரியாதைகளை மதிப்பதில்லை , அதன் மனிதப்பண்புஓரேயடியாய் தாழ்ந்து விட்டது . பாரீஸின் நாகரீகம் அங்கே கொடி கட்டிப் பறக்கிறது .
ஃபிரெஞ்சுப்புரட்சி பெண் விடுதலையை ஏற்படுத்தி இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை . அழகியலை ஏற்படுத்தியிருக்கிறது என்று பகிடியாகச் சொல்லலாம் . ரஸ்யபுரட்சியே …ஏற்படுத்தியது என்கிறார்கள் . ஃபிரான்ஸின் தாக்கம் …ஐயர்லாந்தை விடுதலைப் பெற வைத்திருக்கிறது .ஆனால் , தேச விடுதலையும் பெண் விடுதலையும் சேர்ந்த விடுதலை என்றால் …பெண்ணியம் தலைநிமிர்ந்திருக்கிறது …என்று பின்னடைகிறார்கள் . அது அவன் தரப்பில் சமூக விடுதலையும் தேசியமும் சேர்ந்தத விடுதலை என்றதாகி … சமூக விடுதலையில் சாதிய , பெண் விடுதலை இரண்டுமிருக்கிறது என்று சமாளிக்கிறான் . அதற்கு ஜனநாயகக் கட்டமைப்புஒன்று எழுந்தால் தான் எல்லாப் பிரச்சனைகளும் தீர்வுக்கு வரும் என்ற பதிலை கையில் காவி வைத்திருக்கிறான் . ஃபிரான்ஸில் பிறந்தத ஜனநாயகத்திற்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறதா? . அடுத்த காலடி தான் மார்க்சிசப்புரட்சியே என ரஸ்யப்புரட்சியின் . புரியாதப்பாடத்தை படித்தறிய வேண்டியிருக்கிறது . சோவியத்யூனியன் குலைந்ததோடு ….மார்க்சிசம் தோல்வியடைந்து விட்டது வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது .
ஈழ ஜனநாயகத்தில் பேராண்மை புகுந்து கொண்டு ஆட்டம் போடுகிறது . பிரிட்டனின் ராஜ கெளரவத்தை ஒத்த சிங்கள ஆட்டம் . இந்தியாவை இழந்த ஆத்திரத்தில் …பிரிட்டனே இதை வழி நடத்திச் செல்கிறதாகப் படுகிறது .
பிரிட்டனும் ,ஃபிரான்ஸும் மிக மோசமாக ஆட்சி புரிந்த கடந்த காலனி நாடுகள் . பிரிட்டன் மயக்க மாத்திரைகளைக் கொடுத்து தன்னை நாகரீகமாகக் காட்டிக் கொள்கிறது . அது புரிந்த ஜாலியன்வாலாப்படுகொலை தான் இந்தியாவை சுதந்திரமடைய வைத்தது . தென்னாபிரிக்கா விடுதலையிலும் ஏதாவது …ஒரு படுகொலை காரணமாக இருந்திருக்கும் எனப்படுகிறது . கொடூரம் , மிகக்கொடூரங்களிற்கு விலை கொடுத்தே ஆக வேண்டும் .வெறும் மன்னிப்புக் கேட்பதால் வரலாற்றை மறைத்து விட முடியாது . … உக்ரேனில் மொழி ஆட்சி , ஈழத்தில் அதோடு சேர்ந்து மத ஆட்சி எல்லாமே இவற்றின் விளையாட்டுகள் தான் .
உலக அரசியலாலும் அவன் அழுகை நிற்காது போலவே படுகிறது . தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கவே சுதந்திரம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் .அவனுக்கும் அந்த கர்வம் இருக்கிறது . ஆர்ப்பாட்டங்களில் கத்திக் கொண்டு திரிந்த அந்தக்கால நினைவுகளும் முகிலின் கண்ணில் தெரிகின்றன.. அச்சமயம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டது கூட.. ஏன் எரிக்கப்பட்டது ? என்ற கேள்விக்கு விடை தெரியாதிருந்தது . பிறகும் தெரியாமலே தான் இருந்தது . கொடும் அரசுகள் கலாச்சார உடமைகளை , உரிமைகளை , அடையாளங்களை எரித்தழிப்பதிலே குறியாய் கிடப்பவை என்ற விதியை புலம் பெயர்ந்த பிறகு தானே அறிகிறான் .
கடுமையான தணிக்கைகள் தமிழ்ப்பிரதேசங்களில் நிலவின . அவை இன்றும் மெளனிக்கவில்லை தான்.
கழுத்தில் சிங்கக்கயிறுகளைக் கட்டித் திரியும் ஈழவரசின் ஆணிவேர்(சட்டங்கள்) பழுதான ஒன்று தான் . சுய நடை போடத் தெரியாத நடை , மற்ற இனங்களையும் வாழ விடாது வைத்திருக்கிற வைக்கல்ப்பட்டறை அரசு .இந்த சிறியத் தீவில் ஈழத்தமிழர் பிரிந்து போவதால் ஒன்றும் உன்னதம் பெற்று விடப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள்தனம் . உண்மையில் பிரிவினைக் கதியால்களைப் போட்டது அரசு தான் . ஆனால் , தமிழருக்கெதிராக பிரிவினைத் தடைச்சட்டத்தை போடுகிறது . இதென்ன கரம்போர்ட் விளையாட்டுஎன்று நினைத்துக் கொண்டிருக்கிறதா . அப்படித்தான் நெடுக நினைக்கிறது , கிடக்கிறது . தேவையற்றச் சட்டங்கள் அடக்குமுறை நுகங்களாக போட்டு சுதந்திரங்களை நசுக்கி பறிக்ன்றன .
சுய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புறதில் தமிழரும் அக்கறையுடையவர்கள் தாம் . ஆனால் , அவர்களுக்கு தமிழரின் ஒத்துழைப்புகள் தேவையில்லை என்ற வக்கிர வாதம் அதனிடமிருந்து இன்னமும் கழறவில்லை .முற்றாக சுயம் இழந்த பின் எதற்கும் லாயிக்கற்றவர்களாகி விடுவார்கள் என்ற உண்மையும் அவர்களுக்கு புரியவில்லை . புதிய ஆட்சியில் சாம்பல் மேட்டில் முளைத்த காளான் சிந்தனைகள் ஆறுதலாக இருந்த போதிலும் செயல்படும் வேகம் போதவில்லை . அழிவுச்சக்கரம் சுழன்றளவிற்கு …அது ஆமை ஓட்டமாகவே காணப்படுகிறது .
அவர்களுக்கு ஒரு இன்னொருப் பணியும் இருக்கிறது . பொதுவெளியில் நிற்கும் அனைத்து இனத்துவேஷிகளின் சிலைகளையும் , படங்களையும் எடுத்து பொருட்காட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைத்து , அவர்களின் சொரூபங்களை வெளிப்படுத்த வேண்டிய பணி . அதாவது சமானிய மனிதப் பார்வையில் அவர்களின் சுயசரிதைகளை புத்தகங்களாக எழுதப் பட வேண்டியதும் அவசியம்.
அடையாளங்கள் அப்படியே வைத்திருக்கும் வரையில் பூஜைகள் செய்து வருவதை தடுத்து நிறுத்தாத வரையில் மீட்சி யாருக்கும் கிடைக்கப் போவதில்லை . தற்போதைய அனைத்து தமிழ் , சிங்கள மக்களின் அவல ,துயர வறுமை நிலைகளுக்கும் …இந்தச்சிக்கல் எடுபடாதே காரணம் . ஈழத்துக்கு உகந்தது மக்களாட்சியே தவிர அரசியல் ஆட்சியல்ல .
கொழும்புத்தலைநகரை , சிங்கள ஊர்களை விட இந்தியக்கரை நகர்களே வடக்கிற்கு கிட்டவான தூரத்திலே கிடக்கின்றன .கடல் வீதிகள் சுதந்திரமாக திறந்து விட்டால் , வர்த்தக கொடி பறக்க சென்று வந்தால் , பாலங்கள் அமைய இருகரைகளிலுமே விசா விலத்திய வர்த்தகம் இயல்பாய் நடைபெற்றால் இந்தப்பகுதி பொருளாதாரமும் வளர்ச்சி பெறுமே , இதைக் குறித்து யார் கவலைப்படுவர்? . அந்த இணைப்பு ஈழத்து பொருளாதாரக்கும் நன்மை பயக்குமல்லவா . சுயத்திறமைகளை – முளைகளை தடை செய்வதால் யாருக்கு என்ன பயன் ?
.
தமிழர்க்கு கடலில் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டிய தில்லை . வரலாறு வரலாறாக (கடந்த போரிலும்) கடலைக் கலக்கியவர்கள் . தடைகளை நீக்கினால் கப்பல்க் கட்டும் பட்டறைகளை உடனடியாகவேக் கட்டிக் கொள்வர் . வல்லை என்ன , வடபகுதிக்கப்பல்கள் கடலைக் கலக்குமே .
உயிர் வாழ . இயக்கம் வேண்டும் . இயக்கத்திற்கு வேலைகள் வேண்டும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை . எங்கும் கொட்டிக்கிடக்கின்றன . சுயமாகவும் கட்டிக் கொள்ள முடியும் . அரசு அதிக தடைகளைப் குறுக்கே போட்ட சிங்கள ஜனநாயகமாக இருப்பதே பின்னடைவாய்க் கிடக்கிறது . சிறையில் அடைத்திருப்பது போதாதென்று , வெளியிலும் காலுக்கும் கையுக்கும் காப்புக்களை மாட்டி வைத்து …திறந்த சிறைச்சாலையாகவே வாழ்வை வைத்திருக்கிறது .
தற்போதைய அரசு, கொஞ்சம் முற்போக்கான நடையில் படையினருடன் சேர்ந்து செயல்பட முனைகிறது . பூஜ்ய நிலையிலிருந்த சக்கரம் சுற்றுகிறதே தவிர பயறுத்தல்கள் ஒழியவில்லை .ராணுவத்தின் கையிலே விழுந்து கிடக்கிற ஈழம் …வாய் விட்டுக் கதறனும் போல அவனுக்கு இருக்கிறது .
அன்னியத் தேசத்திலும் முகிலுக்கும் உறக்கமில்லை ! . நிகழ்காலமும் இல்லை எதிர்காலமும் இல்லை என்ற மயக்க (பழைய )நினைவுகளின் தாலாட்டில் நாள்கள் கழிக்கின்றன .
அவனுடைய அமைப்பிலிருந்த பலரை அவன் சந்திக்கவில்லை தான் . ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை கொண்டிருக்கிற அமைப்பில் சந்திக்கவும் முடியாது தான் . சந்தித்தவர்களில் பலர் , இவர்கள் விமர்சிக்கிறது போன்று கொடியவர்களும் இல்லை . போராட்டத்தின் போது நிறைய வானொலிகள் இயங்கின .அரசினுடையவை ,அமைப்பினுடையவை . அதேப் போலவே இவர்களின் படைப்புகளும் கிடக்கின்றன .
புலம் பெயர் நாட்டிலும் தோழர்களின் பிரிவுகள் அதிகரித்தே போகின்றன. வசந்தன் போல…அண்மித்திருப்பவர்களில் கூட எத்தனைப் பேர்கள் கல்யாணமாகி தொடர்புமில்லாது போய் விட்டார்கள் . குடும்பப்பிரதிநிதியே . குடும்பத்தினரைச் சந்திக்க முடியும் . ஏற்கவே அமைப்புகள் மக்களுக்கு பிடிக்காதவை . அது வேர் விட்டு படந்திருக்கிறது .அதனால் ஊருடன் உறவுகளையும் நண்பர்களையும் இழந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் .
வாழ்வில் ஒரு பூமாலை வேண்டும் . ஒரு மங்களம் பரந்திருக்க வேண்டும் .வேலை வேண்டும் .போதிய வருவாய் வேண்டும் . உறவுகளை , நண்பர்களை ஒன்று கூடல் மூலம் அரவணைத்து…செல்கிற சமார்த்தியம் வேண்டும் , அதற்கு கணிசமான செலவுகளையும் இறைப்பதும் பழக்கத்தில் வர வேண்டும் , அதையும் சம்பாதிக்க வேண்டும் . இல்லையேல் …. விரக்தியின் இழுவையில் , விதியின் இழுவையில் எவ்வளவு கீறல்களுடன் இழுத்துச் செல்லப்படுவோம் என்பது அவனுக்கு புரிகிறது.
ஒவ்வொரு நாளும் உள்ளூர்ச் செய்திகள் . தலையை கனக்க வைக்க உலகச் செய்திகளும் அதே மாதிரி செல்ல கையாலாகதவனாக சுயமிழந்து போகிறான்.
தமிழ் இலக்கியக் கூட்டங்கள் கொஞ்சம் அவனுக்குசிறிய ஆறுதலை கொஞ்சம் அவனுக்கு ஏற்படுத்துகின்றது .
வழக்கமான இலக்கிய கூட்டம் ஒன்றில் , அவன் கிராமத்தைச் சேர்ந்த… செந்தில்நாதரை சந்தித்தான் . அன்று , அவர் தம் மனைவியையும் கூட்டி வந்திருந்தார் . அவர் அவனுடைய நண்பனின் மூத்த அக்கா . அவரிடம் வசந்தனை பற்றி விசாரித்தான் . “குலமா? ( வீட்டுப்பேர் குலம்) , அவன் இரண்டு வருசத்திற்கு முதலே செத்துப் போனானே ” என்றார் . அச்செய்தி அவனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது . “அப்ப பவுன் அண்ணா எப்படி ?…” கேட்க ” அவருக்கு வயசாகி விட்டது மொன்றியலில் இருக்கிறார்” என்றார் .’அவரையாவது ஒருமுறை சந்திக்கத் தான் வேண்டும்’ என்று… மனம் அடித்துக் கொண்டது . ஐம்பது வயதுக்குள்ளே குலம் இறந்து விட்டான் . நாற்பது வயசுக்குப் பிறகே வாழ்க்கை தொடங்கிறது என்பர் . போதிய காலம் கூட வாழவில்லை . தொடர்ந்த அவர் ” என்னவோ, தம்பி ஏ,எல் ‘வருத்தம் என்கிறார்கள் ? தாயும் ,அதே வருத்தத்திலே இறந்து போனவர் ,அவரின் தம்பி , இராசய்யாவும் கூட அதே வருத்தத்தில் தான் இறந்தவர்..” என்று சொல்லிக் கொண்டு போகிறார் .அன்று பவுன் அண்ணை போற போதெல்லாம் ‘ இங்கே மனைவியையும் மகளையும் எடுக்கோணும் ‘ என்று சதா கதைப்பார் .
அவனுக்கு வசந்தனின் தாய் இறந்தது தெரியும் . அது அவருக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. இடிந்து போன அவரைப் பார்க்க மன வருத்தமாக இருந்தது .
முகிலுக்கு குலத்தின் தாயை நன்கு தெரியும் , குட்டித்தங்கச்சியையும் தெரியும் . திடும் திடுமென சாக்கள் கதவைத் தட்ட …உள்ளம் பதறுகிறது . பிறகு ,(இங்கே) மாமன் இறந்ததும் தெரியும் . கிராமத்தவர் ஒவ்வொருவராகப் போக இதய அடிப்பு ஏறிக் கொண்டு போகிறது . பீஷ்மர் போல அவனுக்கு மட்டும் என்ன வாழ்க்கை ? எனவும் நினைப்பு ஓடும் . எல்லார்க் கிட்டேயும் எமனும் பக்கத்திலே பாசக்கயிறுடன் தான் நிற்கிறான் . அகதி என்றால் அவனுக்கும் கூட சீப்பாய் போயிட்டுது இல்லை ?
அலைபேசியில்’ நிலையாமை’ பற்றிப் பேசும் ரவி “ஸ்பிரிங்கில் ஊசி போடாட்டியும் கூட இப்படி நடக்கிறது ” என்கிறான் . ஐம்பது வயசுக்குப் பிறகு அந்த (பெரி) அம்மை ஊசி எடுக்க வேண்டும் என்று கடிதம் மேல் கடிதம் வருகிறது . ஊரில் என்றால் ஊசியா எடுக்கிறார்கள்? கடைசியில்’ நீயும் விடை பெற்று விட்டாயா தோழனே ?’ மனம் கரைகிறது .
அவனுக்கு வசந்தன் நினைவுகளிலிருந்தும் வெளிய வர கனநாள் எடுக்கும் போல இருக்கிறது .
- அம்மாவின் கைகளுக்கு மூப்பில்லை.
- தீபாவளியில் இன்று
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள்
- 80களில் “தீபாவளி”எப்படி தான் இருந்தது….
- விடை பெற்று விட்டாயா, நண்பனே?
- பச்சாதாபம்
- உம்மாச்சி
- கணபலி -திருவையாற்று வேள்வியில் பிறந்த அகப்பெருங்கவிதை
- புருஷலட்சணம்.
- விளையும் பயிர் முளையிலே
- எண்ணம் மாறுபட என்ன காரணம்?
- வெற்றிடம்